எமது அரசியல் போராட்டத்தில் திருமதி மங்கையற்கரசி ஓர் விடிவெள்ளி – ஆனந்தசங்கரி

இலங்கை தமிழர் வரலாற்றில் தமிழ் மக்களின் பிரச்சனையில் தீவிரமாக செயற்பட்டு பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்களையும் பட்டு நியாயமற்ற முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஒரு உத்தம தலைவன் எம்மை விட்டு பிரிந்து 27 வருடங்களுக்குள் அமிர்தலிங்கம் யார் என்று கேட்கின்ற இளைய தலைமுறையினருக்கு திருமதி மங்கையற்கரசி யாரென்று விளங்கப்படுத்துவது சுலபமான காரியமல்ல.

(“எமது அரசியல் போராட்டத்தில் திருமதி மங்கையற்கரசி ஓர் விடிவெள்ளி – ஆனந்தசங்கரி” தொடர்ந்து வாசிக்க…)

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒப்புக்கொண்டார்! – சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று அன்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நோர்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சொல்ஹெய்ம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “To End A Civil War” என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது. அந்த நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தனக்கு இருந்த தொடர்புகள், பாலசிங்கம், பிரபாகரன் உள்ளிட்டோர் குறித்து விவரித்துள்ளார் சொல்ஹெய்ம்.

பாலசிங்கத்துக்கே தெரியாமல் சொல்ஹெய்ம் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை குறித்து பாலசிங்கத்திடம் முதலிலேயே தெரிவிக்கவில்லை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன். ராஜீவ் காந்தி மே 21, 1991ல் கொல்லப்பட்டார். அதன் பிறகு சில வாரங்கள் கழித்தே பிரபாகரனும், பொட்டு அம்மானும், பாலசிங்கத்திடம் விவரத்தைக் கூறியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை குறித்து நான் பின்னர் பாலசிங்கத்திடம் கேட்டபோது, விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த மிகப் பெரிய தவறு இது என்று உடனடியாக ஒத்துக் கொண்டார். மிகப் பெரிய வரலாறு என்று அவர் திரும்பவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இது ஒட்டுமொத்த சீரழிவு என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை என்றும் கூறினார் பாலசிங்கம். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் அமைதிப் பணிக்காக வந்த இடத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தது. இந்த நிலையில் 91 தேர்தலில் மீண்டும் ராஜீவ் வென்று ஆட்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி நடந்தால் அவர் மீண்டும் படையை அனுப்பலாம். அது தங்களுக்கு பாதகமாக அமையும் என்று பிரபாகரன் எதிர்பார்த்தார். இதனால் ராஜீவ் காந்தியைக் கொல்லும் முடிவை அவர் எடுத்தார்.

சொல்ஹெய்ம் மேலும் கூறுகையில், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகளை பாலசிங்கம் ஏற்படுத்தி வந்தாலும் கூட, இந்தியா மீதுதான் அவருக்கு தனிப் பிரியம் இருந்தது. அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தை கடுமையாக விமர்சித்தவரான நீலன் திருச்செல்வத்தை விடுதலைப் புலிகள் கொன்றதை நியாயப்படுத்தினார் பாலசிங்கம். அவரைக் கொன்றது நாங்கள்தான். காரணத்தைச் சொல்ல நாங்கள் தயார். கேட்க நீங்கள் தயாரா என்று என்னிடம் பட்டென்று கேட்டார் பாலசிங்கம்.

பிரபாகரனை போர் தாகம் கொண்டவர் என்று ஒருமுறை என்னிடம் வர்ணித்தார் பாலசிங்கம். அதேசமயம், பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகள் தலைமை, தங்களது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்ற முயன்று வருவதாகவும் கூறினார். அன்டன் பாலசிங்கம் மிகவும் வெளிப்படையானவர். தவறுகளை ஒப்புக் கொள்வார். விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த பல தவறுகளை என்னிடம் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று என்னிடம் பலமுறை கூறியுள்ளார். மிகச் சிறந்த மனிதர். அவர் மீதான மரியாதை எனக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருந்தது. எனக்கு நல்ல நண்பராக இருந்தார் என்று கூறியுள்ளார் சொல்ஹெய்ம்..

சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போட ஆரம்பித்து இப்போது அண்ணளவாக இரண்டு வருடங்கள் நிறைவுறுகின்றன. சமூக வலைத்தளங்கள், தேசியம் என்ற பெயரில் ஊடக வியாபாரம் நடத்திய இணையங்கள், அரசியல் கட்சிகள் என்று விக்னேஸ்வரனை காட்டி மக்களை ஏமாற்றிய கும்பல்கள் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளிலேயே நிலை கொண்டிருந்தன. இவர்களில் பொதுவாக அனைவருமே மக்களின் அவலங்களையும் கண்ணீரையும் தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர். விக்கியை இயக்குவதற்கென்றே புலம்பெயர் நாடுகளில் குழுக்களும் தனி நபர்களும் உருவாகியிருந்தனர். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டிருந்த இக் குழுக்களும் தனி நபர்களும் இந்திய மற்றும் அமெரிக்க நலன்களுக்காகச் செயற்படுபவர்களாகக் காணப்பட்டனர்.

(“சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

மனிதாபிமானம் வேண்டாமா?

மதுரை மாவட்டத்தில் நடந்திருக்கும் இலங்கை அகதியின் தற்கொலை நம் அமைப்பின் முன் பல கேள்விகளை முன்வைக்கிறது. மதுரை மாவட்டம், உச்சபட்டி அகதிகள் முகாமில் வசித்தவர் ரவீந்தரன். முகாம்களில் வசிக்கும் அகதிகளுக்கு முக்கியமான வாழ் வாதாரம், அரசு சார்பில் ஆட்களைக் கணக்கிட்டு வழங்கப்படும் மாத உதவித்தொகை. அப்படியான மாத உதவித்தொகைக்கான கணக்கெடுப்புக்கு மறுவாழ்வுத் துறை ஊழியர்கள் சென்றிருக்கின்றனர். அன்றைய தினம் ரவீந்திரன் வீட்டில் அவருடைய மகன் வெளியே சென்றிருந்திருக்கிறார். மகன் வீட்டில் இல்லாததால், அவருடைய பெயரைக் கணக்கில் சேர்க்க ஊழியர்கள் மறுத்திருக்கின்றனர். கணக்கில் சேர்க்கவில்லை என்றால், அவருடைய மகனுக்கான உதவித்தொகை கிடைக்காது என்பதால், ரவீந்திரன் கெஞ்சியிருக்கிறார். ஊழியர்கள் தொடர்ந்து கெடுபிடி காட்டவும் மன உளைச்சலுக்குள்ளான ரவீந்திரன், உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போதும் பலன் கிடைக்காததால், அதிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

(“மனிதாபிமானம் வேண்டாமா?” தொடர்ந்து வாசிக்க…)

மங்கையர்கரசி என்ற தைரியமான பெண்மணி….இவரின் இழப்பு எமக்கும் வலிக்கின்றது

(தோழர் ஜேம்ஸ்)

தனது மதுரக் குரலால் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பியது இன்னமும் கண் முன்னே இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 1983 இற்கு பின்னர் தமிழ் நாட்டில் அஞ்ஞாத வாசம் செய்த போது அவ்வப் போது அமிர் அண்ணனை சந்திக்க செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் விருந்தோம்பல் செய்வது கண் முன்னே வந்து செல்கின்றது. எமக்குள் பல அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அமிர்தலிங்கத்தின் கொலையை நாம் என்றும் ஏற்கவில்லை இவரின் மரணச் சடங்கை செய்ய யாவரும் பயந்திருந்த வேளை அவ்வேளை இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை ஆட்சி செய்த ஈபிஆர்எல்எவ் இனர் வடக்கு கிழக்கு எங்கும் அமிரின் பூத உடலை எடுத்துச் சென்று உரிய மரியாதையுடன் அடகம் செய்த போது இறுதியாக இவரை சந்தித்தது மட்டும் ஞாபகம். அமிருடன் இணைந்து செயற்பட்ட ஒரு வலிமையான பெண்மணி.. மனது கனக்கின்றது.

