ஸ்டிக்கர் ஒட்டுவதும் கமலுக்குப் பதில் சொல்வதும்தான் அரசின் கடமையா? – மருதன்

“சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மக்கள் சகஜமாகத் தங்கள் பணிகளை மேற்கொள்ள தொடங்கி விட்டனர். சாலைகள் துடைத்து வைத்ததைப் போல் பளிச்சென்று இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சி பெருமளவில் எதிர்கொண்டு சமாளித்துவிட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சீர்மிகு செயல்பாடுகளால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்“ – கதவை நன்றாக மூடிவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டு வேளாவேளைக்கு ஃபில்டர் காபியும் மசாலா தேநீரும் பருகியபடி ஜெயா டிவியை மட்டுமே 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இந்த நிலவரத்தை நம்பி ஏற்க முடியும்.

(“ஸ்டிக்கர் ஒட்டுவதும் கமலுக்குப் பதில் சொல்வதும்தான் அரசின் கடமையா? – மருதன்” தொடர்ந்து வாசிக்க…)

சென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும்.

சென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும். சுயநலமாக இருப்பவர்கள் மட்டுமல்ல கொஞ்சம் கூட மனித நேயம் இல்லாதவர்கள் என்று. அந்த எண்ணத்தை இன்று பார்த்த சில காட்சிகள் மாற்றிவிட்டது.

1. ஜோய் ஆலுக்காஸ் முன்னால் நாங்கு இளைஞர்கள் முழங்கால் அளவு இருக்கும் தண்ணீரில் இரண்டு , மூன்று நாட்கள் நின்று கொண்டு அந்தப் பக்கம் வரும் பைக், கார் இவை சிக்கிக் கொண்டால் தூக்கி உதவிக் கொண்டும் போக்குவரத்தை சரி செய்து கொண்டும் இருந்தார்கள்.

2. வேளச்சேரி -பள்ளிக்கரணை பாலத்துக்கு கீழ் ஒருவர் முட்டி அளவு தண்ணீரில் நின்று ” இந்தப் பக்கம் வராதீங்க பள்ளம் இருக்கு ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

3. ஜெயின் சங்கத்தினர் பார்க்கும் இடமெல்லாம் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமாக நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருந்தார்கள்
.
4. ஃபேஸ்புக்கில் அதிகம் திட்டப்படும் காஞ்சி மடம், தஹ்வீத் ஜமாத் ஆகியோர் பம்பரமாக சுழன்று இண்டு இடுக்குகளில் இருப்பவர்களைத் தேடி உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

5. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நான் காசு தர்ரேன் போய் உதவுங்க என்று கெஞ்சுகிறார்கள்.

6. என் உறவினர் ஒருவர் மூன்று நாட்களாக சமைத்து பாரீஸ் கார்னர் சுற்றி உள்ள மக்களுக்கு சாப்பாடு , பழங்கள் கொடுத்து வருகிறார்.

7. நண்பன் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் காலை 4 மணிக்கு எழுந்து உயர் அதிகாரிகள், பெண்கள் , குழந்தைகள் என்று கூடி உணவை தயார் செய்து பாக்கெட்டில் அடுக்கி தினமும் சுமார் 1000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்தார்கள்.

8. மீனவர்கள் தங்கள் படகுகளில் வந்து தங்கள் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் இலவசமாக சேவை செய்து இரண்டு மூன்று நாட்கள் மக்களை மீட்டு எடுக்க உதவுகிறார்கள்.

9. போக்குவரத்து காவலர்கள் கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சரி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

10. துப்புரவுத் தொழிலாளர்கள் இரவு மழையைப் பற்றிக் கவலைப்படாமல் பம்பரமாக வேலை செய்தார்கள்.

11. உயிர் நண்பன் ஒருவன் 10 பேர் உயிரைக் காப்பாற்றினான். இன்னொருவன் இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தேனீயாக் சுழன்று நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருக்கிறான்.
மனித நேயம் சுத்தமாக செத்துப் போய்விடவில்லை. சென்னை மக்களுக்கு உதவ தூக்கம், பசி , வேலை , குடும்பம் அனைத்தையும் மறந்து உழைத்தவர்கள் பாதங்களை தொழுகிறேன்.

அய்யா/ அம்மா உங்கள் சேவை ஈடு இணையற்றது.ஊரெல்லாம் இது போன்ற கடவுள்கள் ஏராளமானோர் இருக்காங்க.

By –
நா சாத்தப்பன்

அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது….. காலம் மாறிவிட்டது

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.

