(தோழர் ஜேம்ஸ்)
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்
இந்தியாவின் தேர்தல் முடிவுற்று மீண்டும் பாஜக என்கின்ற வலதுசாரிகளின் கை கட்டப்பட்ட வெற்றிகளை அவர்கள் கண்டுள்ளார்கள்.
The Formula
Political & Sociology Research
(முருகானந்தம் தவம்)
இலங்கையின் பிரதமர் பதவி 1947 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 15 பேர் மாறி,மாறி பிரதமர்களாகப் பதவிவகித்துள்ள போதும் இந்த பிரதமர்களில் பலருக்கும் பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய விடாத துரதிர்ஷ்டத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ள வரலாறே தொடர்ந்தும் பதிவாகி வருகின்றது.
(By Maj. Gen. Kamal Gunaratne)
தமிழில் Rajh Selvapathi (முன்னாள் ஐ. நா. சபை உத்தியோகத்தர், கிளிநொச்சி)
(முன்) கதைச்சுருக்கம்
800×800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந்தது.
(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
1977 தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்றது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே. 1970இல் ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இழைத்த தவறுகள் இவ்வாறானதொரு பாரிய வெற்றியை ஜே.ஆருக்குப் பெற்றுக் கொடுத்தன. ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்களையும் பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியானது.
(மொஹமட் பாதுஷா)
இதயத்துடிப்பு கண்காணிப்புக் கருவியின் வாசிப்பைப் போல தேர்தல் பற்றிய பேச்சுக்கள்; ஏற்ற. இறக்கங்களாக சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் எந்தத்; தேர்தலையும் எப்படி எதிர்கொள்வது என்ற எந்த திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் இருப்பதை தௌ;ளத்தெளிவாக காண முடிகின்றது.