கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?

யாழ் தீபகற்பத்தின் பிரதான வீதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது கொடிகாமம் பருத்தித்துறை வீதி. AB31 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீதி வடமராட்சியின் மந்திகையிலிருந்து முள்ளிவெளி, வரணி ஊடாக கொடிகாமம் வரை நீள்கின்றது. வடமராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – மந்திகையிலிருந்து பருத்தித்துறை வரை யாழ் – பருத்தித்துறை வீதியும் (AB20), தென்மராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – கொடிகாமத்திலிருந்து கச்சாய் (B68) வீதியும் அமைந்துள்ளன. அதாவது முன்னர் யாழின் துறைமுகங்களாக விளங்கிய பருத்தித்துறை மற்றும் கச்சாய் துறைமுகங்களை இணைக்கின்றது இந்த வீதி.

(“கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பட்டையை கிளப்பும் பிழாச் சோறு

 

முக்கியமான விசேஷங்கள் மற்றும் பிக்னிக் போன்றவற்றில் பனை ஓலையை மடித்து அதில் உணவை இட்டு உண்பார்கள், நிஜமாலுமே (பனை) பிழாவில் உண்ணும் போது அதன் சுவையே தனி தான். அந்த சுவையை ருசித்தவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் என்றும் மறக்க முடியாததாகும்…!.ஒருகாலத்தில் ஆதிக்கசாதியினர் இவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கூறப்படவர்களுக்கு தமது வீட்டுப்பாத்திரத்தில் உணவு வழங்கினால் ‘தீட்டு’ என்று கருதி அவர்களுக்கு இந்த ‘அட்சய’ பாத்திரத்தில்தான் சோறு கொடுத்தனர் என்ற வடுகள் நிறைந்த வரலாற்றையும் இந்த ‘பிழா’ அல்லது ‘தட்டுவம்’ கொண்டிருந்தது. தட்டுவதில் நீர் ஒழுகும் ஆனால் பிழாவில் நீர் ஒழுகாது. பிழாவில் அனேகமாக கள்ளு பரிமாறுவர். தண்ணீரைக் கிணற்றில் இருந்து அள்ளுவதற்கு வாளியிற்கு பதிலாக பனை ஓலையில் இழைத்துச் செய்யப்படுவது பட்டை இந்தப் பட்டையும், பிழாவும் எமது வாழ்வில் பின்னிப் பிணைந்த இனி பாத்திரங்கள்

(குடாநாட்டான்)

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே!…நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்!

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதற என் கண்ணீரை மறைத்தபடி நான் புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட, அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும், என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது!

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை, என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு!

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…உறவுகள் இதுதானென்று!

(குடாநாட்டான்)

தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!

சும்மா சொல்லக்கூடாது கண்டியளளே! அப்பாவி மக்களின்ட வயித்தில அடிச்சமாதிரி, புக்கையிலயும் அடிச்சாங்களே ஒரு அடி, ஒவ்வொரு சோத்துப் பருக்கையும் சுழண்டு சுழண்டு எகிறிப் பாய்ஞ்சுது. புக்கையிலை சக்கரை இல்லாட்டிலும் துட்டு இருக்கும் என்று கண்டுபிடிச்சு இந்த நூற்றாண்டின் பொருளாதார மாமேதைகள் பட்டத்தைத் தட்டிக்கொண்டவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC). அதுதான் போன முறை நான் சொன்ன தமிழர் சேர்கஸ் கொம்பனி!. வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரித்தான் பொங்கலுக்குள் ரீசீசீ புகுந்தால் எப்பிடி இருக்கும் என்பதற்கு பிரான்சில் நடந்த பொங்கல் நல்ல உதாரணம்.

(“தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!” தொடர்ந்து வாசிக்க…)

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்

இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றியுள்ளார். திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடினார். கனடாவின் டொரேண்டோவில் வசித்து பார்த்திபன் மனோகரன் என்பவர் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த போது கேப்டன் பதியை பேட்டி கண்டார். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் பணியாற்றிய முதல் இலங்கை தமிழர் உட்பட அவர் மேற்கொண்ட சகாகசங்கள், தனது வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தவை பற்றி அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

(“இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்” தொடர்ந்து வாசிக்க…)

1977 இன்னொரு சம்பவம்

1977 இனக்கலவரம் தென்னிலங்கையில் அரங்கேறிய நேரம்,வன்னிப்பகுதியில் வவுனிக்குளம் பகுதியில் சில சிங்கள மீனவர்கள் தமிழர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் குளத்தில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் இனக்கலவரம் தொடங்கியதை அடுத்து பயம் காரணமாக உடமைகள் எடுக்காமல் ஊர் திரும்பி விட்டனர்.அவரகள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கலவரத்தின்போது வவுனிக்குளம் பகுதியில் இருந்து மரக்கறி ஏற்றிச்சென்ற சில விவசாயிகள் திரும்பிவரும்போது தாக்கப்பட்டனர்.இதுவும் புத்தளம் பகுதியிலேயே நடந்தது.

