சுவிஸ் நாட்டில் உருவாகும் புதிய சட்டம் தமிழர்களையும் பாதிக்குமா….?

சுவிட்சர்லாந்தில் நீண்ட காலமாக வாழும், வதிவிட அனுமதி பெற்ற தமிழர்களையும், பிற வெளிநாட்டவர்களையும், இலகுவாக நாடுகடத்துவதற்கான சட்டத் திருத்தம் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது. பெப் 28 நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், சட்டத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால், அது அங்கு வாழும் தமிழர்களையும் பாதிக்கும். இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வாழும் தவராஜா சண்முகம் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்:

(“சுவிஸ் நாட்டில் உருவாகும் புதிய சட்டம் தமிழர்களையும் பாதிக்குமா….?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!

வலிகாம கிணறுகளில் கழிவு எண்ணெய்! வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!

 

வலிகாமப் பகுதியின் கிணறுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலந்து, இரண்டு லட்சம் பேர்வரையானவர்கள் பல்வேறுபட்ட பாதிப்புக்களை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சரும், அமைச்சர் ஐங்கரநேசனும், காலத்திற்குக் காலம் பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளதுடன், ஒரு ”நிபுணர் குழு” இனையும் அமைத்து, அந்த நிபுணர் குழுவானது ஒரு அறிக்கையையும் அண்மைக் காலத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், கிணற்று நீரில் ஆபத்தான BTEX இல்லை எனவும், மலக் கழிவுகள், நைற்றேற்றும் தான் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது!

(“வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!” தொடர்ந்து வாசிக்க…)

நான் கம்யூனிஸ்ட் என்பதில் பெருமைபடுகின்றேன்

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நீங்கள் ஏறத்தாழ 72 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்தத் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?’’

(“நான் கம்யூனிஸ்ட் என்பதில் பெருமைபடுகின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 4)

இந்தப் போராட்டமானது பொது இடங்களில் சம உரிமைகோரி நடத்தப்பட்டது.தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகை தீர்க்க இல்லை.சாதிவெறியர்கள் பகை தீர்பதிலேயே குறியாக நின்றனர்.எமது கிராமங்களைச் சுற்றி பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர்.ஆனாலும் பங்குபெற முன்வரவில்லை.தார்மீக ரீதியாக பல பொருளாதார ஒத்துழைப்புகளை மானாவளை பகுதியினர் வழங்கினர்,.கொடிகாம்ம்,மிருசுவில்,வரணி, அல்லாரை, வேம்பிராய் போன்ற இடங்களில் அதிகமாக சிறுபான்மை தமிழர்கள் இருந்தும் ஆதரவளிக்க தயங்கினர்.இதேபோலவே சங்கானையிலும் நடந்தது.அங்கேயும் சங்கானை ஒரு பகுதியினர்,சண்டிலிப்பாய் போன்ற இடங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது.நிச்சாம்ம் மட்டும் தனியே களமாடியது.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

மனநோய்!?

உங்களுக்கு, நான் மனநோய் பாதிப்பிற்கு ஆளான கதை தெரியுமா? ஆளைப்பார்த்தாலே தெரிகிறது என்கிறீர்களா? இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்பது. எனக்கு மனநோய் என்றதும், அது பற்றி அறிய ஆவலாய் இருப்பீர்கள். ஆனால், அந்த விடயத்தை, இக்கட்டுரையின் கடைசியிற்தான் சொல்லப்போகிறேன். அதற்கு முன்பாக சில விஷயங்கள். உலகம் முழுவதும் இன்று இளையோரைப் பாதிக்கும் நோய்களில் முக்கியமானதாக, ‘டிப்பிறசன்’ என்று சொல்லப்படுகின்ற மனஅழுத்த நோய் பெருகி வருகிறது. ஒழுக்கயீனம், அன்பின்மை, பேரதிர்வு, பெரும்மனச்சுமை போன்ற பல காரணங்களால், இந்நோய் உருவாகுவதாக விஞ்ஞான உலகம் கூறுகிறது.

(“மனநோய்!?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3)

இரத்தினம் மீது கொண்ட அபிமானம் காரணமாகவே டானியல் பஞ்சமர் நாவலை மந்துவிலை வைத்து இரத்தினம் என்ற பாத்திரத்தை கொண்டுவந்தார்.அவர் பற்றிய சில தகவல்கள். இரத்தினம் மிக உயரமான திடகாத்திரமான மனிதர்.அவருடன் யாரும் சண்டை போட்டு வென்றதில்லை.எப்போதும் எதிரிகளுடன் சமாதானமாகவே பேசுவார்.யாருடனும் கும்பலாக தாக்குவதில்லை.அவருக்கும் பல சகாக்கள் இருந்தனர்.அவரகளை சண்டை போட அனுமதிப்பதில்லை.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்- களைகட்டும் அதிபர் தேர்தல்!

