சுந்தர் எனும் தோழனாய்

ஒரு வருசம் கடந்து போனது உன் நினைவில்.எப்படி இன்னும் நம்ப மறுக்கிறது மனம் ,கடந்து செல்லும் நினைவுகள் ,காலம் எனும் கடலில் நாம் கரைந்து போகும் என்பார்கள்.எல்லாம் நிஜமாய் எப்போதும் நம்முள். 1974 முதல் சந்திப்பு தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து ”ஈழ விடுதலை இயக்கம் ” (தமிழீழ விடுதலை இயக்கமல்ல) மகிழ்த்த நேரம்,சேனையூர் மகாவித்தியாலய ஆசிரியர் விடுதியில் ஆசிரியர் புலோலியூர் .தா.ஜெயவீரசிங்கம் அவர்களோடு அன்னலிங்க அய்யா,தங்க மகேந்திரன் அத்தோடு சுந்தரும்.ஈழவிடுதலை இயக்க பரப்புரைக்கு புறப்படுகிறோம் .சம்பூரில் தோடம் பழம்,கிளிவெட்டியில் தவகுமார்,கங்கு வேலியில் கிருபா,பட்டித்திடலில் கவிஞர் ,வீரப்பா,மல்லிகைத்தீவில் சுரேஸ்,பள்ளிகுடியிருப்பு,பச்சநூல் ,கூனித்தீவு ஈச்சலம்பத்தை, என கொட்டியாரத்தின் கிராமங்கள் தோறும் பலநூறு பேரின் அணி சேர்ப்பு.நடந்தே கழிகிறது எங்கள் பயணம் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் எங்களோடு இணைகின்றனர்.

(“சுந்தர் எனும் தோழனாய்” தொடர்ந்து வாசிக்க…)

லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”

லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”. அதனால், அவர் நல்லவர் என்று நாம் போலித் தமிழர் கட்சியினர் சொல்லித் திரிகின்றனர். சொந்த நாட்டு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சி நடத்திய லீகுவான்யூ, தமிழர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் நல்லவராகி விட்டாராம். சிங்கப்பூரில் மலே தேசியவாதிகளையும், சீனக் கம்யூனிஸ்டுகளையும் சிறையில் அடைத்து வருத்திய லீகுவான்யூ, நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராம்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய லீகுவான் யூ, அயலில் இருக்கும் அச்சே மக்களுக்கு ஆதரவாக பேசாத காரணம் என்ன? இந்தோனேசியாவின் அச்சே மாநிலம், சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கிறது. மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட அச்சே மக்கள், நீண்ட காலமாக தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அச்சே மாநிலத்தில், இந்தோனேசிய படையினர் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து, லீகுவான்யூ ஒரு வார்த்தை பேசி இருப்பாரா?

(“லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”” தொடர்ந்து வாசிக்க…)

விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!

“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்” என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ‘தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்’ என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது.

(“விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு டிவி நிகழ்ச்சி… ஒரே இரவில் ‘ஜோக்கர்’ ஆன ‘டொனால்ட் ட்ரம்ப்’!

அரசியல் – உலகின் பழமையான தொழில்; ஆனால் அதன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் உலகெங்கிலும் வேறுபட்டுத் தெரிந்தாலும், மனிதனின் அடைப்படை மனோபாவம் மாறுவதில்லை. வெகுஜனங்களைப் பொறுத்த வரையில் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வகுக்கப்படுகிறது. அவை முறையே, நாம் ஆளப்படவேண்டியவர்கள் என்பதும், நாம் ஆள வேண்டியவர்கள் என்பதுதான்.

(“ஒரு டிவி நிகழ்ச்சி… ஒரே இரவில் ‘ஜோக்கர்’ ஆன ‘டொனால்ட் ட்ரம்ப்’!” தொடர்ந்து வாசிக்க…)

சாதிவெறியும் புலிகளும்

இந்திய இராணுவ யுத்தம் முடிந்த பின் சில வசதி அற்ற ஏழைகள் இந்திய இராணுவம் ,இந்திய செஞ்சிலுவைச் சங்கம் வழங்கும் உணவுப்பொருட்களை வாங்கி வாழ்வைக் கழித்தனர்.இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை புலிகள் உணவு வாங்கி உண்ட ஒரே காரணத்துக்காக சுட்டுக் கொன்றனர். அளவெட்டியில் வடக்குப்பகுதி இந்திய உணவு வாங்கி உண்ண அனுமதிக்கப்பட்டனர்.தெற்குப் பகுதியில் அனுமதிக்கவில்லை .காரணம் சாதி ஒன்றே.
தெல்லிப்பழை மதி, நெல்லியடி சுக்லா இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை காரணமின்றி அடித்தனர்.பின்னாளில் இளம்பருதியும் சேர்ந்து கொண்டார்.

(“சாதிவெறியும் புலிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

எமது கிராம போராட்டத்தின் பின்

போராட்டத்தில், பலியான இரத்தினம் அவர்களுக்கு குழந்தை இல்லை.அவர் மனைவி இளம் வயதில் விதவையானார்.மீண்டும் மணம் முடிக்காமல் வெள்ளைப் புடவையுடன் விதவையாகவே வாழ்ந்தார்.அவரனது அண்ணனும் தங்கையுமே பக்க பலமாக இருந்தார்கள்.திடீரென விரக்தியுற்ற அவர் 1996 இல் தற்கொலை செய்துகொண்டார் .

(“எமது கிராம போராட்டத்தின் பின்” தொடர்ந்து வாசிக்க…)

அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”

(பனிமலரோன்)
பணம், செல்வாக்கு இருந்தாலும் இங்கிதமாகப் பழகுபவர்களை டவுன் டு எர்த் பெர்சனாலிட்டி என்பார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நடிகர் கலாபவன் மணி. பழசை மறக்காத பக்குவம் அவரிடம் கடைசிவரையில் இருந்தது என்பதற்கு அவர் இறந்ததும் சாலக்குடியில் திரண்ட மக்கள் கூட்டமே சான்று.  கலாபவன் மணி இருநூறு தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார். கேரள மாநிலம் தாண்டி, மதுரையில், கலாபவன் மணி ரசிகர்கள் மன்றம் இருக்கிறது. மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் போன்ற நகரங்களிலிருந்து ரசிகர்கள் கலாபவன் மணிக்கு இறுதி மரியாதை செய்வதற்காக சாலக்குடி வந்திருந்தது சாலக்குடி மக்களையும் மலையாளப் பட உலகையும் ஒருசேர நெகிழச் செய்தது.

எடுபிடி வேலையாளாக இருந்த மணி ஆட்டோ டிரைவராகி, மிமிக்கிரி கலைஞனாகி, பின் நடிகர் ஆனவர். கடைசி வரையில் மிமிக்கிரியை மூச்சாக சுவாசித்தவர். வறுமை காரணமாக, பதினெட்டு வயதிலும், மணி மிக ஒல்லியாக இருப்பார். மிமிக்கிரி பயிற்சிக்காக மணி, கொச்சியிலுள்ள ‘கலாபவன்’ பயிற்சி நிலையத்துக்கு வந்தார். தேர்வில், மணி ‘அழைப்பு மணி’யின் ஓசையை மிமிக்ரியில் உருவாக்கினார். அதில் ஈர்க்கப்பட்ட கலாபவன் பொறுப்பாளர், மணியை கலாபவனில் சேர்த்துக்கொண்டார்.

