ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..

(இது ஒரு முகப்பு புத்தகத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு)

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PFLP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்தPFLP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.

(“ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..” தொடர்ந்து வாசிக்க…)

தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!

வடமாகாண முதல்வரை வாராதுவந்த மாமணி, எங்கள் பிரம்மா என்றெல்லாம் எழுதி அவரை பேரவைக்கு இணைத்தலைவராக்கி, தமக்கு பெருமை சேர்த்தவர் தரும் வஞ்சக புகழ்ச்சியால் ஏற்பட்ட மயக்கமா? இல்லை சங்கூதுபவர் சொல்வது கீதை என்ற தடுமாற்றமா? என எண்ணும் அளவிற்கு அண்மையில் வரும் ஆசிரியர் தலையங்கங்கள், சமூகங்களிடையே ஏற்படுத்த கூடிய வேண்டத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கும்படி, புருசொத்தமனுக்கு புத்திசொல்ல முதல்வர் காட்டும் “அருவருக்கத்தக்க மௌனம்” என்னை விசனப்பட வைக்கிறது. முதலில் தனி நபர்களை தாக்க தொடங்கியவர், தன் பிரதேச வாதத்தை கொழும்பில் ஆரம்பித்தார். விலை போன கொழும்பு தலைமை என சுமந்திரனை சாடினார். பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்தினால், விருந்துகளில் கலந்து கொண்டால் அவர்களை விலை போனவர்கள் என்று வரையறுத்தால், இன்று இருக்கும் எந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, உறுப்பினர்களும் விலை போனவர்கள் என்று தான் தலையங்கம் எழுதவேண்டும். ஏனென்றால் புலிகள் காலத்தில் அனைவரும் இருந்தது தெற்கில், அரச வசதி மற்றும் பாதுகாப்பில்.

(“தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!” தொடர்ந்து வாசிக்க…)

நிலாவரை கிணறு !

 

நிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா? பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக்கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? நிலாவரையின் வரலாற்றை அறிய தொடர்ந்து படியுங்கள். புத்தூர் – சுன்னாகம் இணைப்பு வீதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இராசவீதியும் சந்திக்கும் இடத்தில் சிவன் கோவில் ஒன்றும் அதன் அருகில் ஆழக் கிணறொன்றும் உள்ளன. இந்தச் சிவன் கோவில்தான் தட்சிண கைலாய புராணத்தில் சொல்லப் பட்ட நவசைலேஸ்வரம் எனப்பலர் நம்புகின்றனர். அந்தக் கிணறுதான் நிலாவரைக்கிணறு.

ஈழத்தில் சிவ வழிபாட்டின் தொன்மையைப் பறைசாற்றக் கூடிய தலங்கள் பல உள்ளன. போர்த்துக்கேயரது படையெடுப்பின்போது சிவத்தலங்கள் எல்லாம் முற்றாக அழிக்கப்பட்டன. நவசைலேஸ்வரம் என்ற சிவத்தலத்திற்கும் இக்கதி நேர்ந்தது. ஆயினும் தட்சண கைலாய புராணத்தில் குறிப்பிடப்படும் நவசைலேஸ்வரம் புத்தூர் சிறீ சோமாசுகந்தக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சிவன் கோவில்தான் என அக்கோவில் சார்ந்தவர்கள் குரல் எழுப்புகின்றனர். அக்கோவிலுக்கும் நிலாவரை நீர்நிலையே தீர்த்தக் கேணியாக விளங்கியிருக்கிறது. (பின்னர் புத்தூர் மழவராயர் காலத்தில் ஆலயத்தில் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது).

