தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகியவை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையிலான நேர்மறையான மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடத்தப்பட்டதாக கலாநிதி ஜெய்சங்கரின் சமூக ஊடகப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
தமிழரை நடுத்தெருவில் விட்ட சத்தியாகிரகம்
1960 டிசெம்பர் 31ஆம் திகதி சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு மறுநாளே நடைமுறைக்கு வந்தது. 1961ஆம் ஆண்டு மொழிவாரிச் சிறுபான்மையினருக்கு மிகுந்த சவால்களுடன் தொடங்கியது. இது கல்வித்துறையில் எதிரொலித்தது. 1959 முதலே பல்கலைக்கழகங்கள் சிங்கள, தமிழ் மொழிமூல மாணவர்களை அனுமதித்தன. மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் ஆகிய பீடங்கள் 1960களில் சேர்க்கப்பட்டன. பல்கலைக்கழகங்களில் இணைவோரின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது.
தேவை ஒரு தலைமைத்துவச் சங்கிலி
உலகின் முதல் பெண் பிரதமரும் வேர்விட்ட இனவாதமும்
1959இல் பண்டாரநாயக்கவின் கொலை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு உள்முரண்பாடுகளால் ஊசலாடியது என்பதையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் வெளிக்கொண்டுவந்தது. இனிமேலும் இலங்கையின் பௌத்த பிக்குகள் அனைத்தையும் துறந்த துறவிகள் அல்ல என்ற ஏற்கக் கடினமான உண்மையை பொதுவெளிக்குக் கொண்டு வந்தது.
தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொள்ளாத ‘இமயமலை பிரகடனம்
(லக்ஸ்மன்)
இலங்கைக்கு உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயுள்ள புலம்பெயர் தேசங்களிலுமென இமயமலைப் பிரகடனம் விமர்சிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாத “இமயமலை பிரகடனம்” என்றே அதன் மீதான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
திம்புவா…? இலங்கை – இந்தியா…? இமாலயாவா…?
7500 ரூபாவில் ஒரு நாட்டைக் கைப்பற்றல்
மார்கழி 13 1986….
மார்கழி 13 இதே நாள் 1986 ஆம் ஆண்டு இருள் கவியத் தொடங்கிய நேரத்தில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடை செய்யும் தாக்குதலை புலிகள் தொடுத்தார்கள். தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராயிருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டார்கள். போராட்டத்திலிருந்து அந்நியமாக்கப்பட்டார்கள்.
முன்கூட்டிய தயாரிப்பு இல்லாத புதுடெல்லி சந்திப்பு
தமிழ் மக்களின் இன்றைய அரசியல் கோரிக்கை
(Shanthan K Thambiah)
மாகாண சபைகளில் மக்களாட்சி வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இன்றைய அரசியல் கோரிக்கை. இன்றைய தமிழ் அரசியலில். தேசியத்தரப்பினர் என்கின்ற வரையறையுடன் அவர்களுக்கான ஒற்றுமையான – நடைமுறைசாத்தியமான – தமிழர்களின் அரசியற் கோரிக்கை என்ன என்பதை – தமிழ் அரசியல் அடையாளப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை.