“தாழ்த்தப்பட்ட’ மக்களை மறந்தனவா தமிழ்க் கட்சிகள்?

இராசலிங்கத்துக்கு ஆலோசனை வழங்கிய சிங்கள எம். பி.

1970 ஆம் ஆண்டு எம்.சி.சுப்பிமணியம் அவர்களுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி எவரும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை என்றும் அதுவும் அரசாங்கக் கட்சியின் தேசியப்பட்டியல் மூலமே அவர் வரமுடிந்தது என்றும் சாரப்பட அருண் சித்தார்த் நேற்று காணொளியில் தோன்றிப் பகிர்ந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னரும் ஒரு இணைய ஊடக நிகழ்ச்சியில் தமிழ்க் கட்சிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தோரை பாராளுமன்றம் அனுப்ப முயற்சிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.


அருண் சித்தார்த்தின் தந்தையார் அருளானந்தம் அண்ணர் எனது அன்பிற்கும் நட்பிற்குமுரிய மூத்த ஊடகர்.


அருண் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பதை நானறிவேன். அதுவும் நான் பணியாற்றிய தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சிக்கு “சப்டைட்டில்’ செய்யவேண்டிய தேவை வந்தபோது “சப்டைட்டில்ஸ்’ என்ற புதுவகை மொழிபெயர்ப்பு முறையை விரைவாகப் பிடித்துச் செய்த திறமைசாலி அவர் என்பதை உணரமுடிந்தது. அந்தக் கதைகள் இங்கு அவசியம் இல்லை. விடயத்துக்கு வருவோம்.


அவர் காணொளிகளில் குறிப்பிட்டது போல அந்தக் காலத்தில் தேசியப் பட்டியல் முறை இருக்கவில்லை. நியமன எம்பி முறை பழைய அரசியலமைப்பிலிருந்தது.


செல்லையா குமாரசூரியர், எம்.சி. சுப்பிரமணியம், பதியுதீன் மஹ்மூத் போன்றோர் நியமன எம்பிக்களாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐக்கிய முன்னணி அரசில் நியமனம் பெற்றவர்கள்.
அருண் பிரசாத் சொன்ன”தாழ்த்தப்பட்ட மக்கள்’ என்ற பதத்தை நான் இங்கு பாவிக்க விரும்பவில்லை. “சிறுபான்மை சமூகங்கள்” என்று அதனை இப்பதிவில் சில தகவல்களைச் சொல்வதற்காகக் குறிப்பிடுகிறேன்.
1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களில் ஒருவராக உடுப்பிட்டி வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய அமரர் த. இராசலிங்கம் அவர்களை உடுப்பிட்டித் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது.
“சாதிப் பெருமையும் தடிப்பும்” மிக்க தொகுதியாகக் கருதப்பட்ட உடுப்பிட்டியில் இராசலிங்கத்தை நிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் விடுதலையை அடைவதற்காக எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையாகத் தங்கள் ஆணையைத் தருகிறார்கள் என்று காட்ட இராசலிங்கத்தை வெற்றியடையச் செய்யுமாறு கூட்டணித் தலைவர்கள் இளைஞர் பேரவையினர் மேடைகளில் ஏறிப் பிரசாரம் செய்தனர்.
அருணின் பாணியில் சொல்வதானால் சாதித் திமிர் பிடித்த, கரவெட்டி ,உடுப்பிட்டி, நவிண்டில், கரணவாய் வெள்ளாளர் மத்தியில இராசலிங்கம் நிறுத்தப்பட்டார்.
மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தமது வீட்டுக்கருகில் இராசலிங்கம் அவர்கள் கரவெட்டிக்கு வாக்குக் கேட்டு வந்தபோது ஒரு வீட்டில், அங்கிருந்த மூதாட்டி பேசிய கொடும் வார்த்தைகளைச் சொல்லி விசனப்பட்டார். அந்த மனுசியின் கடும் சொற்களை விட இராசலிங்கத்தைக் கல்லால் எறியலாமடா..அது காயம் குறைந்ததடா -என்றார்.
அந்த ‘மனுசி’ ஒன்றுமே படிக்காதது; ஆனால் இராசலிங்கம் ஒரு எம்.ஏ முதுமாணி. கொழும்பு


சென்.ஜோசப்பில் கற்று அங்கு ஆசிரியராகி உதவி அதிபராகி கல்வி அதிகாரியான ஒருவர். நிலைமையைப் பார் என்றார் கவலையுடன். கூட்டணி இப்படியான எதிர்ப்புகளின் மத்தியில் தான் உடுப்பிட்டித் தொகுதியில் அவரை நிறுத்தியிருந்தது.


அந்தப் பெண்ணின் அறிவும் வாழ்ந்த சூழலும் அந்தளவுந்தான் என்று தவிர்த்தாலும்…1977 தேர்தலின்போது முற்போக்கானவர்கள் என்று சமூகத்தில் மதிக்கப்பட்ட சமசமாஜியான ஆர்.ஆர் தர்மரத்தினமும் கே.சி மகாதேவனும் இராசலிங்கத்துக்கு எதிராகப் போட்டியிட்டனர்.
இதையும் விட.


சிறுபான்மை மகாசபை போன்ற இயக்கங்களுடனும் சிறுபான்மை சமூகங்களுக்கான போராடாடங்களுடனும் தொடர்புடைய அமரர் எஸ்.எஸ். சுந்தரமும் பிள்ளையினாரும் இராசலிங்கத்துக்கு எதிராகக் கேட்டார்கள்.


அமரர் சுந்தரம் பிரசாரத்தின்போது இராசலிங்கம் அல்ல, தான்தான் அவரைவிட இன்னும் தாழ்ந்தவன் என்றும் பேசினார்.


தொழிற்சங்கவாதியான கே.சி மகாதேவனும் தமிழீழம் ஒரு கனவு என்று கூட்டணிக்கு எதிராகக் கேட்டார். இராசலிங்கத்துக்கு தாம் எதிரல்ல என்றார்.


ஏனைய தொகுதிகளை விட உடுப்பிட்டியில் அதிக வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இராசலிங்கத்தை எதிர்த்துத் எட்டுப் பேர் போட்டியிட்டனர்.


சாதியத் திமிர் எப்படியும் இராசலிங்கத்துக்கு எதிராகத் தமக்கே வாக்குகளை வழங்கும் என்று இவர்கள் எதிர்பார்த்தனர்.

இதே வேளை , போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் சார்பிலான வேட்பாளர் மோதிலால் நேரு தமது பரப்புரையில் இப்படிச் சொன்ன ஞாபகம்:-
கோப்பாய் தொகுதியில் சிறுபான்மை சமூக மக்கள் ( வாக்காளர்கள்) அதிகம் உள்ளனர். அங்கு திரு இராசலிங்கத்தை இறக்கியிருக்கலாம். தமிழரசு தனது மூத்த உறுப்பினர் கதிரவேற்பிள்ளையை விடாமல் தமிழரசின் நலனுக்காக இங்கு ( உடுப்பிட்டியில்) போட்டமை தமிழினத்தில் பிளவுகளை ஏற்படுத்த என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மோதிலால் நேரு பேசினார்.


1977 தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் வந்தன.
உடுப்பிட்டித் தொகுதியில் இராசலிங்கம் 18768 வாக்குகள் பெற்றார் அது 63.44%
அவரை எதிர்த்து நின்ற
ஆர். ஆர். தர்மரத்தினம் 13.6%
மோதிலால் நேரு 9.4%


