முடிவுற்ற முள்ளிவாய்க்கால் மரணங்களின் 7 ஆண்டுப் பாதையில்……

(சாகரன்)

முள்ளிவாய்காலில் முடிவுற்ற யுத்தம் பொது மக்கள் பலரை இருதரப்பும் காவு கொண்டு முடிவுற்று 7 வருடங்கள் ஓடிவிட்டன. யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ தன் தரப்பிற்கு நகரங்களை இணைக்கும் சாலைகளையும் நகர அபிவிருத்திகளையும் முக்கியமாக மையப்படுத்தி தனது செயற்பாட்டை செய்திருந்தார். யாரும் எவ்விடம் சென்று வரலாம் என்ற ஒரு நிலமையை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த மகிந்த செய்து முடித்துள்ள முக்கிய நிகழ்வாக மே 18 2009 அமைந்தது என்பது மறுக்க முடியாத யதார்த்தம். இதில் மகிந்த கூட்டும் அவர்களைச் சார்ந்தவர்களும் அபிவிருத்தியென்று ஒரு புறமும் தம்மை அபிவிருத்தியடைச் செய்தல் என்று மறபுறமும் இதனைக் கேள்விகளுக்குள் உள்படுத்தியவர்கள் அது சிங்களவர்களாக இருந்தாலும் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கி போரை முடித்த போதிருந்த தமது ஆதரவுத் தளத்தை இழந்து வந்தனர்.

(“முடிவுற்ற முள்ளிவாய்க்கால் மரணங்களின் 7 ஆண்டுப் பாதையில்……” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்!

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம், மீண்டும் உசாரடைந்து இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில், தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின், முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான், முஸ்லிம் தனி மாகாணம் என்பதாகும்.

(“முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.

இலங்கையில் 2015 இற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக உருவாகிய புதியஐனாதிபதி மீதும், தேசிய அரசாங்கத்தின் மீதும் சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் விரைவில் உருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்புக்கான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருப்பதனை இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வரவேற்கின்றது.

(“புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.” தொடர்ந்து வாசிக்க…)

தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது!

தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைஇ எதிர்பார்ப்பு அனைத்தும் தகர்ந்து போய்க் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர். நல்லாட்சி அரசாங்கம் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன்’ வரவில்லை என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தியது மாத்திரமல்ல மனித உரிமை குறித்த விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அனுசரணையும் வழங்கியது. தமது வாக்குறுதிகள் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்’ அல்ல என பிரகடனப்படுத்திய சொற் பிரயோகங்களின் சத்தம் அடங்குவதற்குள்ளேயே இலங்கைத் தரப்பிலிருந்து தனது பிரகடனத்தையே தகர்த்தெறியும் வார்த்தைப் பிரயோகங்களை உதிர்க்கத் தொடங்கி விட்டது. மனித உரிமை மீறல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொள்வதை இலக்காகக் கொண்டு நல்லாட்சி அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினரின் செயற்பாடுகளும் உள்ளன.

(“தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது!” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பை மாற்றிப் பயனில்லை புதிய யாப்பை உருவாக்குவதே அவசியம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு கொழும்பு விசும்பாயவில் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் அரசியலமைப்பு சட்டத்தரணியும், 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த தயாரிப்பில் முன்னிலை வகித்தவரும், தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பணியில் முக்கிய நபராகவும் விளங்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன விசேட விரிவுரையொன்றை நடத்தியிருந்தார். அதன் முழுவிபரம் வருமாறு:

(“அரசியலமைப்பை மாற்றிப் பயனில்லை புதிய யாப்பை உருவாக்குவதே அவசியம்” தொடர்ந்து வாசிக்க…)

உரிமைக்கான வேட்கையே தமிழர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது!

புதிய அரசியலமைப்புக்கு பொது மக்களின் அபிப்பிராயங்களை அறியும் குழுவினர் யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 15,16ஆம் திகதிகளில் தமது செயலமர்வுகளை நடத்தியிருந்தனர். ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ்ப்பாணத்தில் மிக அதிகமானவர்கள் கலந்து கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வருகை தரவில்லை. இந்த ஏமாற்றத்தை இந்தக் குழுவின் செயலமர்வுகளை கண்காணிக்கும் அமைப்பினர் வெளிப்படுத்தினர்.

(“உரிமைக்கான வேட்கையே தமிழர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆலோசனைகள்

15.02.2016 ம் திகதி யாழ் கச்சேரியில் நடந்த புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா. சங்கையா மற்றும் கடசியின் யாழ் மாவட்ட கிளையின் செயலாளர் கு. சிவகுலசிங்கம் ஆகியேரால் பின்வரும் ஆலோசனைகள் அடங்கிய மகஜர் நேரடியான விளக்கங்களுடன் கையளிக்கப்பட்டது.

(“புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆலோசனைகள்” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். 2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.

(“மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!” தொடர்ந்து வாசிக்க…)

தென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா?

2016ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நம்பியிருக்கும் வேளையில், தென்பகுதி அரசியலில் குழப்பங்களும் குத்துக்கரணங்களும் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தனக்குத் தோல்வியாக அமைந்தபோது ஆட்சி அதிகாரத்தை கைவிட்டுப் போக மனம் இல்லாதிருந்த மகிந்த ராஜபக்­சவை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஆட்சிபீடத்தைத் கைப்பற்றுவதில் தற்போதைய அரசு மிகவும் கவனமாக நடந்து கொண்டது. ஆ… ஊ… என்று சத்தம் வைக்காமல் அப்பு! ராசா என்ற அணுகுமுறைக்கூடாக மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார்.

(“தென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் குறும் தேசியவாதமும், முஸ்லீம் குறும் தேசியவாதமும்

1991 ஆண்டு அளவில் கொள்ளுபிட்டியிலுள்ள ஹக்கீமின் ( இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ) வீட்டில் வட கிழக்கில் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் வாழிடங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகான சபையை எப்படி உருவாக்கலாம் என்று ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த தனிப்பட்ட கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம் வாழிடப் பகுதிகளை ( கிராமங்களை நகரங்களை ) தமிழ் வாழிடப் பகுதிகளுக்காக ( கிராமங்களை நகரங்களை ) இடப் பரிமாற்றம் செய்து அதனை முஸ்லிம் மக்களின் செறிவு மிக்க பிரதேசமாக உருவாக்கி , ஏனைய நிலத்தொடர்பற்ற சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் மாகான சபை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஒரு ஆலோசனையை அவர் முன்வைத்த போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை எப்படி இடப் பரிமாற்றம் செய்வது என்ற கேள்வியை அஸ்ரபிடம் முன் வைத்தார். அஸ்ரப் அதற்கு பதிலாக காரைதீவை காத்தான்குடிக்கு பகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிபிட்டார் . அதனை கேட்டதும் ஹிஸ்புல்லா , அதை ஒரு பரிகாசமான ஆலோசனையாக எடுத்துக் கொண்டதுடன் , அவ்வாறான பரிமாற்றம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தினார் .

(“தமிழ் குறும் தேசியவாதமும், முஸ்லீம் குறும் தேசியவாதமும்” தொடர்ந்து வாசிக்க…)