பரிசம்’ போட்டுச் சென்றுள்ள சுஷ்மா!!!

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்;, கொழும்புக்கு வந்து முக்கியமான சில பேச்சுக்களில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக தோற்றம்பெற்றபோதும் அதன் அதன் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோதும்கூட, எந்த அசுமாத்தமும் காட்டாமல் இலங்கையின் நகர்வுகளை மதிப்பிட்டுக்கொண்டிருந்த இந்தியா, முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கடந்த தடவை ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்திக்க கிடைத்த பரந்த வாய்ப்பு போல அல்லாமல், குறுகிய சந்திப்பாக இருந்தாலும்கூட கிடைக்கப்பெற்ற நேரத்தில் முக்கியமான விடயங்களை பேசியுள்ளார்கள் என்று அறியவருகிறது.

(“பரிசம்’ போட்டுச் சென்றுள்ள சுஷ்மா!!!” தொடர்ந்து வாசிக்க…)

சோவியத் யூனியனின் பௌத்த மதக் குடியரசு தன்னு துவா! எங்கே இருக்கிறது?

 

ஆசியாக் கண்டத்தில், ரஷ்யா, மொங்கோலியா நாடுகளுக்கு நடுவில் உள்ளது. 1920 முதல் 1944 வரையில் சுதந்திரமான தனி நாடாக இருந்தது. துவா மொழி பேசும் சைபீரிய பூர்வகுடிகளை பெரும்பான்மையாகக் கொண்டது. அவர்கள் திபெத்திய- பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.

தன்னு மலைப் பிராந்தியத்தின் பழங்குடிகளான துவா மக்கள், ஒரு நாடோடி இனமாக வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாக, சீனா, மஞ்சு, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களால் மாறி மாறி ஆளப்பட்டு வந்தது. 1917 ரஷ்யப் புரட்சியை அடுத்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷெவிக் செம் படைகள், சார் மன்னனுக்கு விசுவாசமான படைகளிடம் இருந்து அந்த நாட்டைக் கைப்பற்றின. லெனினின் நேரடி பணிப்பின் பெயரில், தன்னு துவா ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப் பட்டது. சோவியத்யூனியனும், மொங்கோலியாவும் ஒரு உடன்படிக்கையின் பிரகாரம் சுதந்திரத்தை அங்கீகரித்தன.

தன்னு துவா ஜனாதிபதி, பௌத்த மதத்திற்கு முக்கிய இடம் கொடுத்து, மொங்கோலியாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். பௌத்த- துவா தேசியத்தை வளர்த்து வந்தார். அதனால் அதிருப்தியுற்ற துவா கம்யூனிஸ்டுகளின் இரகசிய அமைப்பொன்று, அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நாட்டின் பெயர் “தன்னு துவா மக்கள் குடியரசு” என்று மாற்றப் பட்டது. நாடோடி சமூக அமைப்பு முடிவுக்கு வந்தது. கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன.

இரண்டாம் உலகப் போரில், தன்னு துவா அரசு சோவியத் யூனியனுக்கு தன்னாலியன்ற சிறியளவு பங்களிப்பை செய்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர், தன்னு துவா ரஷ்யாவின் ஒரு பகுதியாகியது. 1992 வரையில், அது ரஷ்யாவுக்குள் அடங்கிய சுயாட்சிப் பிரதேசமாக இருந்தது. இன்று அது ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருக்கிறது.

(Tharmalingam Kalaiyarasan)

குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.

ஊருக்குப்போனாய் ஒன்றுமே சொல்லவில்லையே என்று அங்கலாய்ப்பவர்களுக்கு “என்னத்தைச் சொல்வது ?” என்பதைத் தவிர வேறு எதைச் சொல்லமுடியும். வாய்திறந்தால் வம்பை விலைக்குவாங்குவது உனக்கு இடப்பட்சாபம் என்று சின்ன வயதில் யாரோ சொன்னதும் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது.

(“குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.” தொடர்ந்து வாசிக்க…)

மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரங்காடிகளின் வருகை, அர்த்தம் பொதிந்தது. வருகையின் காலமும் களமும் அவர்களதும் அரங்கினதும் முக்கியத்தை உணர்த்த வல்லன. அரங்கில் நுழையும் எல்லோருமே அரங்காடிகள்தான் எனினும் சிலரின் வரவு பிறரினதை விட முக்கியமானது. மத்திய கிழக்கு நிலைமைகளை அமைதியாக அவதானித்திருந்த சீனா, இப்போது மத்திய கிழக்கு அலுவல்களிற் செல்வாக்குடைய சக்தியாகியிருப்பது தற்செயலல்ல. எனினும், ஏலவே சிக்கலடைந்த சிரிய நெருக்கடியிற் சீனாவின் ஆர்வம் வியப்பூட்டியுள்ளது. சீனாவைப் பொறுத்த வரை, ஒரு வணிகக் கூட்டாளியாகச் சிரியாவின் முக்கியத்துவம் குறைவு. கடந்தாண்டின் இறுதி நாட்களில் சிரிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயம் மிகப் பேசப்பட்டது. அதையடுத்த சிரிய எதிர்க் கட்சிக் கூட்டணியினரின் சீன விஜயம், சிரியா பற்றிச் சீனாவின் வெளிப்படையான அக்கறையை எடுத்துக் காட்டியது. இவ்விரு விஜயங்களும் சிரிய நெருக்கடிக்குத் தீர்வு தேடும் சீன முனைப்பைக் குறிகாட்டின.