(“அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது….. காலம் மாறிவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்

சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில், மக்கள் தாமாகவே முன்வந்து ஒருவருக்கொருவர் உதவுவதைக் காணலாம். மதம், சாதி வேறுபாடுகள் கடந்து, மனிதநேயத்துடன் உதவுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் எத்தனை துயர் மிக்கதாயினும், மனிதர்கள் யாவரும் ஒரே இனம் என்ற உண்மையையும் உணர்த்துகின்றன.

(“மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்” தொடர்ந்து வாசிக்க…)

புரட்சியாளர் யாசர் அரபாத் நினைவுதினம் இன்று…

 

பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஒரு வரலாற்று நாயகர்!

அவர் உலகெங்கும் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களின் குறியீடாய் திகழ்பவர்!
அகதிகளாய்த் திரிந்த யூதர்கள் குடியேறிகளாய் புகுந்து; பாலஸ்தீனத்தைப் பிளந்து; இஸ்ரேலை உருவாக்கிய போது உலகமே பதறியது.
அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த தொலைநோக்கு சதிகளில் ஒன்றுதான் இஸ்ரேல் எனும் ‘டெஸ்ட் ட்யூட் பேபி’.
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் நடத்திய யுத்தங்கள் தோல்வியிலேயே முடிந்தன.

சோதனையான அக்காலகட்டத்தில் அரபுகளின் நம்பிக்கை கீற்றாய், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) தோன்றியது. வீரத்தின் விளைநிலத்தில் யாசர் அரபாத் எனும் புரட்சிகரப் போராளி தோன்றினார்.
வல்லரசுகளின் துணை கொண்டு, இஸ்ரேல் எனும் ஆற்றல்மிகு தேசத்தை நடுநடுங்க வைத்தார். தலைமறைவு போராளியாய் வலம் வந்து, கொரில்லா தாக்குதலை அறிமுகப் படுத்தி இஸ்ரேலின் இறுமாப்பைக் குலைத்தார்!

வலிமையான ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேலியர் களின் தலைகளில் இடிகளாய் இறங்கினர் பி.எல்.ஓ. போராளிகள்.
உலகின் தலைசிறந்த உளவுப் படையான ‘மொசாத்’ பாலஸ்தீன விடுதலைப் போராளிகளின் சாகசங்களைக் கண்டு திணறியது. யாசர் அரபாத்தையும், அவரது தளபதிகளையும் கொல்ல முயன்று தோற்றது.
யாசர் அரபாத்தின் எழுச்சியையும், விடுதலை முழக்கத்தையும் உலக நாடுகள் வரவேற்றன. நாடொன்று அமையாமலேயே, உலகின் பல நாடுகளில் தூதரகங்களைத் திறந்தது பி.எல்.ஓ.! உலகின் விடுதலை இயக்கங்கள் யாருக்கும் கிடைக்காத கௌரவம் அது!

ஐ.நா.சபையால் உரையாற்ற அழைக்கப்பட்ட ஒரே விடுதலைப் போராட்டத் தலைவரும் யாசர் அரபாத் மட்டும்தான்!

அமெரிக்கா வழியாகத்தான் ஐ.நா.வுக்கு செல்ல முடியும் என்ற இழிநிலை இன்றும் தொடரும் நிலையில், அன்று அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது.
அவருக்காக வேண்டி ஐ.நா.வின் சிறப்புக் கூட்டம் ஜெனீவாவில் நடத்தப்பட்டது. பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஐ.நா. அவையில் கர்ஜித்தார்.

“ஆலிவ் இலைகளையும், சமாதானப் புறாக்களையும் கைகளில் ஏந்தி வந்துள்ளேன். எங்கள் விடுதலையை மறுக்காதீர்கள்” என அவர் நிகழ்த்திய உரை, உலகை உலுக்கியது. எதிரிகளையும் ஈர்த்தது.
சேகுவாராவைப் போன்றே இவரையும் மேற்குலகின் ஆட்சியாளர்கள் ஏளனம் செய்தனர். ஆனால், ஆசிய&ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டிய விடுதலைப் போராளியாக உலகம் அவரை மதித்தது.