அன்று முதல், ‘கலாபவன் மணி’ ஆனார். நடனம், இசை, நாடகம், மிமிக்கிரி, பாட்டு போன்ற கலைகளைச் சொல்லித்தரும் நிறுவனம் கலாபவன். இயக்குநர்கள் சித்திக், ஹனிபா, நடிகர்கள் ஜெயராம், திலீப், பாடகிகள் சுஜாதா, ஜென்சி ஆகியோர் கலாபவனில் பயிற்சிபெற்றோரில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தொடக்கத்தில் மணிக்குச் சிறு சிறு காமெடி வேடங்கள்தான் கிடைத்தன. 1999-ல் வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் சாயல் கொண்ட ‘வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்’ படம் மணியின் நடிப்பில் புதிய பரிமாணத்தைச் சேர்த்தது. மாநில, தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளும் மணியைத் தேடி வந்தன. ஆனால் மணிக்குப் பிடித்த படம் ‘ஆகாசத்திலே பறவகள்’.

கலாபவன் மணி சமையலில் நளன். அஜித் மாதிரி, ஷூட்டிங் சமயத்தில் சமைத்து எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துவார். ஷூட்டிங் நடக்கும்போது, மணி தங்கும் அறையில் அவர் ஓட்டுநரும் உதவியாளரும் பெட்டில் படுத்து உறங்குவார்கள். அவரோ தரையில் பெட்ஷீட் விரித்துக் கிடப்பார். கேட்டால், “இவங்க வீட்டில் இத்தனை வசதி இருக்காது. இங்கேயாவது அனுபவிக்கட்டும்…” என்பார்.

மார்ச் 7 சிவராத்திரி அன்று மணியின் மிமிக்கிரி நிகழ்ச்சி சாலக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஏற்பாடாகியிருந்தது. வரவேற்பு பேனர்களை மாற்றி, “இனியொரு ஜன்மம் எடுத்து கலாபவன் மணியாகவே திரும்ப வாங்க… நாங்க இல்லாமல் போனாலும் எங்க வாரிசுகளைப் பாட்டால், மிமிக்கிரியால் சந்தோஷப்படுத்துங்க” என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட நெகிழ்ச்சியான அஞ்சலி இருக்குமா?
அதிகம் பாடல்கள் பாடி நடித்திருக்கும் பெருமையும், ‘த கார்டு’ (The Guard) முழுநீளத் திரைப் படத்தில் ஒற்றைக் கதாபாத்திரமாக நடித்த பெருமையும் மணிக்கு உண்டு. சில தொழில்நுட்பக் காரணங்களால் அது கின்னஸில் இடம்பெறவில்லை.

திக்கித் திக்கிப் பேசி ‘ராட்சஷ ராஜாவு’ படத்தில் வில்லனாக மிரட்ட, ‘ஜெமினி’ படத்தின் வில்லன் ஆனார். அதில் விலங்குகளின் உடல்மொழியில் மிரட்டினார். தொடர்ந்து, வில்லனாகத் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் ஒரு சுற்று வந்தார்.
மணியின் ‘உடல் மொழி’ அபாரமானது, அசாதாரணமானது. புருவம், கண், உதடுகள், மூக்கு, கன்னம், கை, கால் எல்லாமே நடிக்கும். கவர்ந்திழுக்கும் குரல் மாடுலேஷன் மணிக்குச் சொந்தம். பேச்சில் சாதுர்யம். டான்ஸிலும் அசத்துவார். நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில், மணிக்கு நிகர் மணிதான். “மேடை என்பது எனக்கு ‘ஓணப் பண்டிகை ஸத்யா’ (மதிய விருந்து) மாதிரி. திருப்தி வரும்வரை விட மாட்டேன். ரசிகர்களைத் திருப்திப்படுத்தாமல் மேடையை விட்டு இறங்கவும் மாட்டேன்” என்பார்.

மணி வீட்டிலிருந்தால், கொண்டாட்டம்தான். அதுவும் பழைய நண்பர்கள் வந்துவிட்டால், பொழுதுபோவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். நண்பர்கள் கிளம்பும்போது, அவர்கள் அன்று வேலை செய்திருந்தால் என்ன சம்பளம் கிடைத்திருக்குமோ அதைவிட இரண்டு மடங்கு கொடுத்து அனுப்புவார்.

