(அ. நிக்ஸன்)
ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால், கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது.
The Formula
Political & Sociology Research
(Shanthan K Thambiah)
மாகாண சபைகளில் மக்களாட்சி வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இன்றைய அரசியல் கோரிக்கை. இன்றைய தமிழ் அரசியலில். தேசியத்தரப்பினர் என்கின்ற வரையறையுடன் அவர்களுக்கான ஒற்றுமையான – நடைமுறைசாத்தியமான – தமிழர்களின் அரசியற் கோரிக்கை என்ன என்பதை – தமிழ் அரசியல் அடையாளப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தானே நிதிஅமைச்சர் என்ற வகையில் 2024ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) கிட்டத்தட்ட இதே நாட்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு உரியவை. கௌரவ ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தான் ஜனாதிபதியாக வந்து விட வேண்டும் என்ற விருப்பதிலேயே தனது அனைத்து அரசியல் நகர்வுகளையும் மேற் கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிச்ததே. அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டமும் அதன் ஒரு பிரதானமான பாகமே என்பதில் சந்தேகமில்லை.
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ் அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் பரப்பு கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான நம்பிக்கையான முயற்சிகளையோ மாற்றங்களையோ காட்டாமல் வெறுமையால் நிரம்பியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளில் இருந்து சற்று வேகமாகவே மீண்டெழுவது தொடர்பிலான ஆக்ரோசத்தை தமிழ்ச் சமூகம் வெளிக்காட்டினாலும், அதனை நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அரசியல் தரப்புக்களும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ்ச் சமூகம் பிளவுண்டது மாத்திரமன்றி, தவறான பக்கங்களை நோக்கிய விரைவாக ஓடத் தொடங்கியிருக்கின்றது.
(சாகரன்)
காலம்தான் எவ்வளவு வேகமாக கடந்துவிட்டது கல்யாணியும் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
இலங்கைத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் 1970 முற் கூறுகளில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை உண்மையை வரவளைத்தல் என்றாக துன்புறுத்தலுக்கு ஆளான போராளியாக கல்யாணி வாழ்ந்தார் என்பது வரலாற்றில் நாம் பதிவு செய்தாக வேண்டும்.
பண்டா – செல்வா உடன்படிக்கை என்று அறியப்பட்ட பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கையானது சுதந்திரத்துக்குப் பின்னர் இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான நடவடிக்கையாகும். ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இங்கு இரண்டு விடயங்களை நோக்குதல் தகும்.
(ஞானகீர்த்தி மீலங்கோ)
பண்டா – செல்வா உடன்படிக்கை என்று அறியப்பட்ட பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கையானது சுதந்திரத்துக்குப் பின்னர் இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான நடவடிக்கையாகும். ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இங்கு இரண்டு விடயங்களை நோக்குதல் தகும்.