தைரியமாக பெண்களையும் வீதிக்கு இறக்கி சத்தியாக்கிரகம் என்ற சாத்வீகப் போராட்டத்தில் ஆண்களுக்கு சமனாக சமராடிய உன்னத செயற்பாடு என்னை இவர்பால் விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இடதுசாரியத்திற்கு எதிரான இவர்களின் நிலைப்பாடு என்னை எப்போதும் இவர்கள் மீது முரண்பாட்டை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்திய உழைப்பில் அமிர் அண்ணாவுடன் தோள் கொடுத்து செயற்பட்டது வரலாற்றில் இடம்பெற்றுத்தான இருக்கப்போகின்றது. முரண்பாடுகளை பேசும் ஒரு வகை அலைவரிசையை இந்தத்தம்பதியினர் கொண்டிருந்ததும் வேறு எந்த மிதவாதத் தலைவர்களிடமும் இல்லாத சிறப்பு அம்சம்ஆழ்ந்த வருத்தங்கள் அமிருடன் அவரின் சகாத்தம் முடிந்துவிட்டது என்ற ஆதங்கங்களும் உண்டு.

உறவுப் பாலம்

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

‘சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு வடக்கு பிரதேசத்தில் ஊழியர்களைப் பெற்றுக்கொண்ட போது பலர் அதனை எதிர்த்தனர். இராணுவத்துக்கு ஆள் சேர்க்கவும் தேர்தலை முன்னிட்டும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை எனப் பலரும் வதந்திகளைப் பரப்பினர். எனினும், நாம் இந்தப் பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து விடவில்லை. இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நாம் மேற்கொண்ட முயற்சி, இன்று நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

(“உறவுப் பாலம்” தொடர்ந்து வாசிக்க…)

புனர்வாழ்வு ஒன்றுதான் வழியென்றால்?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 12 வது நாளாக தொடர்கின்றது. இன்று வரை, அவர்களின் உடலநிலை மோசமாக பாதிக்கப்படவில்லை என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை வைத்தியசாலை மருத்துவர்கள் கைதிகளின் உடல் நிலையை அடிக்கடி அவதானித்து வருகின்றனர். உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் எவரும் உயிரிழக்க நேரிட்டால் அரசாங்கத்திற்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

(“புனர்வாழ்வு ஒன்றுதான் வழியென்றால்?” தொடர்ந்து வாசிக்க…)

தார்மீக வலுவிழந்த தமிழ் கபடதாரி அரசியல்!

தமிழ் அரசியல் என்பது யதார்த்தத்திற்கும் அதாவது தமிழ் அரசியல் வாதிகள் அவர்களின் இருப்பிற்கும் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் உரையாடல்கள் அவர்களது செயற்பாடுகள் சொந்த வாழ்க்கை நடைமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆகும். சுயநிர்ணயம் ,தேசம், தமிழர் தம்மைத்தாமே ஆள என வார்த்தை ஜாலங்கள் செய்வார்கள். சகல தேர்தல் கூட்டங்களிலும் ,அன்றாட நிகழ்வுகளிலும் ,பாராளுமன்றம், மாகாண சபைகளிலும் இந்த வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.

(“தார்மீக வலுவிழந்த தமிழ் கபடதாரி அரசியல்!” தொடர்ந்து வாசிக்க…)

படிக்கப் போன எமது பிள்ளைகளை மடக்கிப் பிடித்து படையணியில் சேர்த்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் !

(சலசலப்பு என்ற இணையத் தளம் வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. இக்கட்டுரையூடாவே இவர்கள் அம்பலப்படுவதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சியை ஒழித்து நின்று கொண்டு காட்டிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு செயல்படும் இழிச்செயல்களை அம்பலப்படுத்துவதற்காகவும் அவர்களின் கட்டுரையை அப்படியே பிரசுரிக்கின்றோம் – ஆர்)

1987ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “ஒப்பரேஷன் லிபரேஷன்” இராணுவ நடவடிக்கையின் போது தாக்குப்பிடிக்க முடியாமல் புலிகள் பின்வாங்கினர். இதைத்தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்தது. வட-கிழக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு, தற்காலிகமாக இணைந்த வட கிழக்கின் மாகாண சபையை ஆளுகின்ற அரிய சந்தர்ப்பம் ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்திற்கே கிடைத்தது.

(“படிக்கப் போன எமது பிள்ளைகளை மடக்கிப் பிடித்து படையணியில் சேர்த்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் !” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்தும் இடம்பெற்றிருக்கவில்லை. இது இந்திய ஊடகங்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக புதுடில்லியைத் தளமாக கொண்ட ஆங்கில ஊடகங்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

(“தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா?” தொடர்ந்து வாசிக்க…)