ஒருமுறை, முன்பணம் கொடுக்க இயக்குநர் ஒருவர், மணியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரிடமிருந்து வாங்கிய முன்பணத்தை அப்படியே அங்கேயிருந்த ஒரு அம்மாவிடமும் இளம்பெண்ணிடமும் எண்ணிக்கூடப் பார்க்காமல் கொடுத்துவிட்டார் மணி. அந்த இளம் பெண்ணின் திருமணத்துக்கான உதவி அது. சாலக்குடியில், தன் தந்தை நினைவாக ஒரு நூலகம் கட்டியுள்ளார் மணி. பள்ளிகளுக்கும், அரசு மருத்துவமனை, காவல் நிலைய பராமரிப்புக்கும் கணிசமான தொகையையும் தந்திருக்கிறார் அவர்.

சாலக்குடி சாலைகளைச் செப்பனிடவும் விசால மனசு கொண்ட மணி மறக்கவில்லை. சொந்த ஆட்டோ, பைக், கார் ஆகியவற்றுக்கு எண் ‘100’ என்றுதான் வைத்திருந்தார். ஆனால் 45 வயதில் காலமாகிவிட்டார்.  கலாபவன் மணி இறந்ததும் மலையாள முன்னணி நடிகர்கள் பலர், அவரை ‘ஆஹா, ஓஹோ’ என்று பாராட்டி இரங்கல் தெரிவித்திருந்தார்கள். ஆனால். கலாபவன் மணியின் திறமையை அவர் உயிருடன் இருந்தபோது அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. “ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு மரணம் அவசியம்… அவன் மரணம் அடைந்த பிறகுதான் அங்கீகாரம் கிடைக்கும்… நான் இறந்த பிறகு, என் எதிரிகள்கூட என்னைப் பாராட்டுவார்கள்” என்று கலாபவன் மணி அடிக்கடி சொல்லி வந்தார். அது பலித்தேவிட்டது.

சிரிய அகதிகள்: அடுப்புக்கும் பானைக்கும் நடுவே

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அகதி வாழ்வின் அவலம் சொல்லி மாளாது. போரின் முதற்பலி, உண்மை. ஆனால், அதன் இறுதிப் பலி அகதி. வீடு திரும்ப இயலாது, அந்நிய மண்ணில் அலைதலே வாழ்க்கையாகி, நிச்சயமின்மையே நிச்சயமாகிவிடும் துயரத்தை யாரிடம் சொல்ல முடியும். அகதி என்ற அடையாளம் அனைத்தையும் அழித்துத் துடைத்துவிட்ட பின், வாழ்க்கை என்னவோ திரிசங்கு நிலைதான். சிரியாவிலும் சூழவும் ஏற்பட்டுள்ள போரும் பேரழிவும், பல இலட்சக்கணக்காணோரை அகதிகளாக்கியுள்ளன. மத்திய-கிழக்கு, வட-ஆபிரிக்க நாட்டவர்கள் தங்கள் உயிர்களைக் காப்பதற்காகச் சொந்த இடங்களிலிருந்து பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். அவர்களிற் பெரும்பாலோர் சிரியாவைச் சேர்ந்தவர்கள்.

(“சிரிய அகதிகள்: அடுப்புக்கும் பானைக்கும் நடுவே” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா?

(சாகரன்)
“….தொடர்ந்தும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா? அவர்கள் இலங்கை நாட்டுக்குரியவர்கள். அவர்கள் இலங்கைத் தமிழர்களாகக் கொள்ளப்படுதல் வேண்டும். அதற்கு வடகிழக்கு தமிழர்கள் என்ன கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிய ஆவலாக உள்ளேன்……” – அநுரகுமார திஸநாயக்க ( எதிர்கட்சி பிரதம கொறடா, தலைவர் JVP)

(“இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா?” தொடர்ந்து வாசிக்க…)

உலகில் தலைசிறந்த கல்வியில் ‪#‎பின்லாந்து‬ முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்

தொடங்குகிறது…

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை…

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை…

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்…

(“உலகில் தலைசிறந்த கல்வியில் ‪#‎பின்லாந்து‬ முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?” தொடர்ந்து வாசிக்க…)