நிலாவரைக் கிணற்றுக்கு பக்கத்தில் உள்ள சிறிய சிவன் கோவிலுக்கு அருகிலும் புராதன நவசைலேஸ்வரம் இருந்தமைக்கான சில எச்சங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புராதனச் சிறப்புக்கள் இந்த ஆலயத்திற்கு இருந்தாலும் ஆலயம் பற்றிய போதிய விழிப்புணர்வை இப்பிரதேச மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் எனக் கருத முடியாதுள்ளது. தற்போதும் மடாலயமாகவே விளங்கும் இக்கோவிலில் 1948 இல் தான் சிவலிங்கத் தாபனம் இடம்பெற்றது. எதிர்பாராத விதமாக ஆலயத்தின் உள் கிணற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்றனர். இது பண்டைக்கால நவசைலேஸ்வரத்துக்குரிய சிவலிங்கமென நம்பப்படுகின்றது. போர்த்துக்கேயர் நவசைலேஸ்வரத்தை அழித்தபோது, அங்கிருந்த விக்கிரகங்களை சிலர் பாதுகாப்பாக இந்தக்கிணற்றில் போட்டதாக கர்ணபரம்பரையாக கதைகள் உள்ளன. கிணற்றில் இருந்து பெற்ற சிவலிங்கத்தை அக்காலத்தில் ஆலயப் பூசகராக விளங்கிய வேலுப்பிள்ளை சுப்பையா ஆலயத்தில் நிறுவிப் பூசை வழிபாடுகளை ஆற்றத் தொடங்கினார்.

இன்று அர்ச்சகர் ஒருவரால் நித்திய பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தின் நேர்முன்னாகத் தீர்த்தமாடுவதற்கு வசதியாக நிலாவரைக் கிணற்றில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டும் உள்ளன. நிலாவரையின் மேற்குப் புறமாக உள்ளது நவக்கிரிக் கிராமம். நிலவரை என்பதே நிலாவரை ஆகியிருக்கலாம். (வரை – மலை). நவக்கிரி என்பதும் ஒன்பது மலைகள் என்ற பொருளைத் தருகின்றது. நவசைலேஸ்வரம் என்ற பெயரின் பொருளும் அதுவே. (சைலம் – மலை) இப்பகுதி நிலங்களின் கீழ்க் கடுமையான கற்பாறைகள் உள்ளன. இதனால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இல்லையேல் கீரிமலை என்ற பெயர்க் காரணத்திற்குக் கூறப்படும் விளக்கம் போல என்றோ ஒரு நாள் இப்பகுதியில் குன்றுகள் இருந்திருக்கலாம்.

நிலாவரை தொடர்பாக நிலவும் கர்ண பரம்பரைக் கதையும் சுவையானது. இராமாயணக் கதைத் தலைவனான இராமபிரான் இராவணனுடன் போர் புரிவதற்காக இலங்கை வந்தபோது தனது வானரப் படையினரின் நன்னீர்த் தாகத்தைப் போக்குவதற்காக அம்பை ஊன்றி நீர் எடுத்த இடமே நிலாவரை என்கின்றனர். நிலாவரை மாத்திரமன்றி இன்னும் இதுபோன்ற வற்றாத கிணறுகள் பல குடாநாட்டில் காணப்படுகின்றன. ஊரெழுவில் பொக்கணைக் கிணறு, மானிப்பாயில் இடிகுண்டுக் கிணறு, கரவெட்டியில் அத்துளுக் கிணறு, குரும்பசிட்டியில் பேய்க்கிணறு என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான கிணறுகள் பற்றிப் புவியியலாளர்கள் சொல்லும் விளக்கமும் சுவாரசியமானது. யாழ்க் குடாநாடு மயோசீன் காலச் சுண்ணக் கற்களாலானது. நீரைக் கசியவிடும் தன்மை இக்கற்களுக்கு உண்டு. மழைநீர் உட்கசிந்து வன்மையான பாறைகளில் தரைக்கீழ் நீராக இருக்கின்றது. மழைநீர் வளியூடாகப் பெய்யும்போது வளியில் உள்ள காபனீரொட்சைட்டுடன் கலக்கின்றது. அதனால் அம்மழைநீர் காபோனிக்கமிலமாக மாறுகின்றது. சுண்ணக் கற்களில் உள்ள கல்சியம் காபனேற்றும் காபோனிக்கமிலமும் சேர்ந்துகொள்வதால் கல் கரையும் வாய்ப்பைப் பெறுகின்றது. இதன் காரணமாகச் சுண்ணக் கற்பாறைகளைக் கரைத்து நீர் உட்செல்கின்றது. பாறைகள் கரையும் போது பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பெருமளவு நீர் தேங்கி நிற்க அவையே வற்றாக் கிணறுகள் ஆகின்றன.

