பெரு நிறுவனங்கள் முதல் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் வரை ஊழியர்களின் நிலைமை மிக மோசம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நான் பணிபுரிந்த ‘ஹப்ஸ்பாட்’ எனும் மென்பொருள் நிறுவனத்தில், ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுவதைப் ‘பட்டம் பெறுதல்’ என்று அழைப்பார்கள். அணியினர் அனைவருக்கும் பாஸிடமிருந்து குதூகலமான மின்னஞ்சல் ஒன்று வரும். “அன்புள்ள அணியினருக்கு, நம்முடன் பணிபுரிந்த ‘இன்னார்’ பட்டம் பெற்றுவிட்டார் என்பதைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல்.
(“பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!” தொடர்ந்து வாசிக்க…)