அவரைக் கொலை செய்ய இஸ்ரேலும், அமெரிக்காவும் எடுத்த முயற்சிகளை பாலஸ்தீன உளவு அமைப்பு முறியடித்துக் கொண்டே வந்தது. அதேபோல பல்வேறு விபத்துகளிலிருந்தும் இறையருளால் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார்.
ஒரு சுதந்திர நாட்டின் அதிபருக்குரிய மரியாதையோடு அவரைப் பல நாடுகள் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைகளைக் கேட்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

இந்தியாவின் உற்ற நண்பராகவும், இந்தியாவை நேசித்த தலைவராகவும் இருந்தார். அதனால்தான் சந்திரசேகர் பிரதமராக இருந்தவரை இஸ்ரேலின் தூதரகம் இந்தியாவில் திறக்கப்படாமல் இருந்தது.
அவர் இந்திரா காந்தியுடனும், ராஜீவ் காந்தியுடனும் நெருங்கிய நண்பராக இருந்தார். ராஜீவைப் படுகொலை செய்ய சதி நடப்பதாக பி.எல்.ஓ.வின் உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததும், அதை ராஜீவுக்கு தெரியப்படுத்தினார்.
ராஜீவ் கொல்லப்பட்ட போது, கண்ணீரோடு டெல்லிக்கு ஓடோடி வந்தார் யாசர் அரபாத்!

உலக விடுதலை இயக்கங்கள் யாசர் அரபாத்தை முன்னோடி தலைவராக ஏற்றுக் கொண்டனர். தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் போராளிகள் பி.எல்.ஓ.விடம் பயிற்சிப் பெற்றது ஒரு முக்கிய நிகழ்வாகும்!

யாசர் அரபாத் ஒரு பொறியாளர். ஒரு பொறியாளருக்கே உரிய நுட்பங்கள் அவரிடம் நிறைந்திருந்தன.
அவர் ஒரு கொரில்லா படையை வழிநடத்தியவராக மட்டுமின்றி, ஒரு ராணுவ நிபுணராகவும் செயல்பட்டார். அதுதான் பி.எல்.ஓ.வின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது.
எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் அவர் ஒரு அரசியல் நெறியாளராகவும், பன்முக சமூகங்களை அரவணைக்கும் ஆற்றல் நிரம்பியராகவும் திகழ்ந்தார்.

யூதர்களை எதிர்க்க கிருஸ்தவர்களுடன் நல்லிணக்கம் பேணுவதன் அவசியத்தை உணர்ந்தார். பாலஸ்தீன அரபு கிறித்தவர்கள் ஏற்பாடு செய்யும் கிறிஸ்துமஸ் விருந்திலும் பங்கேற்றார். வழிபாடு வேறு, நேசம் வேறு என்பதை பக்குவமாக வெளிப்படுத்தினார்.
அவருக்கு பக்கபலமாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறிய பிறகு, உலகில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை உள்வாங்கினார்.
இனி நெடுங்காலத்திற்கு அமெரிக்காதான் உலகின் ஒற்றை வல்லரசாக கோலோச்சும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயலாற்றினார்.

அமெரிக்க அதிபராக கிளிண்டன் செயல்பட்ட போது பாலஸ்தீன&இஸ்ரேல் பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வு காண முயன்றார். மேற்கு கரையையும், காஸாவையும் உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.
‘இஸ்ரேலை ஒழிப்பதே ஒரே நோக்கம்’ என்ற பிடிவாத நிலையில் இருந்த அரபு நாடுகளும், அரபுகளும் இதை ஏற்கத் தயங்கினர். இஸ்ரேலியர்களை வரலாற்று எதிரியாக பாவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் முழு உடன்பாடில்லை.

யாசர் அரபாத் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டார்! இஸ்ரேலை ஒழிக்கும் அளவுக்கு படைபலமோ, ஆயுத பலமோ அரபு நாடுகளில் யாருக்கும் இல்லை. அவர்கள் யாரும் போரிடவும் தயாராக இல்லை. அவர்கள் நன்கொடையாளர்கள் மட்டுமே!

வரலாறும் வர்க்கப் போராட்டமும் – ந.இரவீந்திரன்

 

தேசியம் குறித்த பல்வேறு குழப்பமான கருத்துகள் மேலோங்கி, மக்கள் விடுதலைப் போராட்டங்கள் பலவும், திசை கெட்டழிந்து, கேடுகள் மலிந்துவிட்ட நிலையில் மீண்டும் தேசியம் குறித்து மார்க்சியம் முன்வைக்கும் சிந்தனை பற்றி தேடுதல் முனைப்படைந்து வருகிறது. மார்க்சியமல்லாத மற்றும் மார்க்சிய விரோத நிலைப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டங்கள் தறிகெட்டுப் போனதில் மார்க்சியர்களது தவறும் சுய விமர்சனத்துக்குரியதாகும். தேசியம் என்பதை முதலாளித்துவத்திற்கான பிரச்சினையாக கணித்து மார்க்சியத்தை வெறும் வர்க்கவாதமாக முடக்கிய மார்க்சியச் செயற்பாடுகள் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பிந்திய குளறுபடிகளுக்கான ஒரு பிரதான காரணம் எனலாம்! 
(“வரலாறும் வர்க்கப் போராட்டமும் – ந.இரவீந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