(“மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!

தமிழீழ விடுதலை போராட்டவாரலாற்றில்,விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ‘ஒட்டுக்குழுக்கள்’. இதை ஆங்கிலத்தில் Paramilitary எனகூறுவார்கள். இதனது வரவிலக்கணம் அல்லது அதன் பொருளை ஆராயுமிடத்து சில சங்கடமான விடயங்கள் வெளியாகின்றன. அவற்றை வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமுமில்லை. ஆகையால் அதனது விளக்கத்தை மிகவும் சுருக்கமாக தருகிறேன். ஓட்டு குழுக்கள் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அடிப்படை தந்துவங்களுக்கு அப்பால் சுயகௌரவம் அற்று,சந்தர்ப்பவாத வாழ்க்கை நடந்துபவர்கள் என வரவிலக்கணம் சுட்டி காட்டுகிறது. இவர்கள் பணம், பதவி, ஆசை, காமம் ஆகியவற்றிற்கு அடிமையானர்வர்களென அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

(“விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!

 

யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயத்தின் பல பாடசாலைகளில் மாணவர்களை கொண்டு கையால் எந்தவித பாதுகாப்பு கை உறைகளும் போடாமல் மலசலகூடங்களை கழுவுவிக்கும் அவலம் நடைபெறுகிறது. யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயக்கல்விப் பணிப்பாளரின் பொறுப்பற்ற தலைமைத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. சிறுவர் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்ற இக்கால கட்டத்தில் படித்த மேதைகள் அதிகமாக உள்ள வடமராட்சி பகுதிகளில் மாணவர்களை கொண்டு பாடசாலை கழிவறைகளை துப்பரவு செய்வது கவலைப்பட வேண்டிய செயல்.

(“மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!” தொடர்ந்து வாசிக்க…)

மெல்லென பாயும்நீர் கல்லும் உருகப்பாயும்!

சர்ச்சைக்குரிய விடயமொன்று நீண்ட கால தவிர்ப்பு, இழுபறி, விமர்சனம், கண்டனத்துக்கு அப்பால், இலங்கையின் 68 வது சுதந்திரதின வைபவத்தில் அரங்கேறியுள்ளது. நாட்டின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில், நீண்டகாலமாக தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டு வந்த நிலையில், இம்முறை தமிழிலும் பாடப்பட்டமை சம்மந்தரின் முதுமையா? அல்லது மைத்திரியின் அனுபவமா? அல்லது இரண்டுமா?. காரணம் முதுமை, அனுபவம் இரண்டுமே அழிவை தடுக்கும். ஆக்கத்தை ஊக்கிவிக்கும். பொறுமையை இயலாமை என எதிரி எண்ணிவிடக்கூடாது என்பதை, ஆங்கிலேயருக்கு உணர்த்தியவர் அண்ணல் காந்தி. ஹிம்சைக்கு எதிராக அவர் வரித்துக்கொண்ட அகிம்சை கொள்கை, ஆரம்பத்தில் அழிவுகளை தந்த போதும் இறுதியல் இந்தியாவுக்கு விடுதலை பெற்று கொடுத்தது.

(“மெல்லென பாயும்நீர் கல்லும் உருகப்பாயும்!” தொடர்ந்து வாசிக்க…)

மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே..!

தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பிரதான மூன்று கட்சிகளினூடாக போராடியிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ,குறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும், மக்களின் ஆதரவு பெற்றதும் தமிழ் மக்களின் சுயநிர்ணம் பற்றிய அரசியல் விடயங்களில் நேரடிக் களம் இறங்கிக் கொண்டிருப்பதும் தமிழ் கூட்டமைப்பேயாகும். தந்தை செல்வா தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளைக் கோரி அஹிம்சை வழிப் பயணம் மேற்கொண்டார். போராட்டங்கள் எல்லாம் உடனடியாக பயன் தராது போனாலும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய நடவடிக்கைகளை அவர் மரணிக்கும் வரைக்கும் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் முன்னெடுத்து வந்தார்.

(“மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே..!” தொடர்ந்து வாசிக்க…)

அறுவடைக் காலம்?

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோஷித ராஜபக்ஷ, சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்திய புகைப்படமொன்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நெருப்பாகப் பரவியது. அந்தப் புகைப்படத்துக்கு சாதாரண பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் விதைத்து வைத்தார் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.

(“அறுவடைக் காலம்?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில்!!!

கடந்த ஞாயிறன்று இலங்கை அரசின் நீர்ப்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் சுன்னாகம் அனல் மின்னிலையத்தைச் சூழ இரண்டு கிலோ மீட்டர் பகுதியளவில் நீர் நச்சாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அந்த நீரை அருந்த முடியாது எனவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதன் மறுபக்கத்தில் நீர் நஞ்சாக்கப்பட்டமைக்கான தீர்வு இரணை மடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரும் திட்டமே எனக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நீர் மட்டும் நஞ்சாகவில்லை விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்களும் பச்சை மரங்களும் பட்டுப்போகின்றன.

(“வட மாகண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில்!!!” தொடர்ந்து வாசிக்க…)