தற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. நிலமட்டத்தில் இருந்து 14 அடி ஆழத்தில் நீர் காணப்படுகின்றது. இந்நீர்நிலை தொடர்பாக பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானியா, யேர்மனி, செக் குடியரசு இப்படியான நாடுகளில் இருந்து வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இதன் ஆழம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் ஆழம் 382 அடியைவிட அதிகமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரையும் உவர் தன்மையானதாகவுள்ளது. அதன்கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்புபட்டுள்ளது. இந்த நீர்நிலை தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் பராமரிக்கப்படுகின்றது.

இவ்வாறு நீரோட்டத் தொடர்பு இருப்பதால் மழை காலங்களில் நீர் அதிகரிப்பதுமில்லை. கோடைகாலங்களில் நீர்வற்றுவதுமில்லை. என்றும் சம நிலை தளம்பாத அருங்குணத்துடன் நிலாவரைக் கிணறு காணப்படுகின்றது. நிலாவரை நன்னீர் வளத்தை குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் முயற்சிகள் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டன. கிணற்றின் தெற்குப் புறமாக உள்ள சிறுப்பிட்டி மற்றும் மேற்குப் புறமாக உள்ள அச்செழு, ஈவினைக் கிராம விவசாயிகள் இக்கிணற்றில் இருந்து நன்னீர் வளத்தைப் பெற்று விவசாய முயற்சியில் ஈடுபட்டனர். இப்பிரதேசங்களில் இந்நீரை ஆதாரமாகக் கொண்டு வாழை, நெற் பயிர்ச் செய்கைகள் சிறப்பாக இடம்பெற்றன. 1990 கள் வரை இவ்வாறான நீர்ப்பாசனங்கள் இடம்பெற்றுள்ளன. 1950 களின் பின் டீசல் இயந்திரங்கள் மூலமும் மின்சாரம் மூலமும் நீரை இறைத்தனர். இங்கு நீர் விநியோகம் இடம்பெற்றமைக்கான சுவடுகள் இன்றும் உள்ளன. முறையான நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிலாவரைக் கிணற்றில் இருந்து இதனை அண்டிய பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனத்தைச் சீராக மேற்கொள்ள முடியும்.

கிராமம்!…..

‘உலகமயமாக்கல்’ – இது இன்று அனைவர் வாயிலும் அதிகமாய்ப் புரளும் தொடராகிவிட்டது. எரிமலை வெடிப்பு, சுனாமி, ஒலிம்பிக் என, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும், இன்று அறையில் இருந்தபடி எம்மாற் பார்க்க முடிகிறது. விரிந்து கிடந்த உலகம் நம் கைக்குள் வந்துவிட்டாற்போல் தெரிகிறது. விஞ்ஞானத்தின் விரிவால், உலகம் ஒரு கிராமமாய் ஆகிவிட்டதாய்ச் சொல்கிறார்கள். ஆனால், அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கிராமம் என்ற சொற்பிரயோகம், சிறிய இடப்பரப்பு எனும் அர்த்தத்தை மட்டும் கொண்டதல்ல. கூடிவாழ்தல், அக்கறை, நேசிப்பு, என பல விடயங்களையும், அச்சொல் உட்கொண்டு நிற்கிறது. இன்று உலகத்தைக் கிராமம் என்கிறவர்கள் பாவிக்கும், கிராமம் எனும் சொற்றொடருக்குள், மேற்பொருள்கள் அடங்கியிருப்பதில்லை.

(“கிராமம்!…..” தொடர்ந்து வாசிக்க…)

மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே!

தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பிரதான மூன்று கட்சிகளினூடாக போராடியிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ,குறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும், மக்களின் ஆதரவு பெற்றதும் தமிழ் மக்களின் சுயநிர்ணம் பற்றிய அரசியல் விடயங்களில் நேரடிக் களம் இறங்கிக் கொண்டிருப்பதும் தமிழ் கூட்டமைப்பேயாகும்.

(“மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே!” தொடர்ந்து வாசிக்க…)

கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?

