தமிழீழத் தனி நாடு என்ற முதற்கோணல்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1972 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு, தரப்படுத்தல், தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதங்கள், துரையப்பா கொலையைத் தொடர்ந்த பொலிஸ் கெடுபிடிகள் ஆகியன தமிழ் இளைஞர்கள்  மத்தியில் மிகுந்த கோபத்தையும் வெறுப்புணர்வையும் உருவாக்கியது.

நடக்கப்போவது என்ன தேர்தல்?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன.

தோல்விப் பயத்தில் எம்.பிக்கள் மாற்றுத் திட்டமில்லாத மக்கள்

  (மொஹமட் பாதுஷா)

இதயத்துடிப்பு கண்காணிப்புக் கருவியின் வாசிப்பைப் போல தேர்தல் பற்றிய பேச்சுக்கள்; ஏற்ற. இறக்கங்களாக சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் எந்தத்; தேர்தலையும் எப்படி எதிர்கொள்வது என்ற எந்த திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் இருப்பதை தௌ;ளத்தெளிவாக காண முடிகின்றது.

முன்னைய தலைவர்களை விட மோசமானவரா?

எம்.எஸ்.எம். ஐயூப்

ராஜபக்‌ஷக்களும் அவர்களது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கடந்த கால சம்பவங்களிலிருந்து,  குறிப்பாக  2022 கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கியெறிந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும்  கோப் என்று அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமை எடுத்துக் காட்டுகிறது.

அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம்

(Nixson Baskaran Umapathysivam)

TORONTO இல் நடந்த NPP இன் கூட்டத்தில் தமிழ் தரப்பின் 3 கேள்விகளுக்குப்பின், அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம்

நன்றி மனோரஞ்சன்…

சிந்தன் டி சில்வா: மறுக்க முடியாத ஈழவிடுதலைப் பக்கங்கள்

(தோழர் ஜேம்ஸ்)

ஈழ விடுதலைப் போராட்டத்தின் சில பக்கங்கள் பலரும் அறிந்திருக்காத பக்கங்களைக் கொண்டது.

கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அது ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறது தமிழ்த் தேசியம்

(அ.வரதராஜா பெருமாள்)


கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.

தரப்படுத்தல்: முரண்பாட்டின் புதுவெளி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1971ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிகளில் அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறையானது தமிழர்கள் அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமைப்பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சிறுபான்மையினரை சட்ட நிர்வாக ரீதியாக கட்டமைப்பு ஒதுக்கலை நிகழ்த்திய மூன்றாவது நிகழ்வு தரப்படுத்தலாகும்.

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம். புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று.