எஸ்.எஸ்.சுந்தரம் 5%
கே.சி. மகாதேவன் 4%
பிள்ளையினார்.1%
இதேவேளை சிறுபான்மை சமூக மக்கள் அதிகம் கொண்ட தொகுதியான கோப்பாயில் தமிழர். விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட
சி. கதிரவேற்பிள்ளை 77.2% வாக்குகளைப் பெற்றார்.
அன்று தமிழ் மக்கள் சாதிய வேறுபாடுகளையெல்லாம் கடந்து தங்களது சுயநிர்ணயம் பற்றிய சிந்தனையில் ஒற்றுமையாக நின்றார்கள் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் இன்றும் காட்டுகின்றன.
தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர் இராசலிங்கத்துக்குச் சொன்ன ஆலோசனை :-
அன்றைய பிரதமர் பிரேமதாச கரவெட்டி இராசகிராமத்தைத் திறக்க வந்தபோது இராசலிங்கம் அதிற் கலந்து கொண்டதால் இளைஞர்கள் குழம்பி சில சர்ச்சைகள் தோன்றின. அது நடந்த காலப்பகுதியில் தம்முடன் பழகிய சிலருக்கு அமரர் இராசலிங்கம் இந்தக் கதையைச் சொன்னார். ஹரிஸ்பத்துவ எம்.பி விஜயசிறி சொன்ன ஆலோசனைபற்றிய கதையே அது.
1978 இல் கூட்டணித் தலைமையுடன் மனஸ்தாபப்பட்டு அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான செ. இராசதுரை அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசாங்கத்தில் அமைச்சர்ப் பதவி பெற்ற காலத்தில் பாராளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராயிருந்து ஐ.தே.க வில் பின்னர் இணைந்த ஹரிஸ்பத்துவத் தொகுதி உறுப்பினரான (இரட்டை அங்கத்தவர் தொகுதி -மற்றவர் ஏ.சி.எஸ். ஹமீத்) ஆர்.பி விஜயசிறி இராசலிங்கத்துக்கு ஆலோசனை ஒன்று சொன்னாராம்.
சிங்கள சமூகத்தில் குறிப்பிட்ட சமூக வகுப்பைச் சேர்ந்த அவர் இராசலிங்கத்துக்குச் சொன்னது என்னவென்றால்,
“இராஸ், நீ சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஒருவன். உங்களுக்கு இடது சாரிகளோடோ அல்லது யு என்.பி அல்லது எஸ்.எல் எப் பியோடோ சேர்ந்து உங்கள் உங்கள் சமூகங்களுக்குப் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.
உங்களுக்குப் பலமான கட்சி தமிழர்களுக்குரிய கூட்டணிதான்.‌நீ அவர்களோடு இருந்து தான் உள்ளுக்குள் போராடி உனது மக்களுக்குச் செய்வதைச் செய்யலாம். இராசதுரை மாதிரி அரசாங்கத்தோடு சேரப் பார்க்காதே.
ஆட்சி மாறினால் அவ்வளவும் தான்.
கூட்டணி தான் உங்கள் பலம்”
என்றாராம் விஜயசிறீ.
இதனை இராசலிங்கம் தமக்கு நம்பிக்கையானவர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி அவரை பாராளுமன்றக் குழுவில் கல்வி தொடர்பான சுற்றுலாக்களுக்கு அனுப்பியதை அமரர் இராசலிங்கம் பெருமையாகக் குறிப்பிட்டதுண்டு.
மாவட்டங்கள் தோறும் மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டபோது இராசலிங்கம் கூட்டணித் தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்து கரவெட்டியில் இராசகிராமம் என்ற மாதிரிக் கிராமத்தை அமைத்திருந்தார்.
அதனைத் திறந்து வைக்க பிரதமர் ஆர்.பிரேமதாச வந்தபோது அதில் கலந்துகொள்ள கூட்டணித் தலைமைப்பீடம் அனுமதியளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“நான் கரணவாய் மகாவித்தியாலயம் திரு இருதயக் கல்லூரி, ஞானாசாரியர் கல்லூரி போன்றவற்றுக்கு கட்டிய கட்டிடங்கள் எங்களது மக்களுக்குத் தெரிவதில்லை.ஆனால் தேவரையாளி இந்துக் கல்லூரிக்குக் கட்டிடம் கட்டுவது மட்டும் தான் தெரிகிறது. இப்படியான பார்வையில் இந்த சமூகம் ஒவ்வொரு விடயங்களிலும் இருக்குமானால் எமக்கு விடிவு என்பது தூரத்தில் தெரிகிற நட்சத்திரமும் அல்ல” என்று இராசலிங்கம் அன்று சொன்னது இன்று நிதர்சனமாகிறது
யாழ்ப்பாணத்தில் 6 ஆசனங்களுக்காக 396 வேட்பாளர் போட்டிபோடும் நிலைக்கு
தமிழினம் வந்துள்ளது. ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை புரிந்துணர்வு பகிர்வு மனப்பான்மை இல்லாமை போட்டி, பொறாமை, சூழ்ச்சி என்பனதான் இத்தனை இலக்கம் வந்தமைக்குக் காரணமாகும்.
இந்த நிலையில் நாம் தமிழர்களைப் பொறுத்தவரையில் மேலும் சமூக ரீதியாக மத ரீதியாகப் போட்டியிடத்தான் வேண்டுமா?

