இலங்கையில், புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக, வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் இந்த கருத்தறிதல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்தே இக் கருத்தறியும் அமர்வுகளில் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சற்று அப்பால் சென்று, தமிழீழம் வேண்டும்- மாவீரர்களை அவர்களின் நினைவிடங்களில் நினைவுகூர அனுமதிக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு கருத்துக்களை கூறுமாறு கருத்தறியும் அமர்வுகளுக்குச் சென்ற மக்களை சில அரசியல்வாதிகள் தூண்டியதாகவும் தெரியவருகின்றது.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
வாசகர் கருத்து
அன்புள்ள சூத்திரம்,
மனநோயாளி மனேகணேசனின் அறிக்கையைப் போடுமளவுக்கு என்னய்யா உங்களுக்கு நடந்தது? முன்பு சூத்திரம் வாசிக்கக்கூடியதாக இருந்தது. இப்ப ஏன் இந்தப் போக்கு? புரியவில்லை. திரும்பவும் வாருங்கள் பட்டிக்கு.
– சந்திரன்
இது ஒரு வகை பத்திரிகா தந்திரோபாயம் மனோ கணேசனை அவரனின் அறிகை மூலமே அம்பலப்படுத்துவது. இது அவரின் கருத்தை ஏற்றுக் கொளவதாக அமையாது. சற்று ஆழமாகப் பார்த்ததால் புரியும் -ஆர்
மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!
இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். 2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.
(“மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!” தொடர்ந்து வாசிக்க…)
ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம்!
ஜேர்மனியில் ஹிட்லரும் இத்தாலியின் முசோலீனியும் இந்த உலகின் இரக்கமற்ற சர்வாதிகாரிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த இரண்டு சர்வாதிகாரிகள் தோன்றியதன் அரசியல் பின்னணி மட்டும் ஆராயப்படுவதில்லை. பெரும்பாலான சாமானியர்களிடமிருந்து இவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான போராட்டங்களும் தோன்றிய வரலாற்றை ஓரளவு அறிந்து வைத்திருக்கிறோம் ஆனால் அது தோன்றியதற்கான ஆழமான அரசியல் பின்னணி இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல்களையும் அதன் பின்புலத்தையும் அறியும் உரிமை மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
(“ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம்!” தொடர்ந்து வாசிக்க…)
சீகா வைரஸ்: விஞ்ஞான விபரீதம்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
விபரீதங்கள் நிகழ்வதற்கும் நிகழ்த்தப்படுவதற்கும் இடையிலான வேறுபாடு பெரிது. விபரீதங்கள் பெரும்பாலும் எதிர்பாராமால் திடீரென நிகழ்பவை. ஆனால், நிகழ்த்தப்படுகின்ற விபரீதங்கள் அவ்வாறல்ல. அவை மனிதர்களால் தெரிந்து திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவை. ஆனால், அதற்கும் அறிந்தும் அறியாமல் நிகழ்ந்தது போன்றதொரு தோற்றமயக்கம் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட விபரீதங்களும் நிகழ்ந்த விபரீதங்களாக அறிவிக்கப்படுகின்றன. இப்போது உலகின் கவனம் சீகா வைரஸை நோக்கியதாகத் திரும்பியிருக்கிறது. வடகிழக்கு பிரேசிலில் கடந்தாண்டு ஓகஸ்ட் முதல் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறக்கத் தொடங்கியதன் பின்னணியிலேயே சீகா வைரஸ் அறியப்பட்டது. இக்காலப்பகுதியில் அப்பகுதியில் பிறந்த 4,180 குழந்தைகள் சிறிய தலைகளுடனும் பிற குறைபாடுகளுடன் பிறந்தன. பின்னர் இவ்வைரஸ் பிறக்கும் குழந்தைகளை மட்டுமன்றிப் அனைவரையும் தாக்கக் கூடியது என அறியப்பட்டது. இப்போது உலகளாவிய ரீதியில் 17 இலட்சம் மக்கள் இவ்வைரஸின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
யார் யாரிடமெல்லாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்!
புலம்பெயர்ந்து வாழும் நம்நாட்டுக் கவிஞர் ஒருவரின் பேட்டியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு என்று வெளிநாடுகள் கொடுக்கும் உதவிகளை இலங்கை அரசு துஷ்பிரயோகம் செய்துவிடும் என்பதால், உதவிகள் எவையும் வழங்கப்படக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் அவர்.
அதிர்ச்சியாக இருக்கிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் வளமான பொருளாதார வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, இங்குள்ளவர்களுக்கு எந்த உதவிகளும் செய்ய வேண்டாம் என்று வெளிநாடுகளுக்குச் சொல்வதில் எந்தக் குற்றவுணர்ச்சியும் கவிஞருக்கு எழவில்லை. இங்குள்ள தமிழர்களுக்காகக் கவலைப்பட்டு, அரசியல்ரீதியாக ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவக் கருத்தைத் தான் சொல்வதாகவே அவர் கருதிக்கொள்கிறார். அவ்வாறு சொல்ல முடியும் என்றும் அவர் நினைக்கிறார்.