இந்த ஆண்டு உலகின் மொத்த கவனமும் இரண்டு நகரங்கள் மீதே இருக்கப் போகிறது. ஒன்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ. மற்றொன்று வாஷிங்டன். உலக அரசியலை ஆட்டுவிக்கப்போகும் வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் அடுத்த அதிபர் யார்? ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுக் கட்சியில் தான் சற்று போட்டி நிலவுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தொழிலதிபரும், முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டொனால்டு ட்ரம்பிற்கே அதிகம் உள்ளதாகக் கனிக்கப்பட்டுள்ளது.

(“ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்- களைகட்டும் அதிபர் தேர்தல்!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)

இந்தப் போராட்டத்தை அச்சுவேலியிலும் தொடங்க சிலர் முன் வந்தனர்.அங்கே பெரிய சமூகமாக பொருளாதார பலத்துடன் இருந்தாலும் போராட யாரும் முன் வரவில்லை .அங்கேயும் கோவியர் சமூகத்தைச் சேர்ந்த தவராசன் என்பவன் தலைமையில் சாதி வெறியர்கள் அணி திரண்டனர்.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)

(1968 களில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நடைபெற்ய தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் எமது சமூகத்தில் நடைபெற்ற போராட்டதில் மிக முக்கியமானது. இதன் பெரு வெடிப்புக்கள் அச்சுவேலிஇ சங்கானைஇ மாவிட்புரம்இ மந்துவில் போன்ற இடங்களில் ஏற்பட்டன. இதில் இரத்தினம். தவராசா என்ற இருவர் கொல்லப்பட்டனர். சீனக் கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்த போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்தனர் தமிரசுக் கட்சியினர் ஆதிக்க சாதியினர் பக்கம் பக்க பலமாக நின்றனர். இவர்கள் தமக்கு பக்க பலமாக தமிழ் பொலிசாரையும் வைத்திருந்தனர். இவை பற்றி கேட்டவற்றை அறிந்து அனுமானித்ததை விஜய பாஸ்கரன் என்பவர் தனது மொழி நடையில் எழுதுகின்றார். அவரால் பாவிக்கப்படும் சில சொற் பிரயோகங்களில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லையாகினும் அவர் சொல்ல வந்த விடயத்தில் உடன்பாடுகள் நிறையவே உள்ளன. இதனை ஒரு அவசியான வரலாற்று ஆவணப் பதிவாக பார்பதினால் இதனை வெளியிடுகினறோம் – ஆர்)

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!

உயர்திரு நீதியரசர் அவர்கட்கு! முதலமைச்சருக்கு என்று விளிக்காமல், பழைய ஞாபகத்தில் நீதியரசருக்கு என, நான் விளித்திருப்பதாய் நினைப்பீர்கள். அப்படியில்லாமல் தெரிந்தேதான் உங்களை, நீதியரசராய் விளித்தேன். காரணம், என்றும் நீங்கள் நீதியரசராகவே இருக்கவேண்டும் எனும், என் உள விருப்பே! அவ்விருப்புடனேயே இக்கடிதத்தை வரையத்தொடங்குகிறேன். அண்மைக்காலமாக உங்களை விமர்சித்து நான் எழுதியவற்றை வைத்து, என்னை உங்களின் பகைவனாய் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் நீங்கள் என் பகைவர் அல்லர். என் மனதில் உயர்ந்த ஒரு இடத்திலேயே, உங்களை இன்றும் நான் வைத்திருக்கிறேன். தாங்கள் உச்சநீதிமன்ற நீதியரசராய்ப் பதவி வகித்த காலத்தில், எந்தச் சமுதாய அமைப்பிலும் உறுப்பினராய் ஆக மறுத்து வந்தபோதும், என் கோரிக்கையை ஏற்று,எங்கள் கம்பன்கழகத்தின் பெருந்தலைவராய் செயலாற்ற முன்வந்தீர்கள். எங்கள் கழகத்தின் பெருந்தலைவர் பதவியில், தாங்கள் அமர்ந்ததால் நாங்கள் பெருமையுற்றோம்.

(“முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)