பிள்ளையாரடி எனது அப்பாவின் ஊர். எனக்கும் அந்த ஊருக்குமான மிகவும் நெருக்கமான தொடர்பு சுமார் ஒருவருட காலந்தான். அம்மாவுக்கு கொக்குவில், பன்னிச்சையடி பள்ளிக்கூடத்தில் மாற்றலானதால், அருகே அப்பாவின் ஊரில் ஒருவருடம் சென்று வாழ்ந்தோம். நகரத்தில் இருந்து 3 மைல் தூரத்தில் இருந்தாலும் அப்போது பிள்ளையாரடி பெரிதும் கிராமத்தின் குணாதிசயங்களையே கொண்டிருந்தது. நாங்கள் அங்கு 70களில் வாழ்ந்தபோது அங்கு மின்சாரமும் கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். ஆனாலும் அங்கு வாழ்ந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள்தான். அங்கு எல்லாம் அப்பாவின் உறவினர் என்பதால், எனக்கு பிடித்தவர்கள் மிகவும் அதிகம். பிடிக்காதவர் என்று எவரையும் ஞாபகமில்லை. அப்படி பிடித்த குடும்பங்களில் ஒன்று எனது அப்பாவின் மைத்துனரான (அத்தை மகன்) ஐயன் அங்கிளின் ( தில்லையர் பூபாலபிள்ளை – இவர் ஒரு ஆசிரியர்) குடும்பம்.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research