பண்டாரவன்னியன் நினைவுநாளும் அதில் உள்ள வரலாற்றுத் திரிபும் – அ.மயூரன்

இலங்கையின் வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது. அத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வு செய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இந்தஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் – செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.

(“பண்டாரவன்னியன் நினைவுநாளும் அதில் உள்ள வரலாற்றுத் திரிபும் – அ.மயூரன்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண இனச்சுத்திகரிப்பு 25 வருடங்கள்

பேரினவாத ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமுமே,  1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான இலங்கையின் பிரதான பிரச்சனையென்று முதன்மைப்படுத்தி பேசுபவர்கள் இலங்கையின் எல்லா இன மக்களின் மீதும் கரிசனை கொண்டவர்களல்ல. அத்துடன் இவர்கள் சுதந்திரமடைய முன்னர் (பிரித்தானியக் காலனியாதிக்கத்தில்) நிலவிய மக்களுக்கிடையேயான பிணக்குகள், முரண்பாடுகள் பற்றி முழுமையாக ஆராய்ந்தும் பார்ப்பதில்லை. அதாவது அக்காலத்தில் நிகழ்ந்த சிங்கள-முஸ்லீம் இனவன்செயல்கள் மற்றும் சாதிக்கலவரங்கள் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் திருப்பித்திருப்பி சொல்வதெல்லாம், 1956 ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் 1958, 1977, 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த தமிழ்-சிங்கள இனவன்செயல்கள், சிங்களக்குடியேற்றம், தரப்படுத்தல், கடைசியாக 2009இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் என்பனவேயாகும். இவற்றினை வரிசைப்படுத்துவதோடு நிறுத்தாது, இவையெல்லாவற்றிற்கும் இலங்கை (சிங்கள) அரச தரப்பினரை ஒரேயடியாகக் குற்றஞ்சாட்டுவதிலேயே முனைப்பாக உள்ளனர். இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட பாரிய அரசியல் தவறுகள்பற்றி ஒருபோதுமே வாய்திறந்து பேசியது கிடையாது.

(“வடமாகாண இனச்சுத்திகரிப்பு 25 வருடங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நம் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சில எண்ணங்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பிற சமூகங்கள் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரிடையும் பரவியுள்ள புனைவுகள் சமூகங்களின் நல்லுறவுக்குக் கேடானவை. எனினும், அதிகம் ஆராய்வின்றி நாம் அவற்றை நம்புகிறோம். சில அயற் சக்திகளை சில உள்நாட்டுச் சமூகங்களின் இயல்பான நண்பர்கள் என்று கற்பனை செய்கிறோம். நடைமுறை அனுபவம் அந் நம்பிக்கைக்கு மாறாக இருந்தாலும், நமது நம்பிக்கைகட்கு முரணானவற்றை ஏற்க மறுக்கின்றோம். இது ஆபத்தானது.

(“பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

எழுமின் ! வருமின் ! மரம் நடுமின் !

(மாதவன் சஞ்சயன்)

கார்த்திகை மாதம் எம் மண் மழை நீரால் மட்டுமல்ல தமிழ் மக்களின் கண்ணீராலும் நனையும் மாதம். எனவே கார்த்திகை மாதம் 1ம் திகதி தொடங்கி 30ம் திகதி வரையான மழைக் காலத்தில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் ஐந்துலட்சம் மரங்கள் நடுவதற்கு தான் திட்டமிட்டிருப்பதாக, வட மாகாண சுற்றாடல் அமைச்சர் அறிவித்துள்ளார். வடக்கில் மர நடுகையைப் பெருமளவில் மேற்கொள்ள பொருத்தமான மாதம் மட்டுமல்ல, தமிழர் தம் வாழ்வில் புனித மாதமாக கருதி கார்த்திகை தீபம் ஏற்றுவதோடு எம் மாவீரரையும் நினைவு கூரும் புனித மாதம் கார்த்திகை மாதம் எனவும் கூறினார்.

(“எழுமின் ! வருமின் ! மரம் நடுமின் !” தொடர்ந்து வாசிக்க…)