சினிமாஸ் குணரத்தினம் ஏன் சுட்டு கொல்லப்பட்டார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? யார் குற்றவாளிகள்?இலங்கை திரையுலகின் பிதா மகன் என்றழைக்கப்பட்ட திரு கனகசபை குணரத்தினம் 20 July 1917 – 27 August 1989) அவர்களின் வரலாறு இலங்கை மக்களால் ஏன் போதியளவு நினைவு கூறப்படுவதில்லை?
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காய் நகர்த்தல்கள் ஒரு புறம் மூடிய அறைகளுக்குள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்க மறு புறத்தால் அந்த முயற்சிகள் தோல்வி கண்டு தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதில் வெற்றி பெறுவதற்கான எதிர்கட்சிகளை பிளவுபடுத்தும், சூழ்ச்சிகளும் எம்.பி.க்களை வளைத்துப்போடும் பேரம்பேசுதல்களும் தீவிரம் பெற்றுள்ளதால் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இலங்கையின் பிரதமர் பதவி 1947 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 15 பேர் மாறி,மாறி பிரதமர்களாகப் பதவிவகித்துள்ள போதும் இந்த பிரதமர்களில் பலருக்கும் பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய விடாத துரதிர்ஷ்டத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ள வரலாறே தொடர்ந்தும் பதிவாகி வருகின்றது.
தமிழர் அரசியலில் பல்வேறு விமர்சனங்களுக்குரியவராக பலராலும் பேசப்பட்டாலும், விமர்சிக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவு விரைவில் நிரப்பப்பட இடைவெளியையே ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று இலங்கை எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி உடனடி விளைவல்ல. அதற்கொரு நீண்ட வரலாறு இருக்கின்றது. குறிப்பாக 1977இல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரத்தின் பங்கு பெரிது.
தமிழில் Rajh Selvapathi (முன்னாள் ஐ. நா. சபை உத்தியோகத்தர், கிளிநொச்சி)
(முன்) கதைச்சுருக்கம்
800×800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந்தது.
1977 தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்றது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே. 1970இல் ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இழைத்த தவறுகள் இவ்வாறானதொரு பாரிய வெற்றியை ஜே.ஆருக்குப் பெற்றுக் கொடுத்தன. ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்களையும் பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியானது.
வருடம் முழுதும், ‘மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்’ தொழிலாளர்கள், தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக, உரத்துக் குரல்கொடுக்கும் தினமான உழைப்பாளர் தினம் (மே 1), பல கோரிக்கைகளுடன் இன்று(01) உலகளவில் கொண்டாடப்படுகின்றது.