யாழ் தீபகற்பத்தின் பிரதான வீதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது கொடிகாமம் பருத்தித்துறை வீதி. AB31 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீதி வடமராட்சியின் மந்திகையிலிருந்து முள்ளிவெளி, வரணி ஊடாக கொடிகாமம் வரை நீள்கின்றது. வடமராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – மந்திகையிலிருந்து பருத்தித்துறை வரை யாழ் – பருத்தித்துறை வீதியும் (AB20), தென்மராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – கொடிகாமத்திலிருந்து கச்சாய் (B68) வீதியும் அமைந்துள்ளன. அதாவது முன்னர் யாழின் துறைமுகங்களாக விளங்கிய பருத்தித்துறை மற்றும் கச்சாய் துறைமுகங்களை இணைக்கின்றது இந்த வீதி.

(“கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பட்டையை கிளப்பும் பிழாச் சோறு

 

முக்கியமான விசேஷங்கள் மற்றும் பிக்னிக் போன்றவற்றில் பனை ஓலையை மடித்து அதில் உணவை இட்டு உண்பார்கள், நிஜமாலுமே (பனை) பிழாவில் உண்ணும் போது அதன் சுவையே தனி தான். அந்த சுவையை ருசித்தவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் என்றும் மறக்க முடியாததாகும்…!.ஒருகாலத்தில் ஆதிக்கசாதியினர் இவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கூறப்படவர்களுக்கு தமது வீட்டுப்பாத்திரத்தில் உணவு வழங்கினால் ‘தீட்டு’ என்று கருதி அவர்களுக்கு இந்த ‘அட்சய’ பாத்திரத்தில்தான் சோறு கொடுத்தனர் என்ற வடுகள் நிறைந்த வரலாற்றையும் இந்த ‘பிழா’ அல்லது ‘தட்டுவம்’ கொண்டிருந்தது. தட்டுவதில் நீர் ஒழுகும் ஆனால் பிழாவில் நீர் ஒழுகாது. பிழாவில் அனேகமாக கள்ளு பரிமாறுவர். தண்ணீரைக் கிணற்றில் இருந்து அள்ளுவதற்கு வாளியிற்கு பதிலாக பனை ஓலையில் இழைத்துச் செய்யப்படுவது பட்டை இந்தப் பட்டையும், பிழாவும் எமது வாழ்வில் பின்னிப் பிணைந்த இனி பாத்திரங்கள்

(குடாநாட்டான்)

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே!…நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்!

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதற என் கண்ணீரை மறைத்தபடி நான் புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட, அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும், என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது!

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை, என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு!

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…உறவுகள் இதுதானென்று!

(குடாநாட்டான்)

தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!

சும்மா சொல்லக்கூடாது கண்டியளளே! அப்பாவி மக்களின்ட வயித்தில அடிச்சமாதிரி, புக்கையிலயும் அடிச்சாங்களே ஒரு அடி, ஒவ்வொரு சோத்துப் பருக்கையும் சுழண்டு சுழண்டு எகிறிப் பாய்ஞ்சுது. புக்கையிலை சக்கரை இல்லாட்டிலும் துட்டு இருக்கும் என்று கண்டுபிடிச்சு இந்த நூற்றாண்டின் பொருளாதார மாமேதைகள் பட்டத்தைத் தட்டிக்கொண்டவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC). அதுதான் போன முறை நான் சொன்ன தமிழர் சேர்கஸ் கொம்பனி!. வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரித்தான் பொங்கலுக்குள் ரீசீசீ புகுந்தால் எப்பிடி இருக்கும் என்பதற்கு பிரான்சில் நடந்த பொங்கல் நல்ல உதாரணம்.

(“தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!” தொடர்ந்து வாசிக்க…)

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்

இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றியுள்ளார். திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடினார். கனடாவின் டொரேண்டோவில் வசித்து பார்த்திபன் மனோகரன் என்பவர் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த போது கேப்டன் பதியை பேட்டி கண்டார். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் பணியாற்றிய முதல் இலங்கை தமிழர் உட்பட அவர் மேற்கொண்ட சகாகசங்கள், தனது வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தவை பற்றி அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

(“இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்” தொடர்ந்து வாசிக்க…)