துரையப்பா கொலையும் வன்னி நோக்கிய பெயர்வும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவுநாளில் நிகழ்ந்த துயரங்கள் தமிழ் மக்களிடையே சீற்றத்தை உண்டுபண்ணின.  அரசாங்கம் நிகழ்வுக்குப் பொறுப்பேற்காததுடன் குற்றத்திற்குப் பொறுப்பானோரைத் தண்டிக்கவும் தவறியது. இது ஏற்கெனவே தரப்படுத்தலால் வெகுண்டிருந்த தமிழ் இளைஞர்களிடையே மேலும் சினத்தை மூட்டியது. இதைத் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்த் தேசியவாத அரசியலும் அரசியல் வன்முறையும் வளர்க்கப்பட்டன.

தோழர் கௌரிகாந்தன்

(சுகு சிறீதரன்)

மறைந்த நண்பர் தோழர் குகமூர்த்தி அவர்களின் மூலமே முதன் முதலில் தோழர் கௌரிகாந்தன் அவர்கள் பரிச்சயமானார். நல்லூர் முடமாவடியில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்துக் கொண்டது ஞாபகம் . அப்போது அவர்கள் விடிவு என்ற ஒரு பத்திரிகை குழுவாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்‌.
1970 களின் இறுதி வாக்கில் என நினைக்கிறேன்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் சுத்த முட்டாள் ஒப்பீடு?

(Vaithiyanathan Loganathan)

“உதயன்” போன்ற அபத்தமான செய்திகளை காவும் பத்திரிகைகளும், நச்சு காளான்களாக வெகுத்துவிட்ட YouTube குப்பைகளும் மக்கள் மத்தியில் மலிந்து பிற்போக்குத்தனத்தை வளர்த்துவிட . . . . . . . கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க வசதியாக அமைந்துவிடுகிறது இந்த கடைநிலைத் தமிழ் அரசியல் முட்டாள்களுக்கு!

வைகோ

(Mr.M.S.Rajagopal ).


“உண்மையில் தமிழீழ விடுதலை போராட்ட காலம்தான் என்னுடைய வாழ்வின் வசந்த காலம்! தமிழீழ பயணங்கள் குறித்த நூல் ஒன்று எழுத ஆசைப்படுகிறேன்” – வைகோ.

முள்ளிவாய்காலில் முடிவு

(Thesam Net)
சுயபுத்தி இருந்தாலுமே மற்றவர்களை கூடி ஆலோசிக்க வேண்டும்! சுயபுத்தியும் இல்லாமல் மற்றையோர் புத்தியையும் கேளாமல் அரசியல் செய்தால் இதுதான் முடிவு!

சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்

 

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம், ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம். புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.

(“சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்” தொடர்ந்து வாசிக்க…)

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?

(தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.அவர் அளித்த கருத்தை இப்போ பார்ப்போம் …..!)

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?

தற்போது பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பாக சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். இருந்தாலும் இறுதியாக உறுதியாக சொல்கின்றேன் ,.. நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். இதுதான் தலைவர் சொன்ன தாரக மந்திரம் .தலைவர் இருக்கிறார் என்று விடுபவர்களே சிந்தியுங்கள் …

(“உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?” தொடர்ந்து வாசிக்க…)

திலீபன்

இலங்கையில் திலீபன் ஒரு வரலாற்றுப் பதிவுக்கு உரிய பெயர் என்பது மறுக்க முடியாதது.ஆனால் அவர் வாழ்வும் மரணமும். விமர்சனத்துக்கு உரியது. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு மக்கள் மனதில் பாரிய மாறுதல்களும் சந்தோசங்களும் மீள திரும்பின.ஊரெங்கும் பறந்த புலிக்காடிகள் காணாமல் போயின.

(“திலீபன்” தொடர்ந்து வாசிக்க…)

காணாமல் போனாரா பிரபாகரன்?

தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது.

(“காணாமல் போனாரா பிரபாகரன்?” தொடர்ந்து வாசிக்க…)