(“யார் யாரிடமெல்லாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்!” தொடர்ந்து வாசிக்க…)
தாயோடு கல்வி போயிற்று!
உங்களிடம் ஒரு கேள்வி ஒரு குடும்பத்தில் இன்னின்னார்க்கு இன்னின்ன பொறுப்பு என, வகுக்கத்தலைப்பட்ட நம் மூதாதையர்கள், தாய்க்கும், தந்தைக்கும். என்னென்ன பொறுப்புக்களை வகுத்திருக்கிறார்கள் என்று, உங்களுக்குத் தெரியுமா? ஏன் பிரச்சினை நானே சொல்லிவிடுகிறேன்! அவர்கள் வகுத்த முறையின்படி, பிள்ளைகளை உணவு முதலியவற்றால் காக்கும் பொறுப்பு தாய்க்குரியது. அறிவு தந்து காக்கும் பொறுப்பு தந்தைக்குரியது. இதனைத்தான், ‘தந்தையோடு கல்விபோம். தாயோடு அறுசுவை உண்டி போம்’ என்றும், ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றும், நம் தமிழ் இலக்கியங்கள் பேசின. இங்ஙனம் வகுத்தது ஏன் என்கிறீர்களா? சொல்கிறேன்.
சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்?
இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், பல்வேறு விதமான சுவாரசியமான விடயங்களைத் தந்துள்ளது, இனியும் தொடர்ந்து தரவுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முன்னைய காலங்களை விட, மாபெரும் மாற்றமொன்றை, அந்த அரசியல் களம் கொண்டிருக்கிறது. கட்சிகளின் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக இடம்பெற்று, நேற்று முடிவுகள் வெளிவந்த நியூ ஹம்ப்ஷையர் முதன்மைத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பேர்ணி சான்டர்ஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிகள், ஓரளவு எதிர்பார்க்கப்பட்டவை தான் என்றாலும், இவர்களிருவருக்கும் முக்கியமான வெற்றிகளாக அமைந்துள்ளன.
(“சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்?” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கை தேசிய இனங்களினதும் சமூகங்களினதும் இணை சம்மேளனமாக அமைய வேண்டும் – சமூக சீராக்கல் இயக்கம்
சிங்களவர், இலங்கை தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர் ஆகிய தேசிய இனங்களினதும் பரங்கியர், மலேயர், ஆதிவாசிகள் சமூகங்களின் இணை- சம்மேளனமாக இலங்கை அமைய வேண்டும் என சமூக சீராக்கல் இயக்கம் புதிய அரசமைப்பு தொடர்பாக யோசனைகளை முன்வைப்பதற்காக நடாத்திய கலந்துரையாடலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியவம்சாவளி தமிழர்களாக தற்போது அரச ஆவணங்களில் அடையாளப்படுத்தப்படும் வரும் மலையக மக்களை, மலையக மக்கள் என அரசப்பினூடாக அங்கீகரிப்பதே அவர்களை தேசிய இனமாக அங்கீகரிப்பற்கு ஏற்ற அடையாளம் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் சிவில் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை மிகவும் விரிவாக உள்ளடக்கி உறுதி செய்யும் அதேவேளை, அவற்றை அனுபவிக்க எவ்வித மட்டுபாடுகளும் இருத்தலாகாது என்றும், அத்தோடு அடிப்படை உரிமைகள் மீறும் போது அதற்கான நிவாரண ஏற்பாடுகள் தனி அத்தியாயமாக அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் எற்றுக் கொள்ளப்பட்டது. அடிப்படை உரிமைக்கான நீதிமன்ற நிவாரணங்கள் மக்களுக்கு இலகுவில் அணுகும் விதத்தில் அரசமைப்பில் ஏற்பாடு இருக்க வேண்டும் எனவும் அடிப்படை உரிமைகளை விசாரிக்க மாவட்ட ரீதியில் விசேட நீதிமன்ற கட்டமைப்பை ஏற்படுத்தல், மனித உரிமைகள் ஆணைக்குழுவை மக்களுக்கு இலகுவில் அணுகும் விதத்தில் மீளமைத்து அது சட்ட அங்கீகாரம் பெற்ற கட்டளைகளை வழங்கும் அமைப்பாக மாற்றுதல் மற்றும் ஒப்புட்ஸ்மனுக்கு அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பாக கட்டளை வழங்க அரசமைப்பில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மிக எளிமையாக வாழ்ந்த உலகின் ஏழை ஜனாதிபதிக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிய உருகுவே மக்கள்
மிகவும் ஏழை ஜனாதிபதி என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்த வரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள்தான் ஏழைகள். ஜனாதிபதி என்றாலே… நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.