(“1977 இன்னொரு சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார் அவ்வைப் பாட்டி. அவவின்ற பூட்டப்பிள்ளையள் புலம் பெயர் நாட்டில் புதுப்புது ஐடியாக்களுடன் திரவியம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு புல்லரிக்க வைக்கின்றனர். கோலாகலமாகக் கொத்துப்போட்டு பத்தும் பலதும் பெற்று வாழும் தமிழர் ஒருங்கிணைபுக் குழு தனது(TCC) கொத்து வியாபாரத்தை விஸ்தரிக்க பலான ஐடியா வழங்குவதே எனது நோக்கம்.

(“முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை!” தொடர்ந்து வாசிக்க…)

ஒபாமாவின் உரையும் அமெரிக்காவின் நிலையும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பேரரசுகள் என்றென்றைக்குமானவையல்ல. உலக வரலாற்றில் நிலையான பேரரசுகள் என எதுவும் இருந்ததில்லை. அவை பெரும்பாலும் வல்லரசுகளாக இருக்கின்றனவே தவிர, நல்லரசுகளாக இல்லை. அவை மக்களின் அவலத்தின் மீதும் துன்பங்களின் மீதும் சுரண்டல்களின் மீதும் கட்டியெழுப்பப்பட்டவை. மக்கள் எழுச்சியுறுகிற போது பேரரசுகளின் அத்திபாரம் ஆட்டங் காண்கிறது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலகின் தன்னிகரில்லாத பேரரசாக அமெரிக்கா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. உலகின் எம்மூலையில் எது நடந்தாலும் அதைத் தீர்மானிக்கின்ற, செல்வாக்குச் செலுத்துகின்ற சக்தியாக அதன் வளர்ச்சி வியக்கத்தக்கது. அதனாலேயே அதனை ‘உலகப் பொலிஸ்காரன்’ என அழைப்பதுண்டு. அமெரிக்கா பற்றி உலக மக்களிடையே உள்ள பிம்பம் அதன் வெளியுறவுக் கொள்கையுடன் பாற்பட்டது.

(“ஒபாமாவின் உரையும் அமெரிக்காவின் நிலையும்” தொடர்ந்து வாசிக்க…)

1977 இனக்கலவரம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக் கல்லூரியில் நடந்த களியாட்டம் விழாவின் இறுதிநாளன்று அங்கே போடப்பட்ட சுபாஸ் கபே இல் சாப்பிட்ட பொலிஸ்கார்ர்கள் பணம் கொடுக்கவில்லை .இதனால் சுபாஸ் கபே உரிமையாளர் பொலிஸ்கார்ர்களை திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த நகர அடிதடிக் குழுவொன்று என்ன பிரச்சினை என வினாவ அவர்களும் பொலிஸ்கார்ர்களைக் காட்டி விபரத்தைக் கூறினர்.அதில் இரு பொலிஸ்கார்ர்களை தனியான ஒதுக்குப் புறத்தில் வைத்து அந்த குழு தாக்கியது.அந்த குழுவினரை பொலிசாருக்கு நன்கு தெரியும்.

(“1977 இனக்கலவரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.எஸ். பயங்கரவாதத்தை திடமுடன் எதிர்கொள்ளத் தயாராகும் இந்தோனேசியா

முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் கடந்த வாரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். முப்பது பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால், உலகளவில் பயங்கரவாதம் குறித்த அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்தில் ஜகார்த்தாவின் வீதிகள் வழக்கம் போலக் காணப்பட்டன. குறி வைத்துத் தாக்கப்பட்ட கடைக்குப் பக்கவாட்டில் இருக்கும் சரினா ​ெஷாப்பிங் மாலில் மக்கள் வழக்கம்போல வந்தனர். பயங்கரவாதத்தை எதிர்கொண்டதற்கான பதற்றம் எங்கும் காணப்படவில்லை. அலுவலக நேரங்களில் வழக்கம்போலப் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் மந்தமாக ஊர்ந்தன. பங்குச் சந்தை நிலைவரத்திலும் மாற்றம் இல்லை. 5.80 புள்ளிகள் ஏற்றம் காணப்பட்டது. மொத்தத்தில் பயங்கரவாதிகளின் நோக்கத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் முற்றிலும் மாறாக ஜகார்த்தா நகர வாழ்க்கை சலனமற்ற நீரோடைபோல நகர்கிறது.

(“ஐ.எஸ். பயங்கரவாதத்தை திடமுடன் எதிர்கொள்ளத் தயாராகும் இந்தோனேசியா” தொடர்ந்து வாசிக்க…)