புலிகளும் வசதியான புலி உறுப்பினர்களும்

1987ல் இந்தியப் படைகள் வருவதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும், மேட்டுக்குடிகளும் இணைந்திருந்தனர். புலிகளின் கரும்புலிகள் இல்லாத காலத்தில் புலிகளின் மேல் மட்டத்தில் சரி கீழ் மட்டதில் தளபதிகளாகவும் இருந்தவர்கள் வசதியான குடும்பங்களில் இருந்து வந்தவர்களே அதிகம். பிரபாகரன் இந்தியப் படையினருடன் யுத்தம் ஆரம்பித்ததும் இந்த மேட்டுக்குடிகளைச் சேர்ந்தவர்களும், வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தப்பியோடி இந்தியாவுக்கும், கொழும்புக்கும் சென்று வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர். காரணம் அவர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வசதி படைத்தவர்களாக இருந்தனர்.

(“புலிகளும் வசதியான புலி உறுப்பினர்களும்” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேசத்திடம் அடிபணியும் அரசு! மகிந்த ஆதங்கம்!

வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டு புலம்புவதில் பயன் இல்லை. வெற்றிகள் மகிழ்ச்சியை, மனநிம்மதியை தரலாம். ஆனால் நான் என்ற இறுமாப்பில் எவருக்கும் அடிபணியேன் என்ற பிடிவாதம் எதிர்ப்பாளர்களை ஒன்றிணையச் செய்து அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிவரும். முன்னாள் ஜனாதிபதியின் இன்றைய நிலையும் அதுதான். 2005ல் பதவி ஏற்றபோது, மகிந்த புலிகளுடன் சமரசம் பேசவே விரும்பினார். தன்வெற்றிக்காக புலிகளுடன் பணப்பரிமாற்றம் செய்ததால் தான் அந்த முடிவை அவர் எடுத்தார் என கூறப்படுவது மட்டும் காரணம் அல்ல. உண்மையில் அப்போது புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாகவும், ராணுவம் சோர்வு நிலையிலும் இருந்ததுமே கள நிலவரமாகும். சகோதரர் கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக செயல்பட தொடங்கியதும், அவரே சரத் பொன்சேகாவை ராணுவ தளபதியாக நியமிக்கும்படி சிபாரிசு செய்ததும் மகிந்தவுக்கு சற்று தெம்பை கொடுத்தபோதும் அவர் யுத்தத்துக்கு தயாராகவில்லை.

(“சர்வதேசத்திடம் அடிபணியும் அரசு! மகிந்த ஆதங்கம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம்!

இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். நீண்டகால தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் பதில் காணும் விடயத்தில் இம்மாற்றங்கள் எந்தளவு ஆழம் மிக்கவையாய் அமைந்துள்ளன? மாறிவந்த அரசாங்கங்கள் மீதும் ஏன் இலங்கை அரசு மீதும் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள சரித்திரபூர்வ நம்பிக்கையீனத்தைக் கருத்திலெடுக்கையில், இதுபோன்ற கேள்விகள் முற்றிலும் நியாயமானவையே. ஆயினும், இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை நிதானமாய் அலசிப் பார்க்கையில், அங்கு இடம்பெறும் மாற்றத்தின் அடிநாதம், அதை வழிநடத்தும் மனோநிலை என்பவற்றை நாம் இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது. அதேவேளையில், சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் குறிப்பிடத்தக்க அளவு மாறிவிட்டதும், அரும்புகின்ற மாற்றங்களை ஊக்குவித்துக் காப்பதற்கு உயர்மட்ட முயற்சிகளை அது தொடங்கியுள்ளதும் முக்கியமாக நோக்கப்பட வேண்டியவை. அரசியல் கருவியாக சர்வதேச ஆதரவில் பெருமளவில் தங்கியுள்ள ஒரு சமூகம் இவ் உண்மைகளை நன்கு உணர்ந்திருத்தல் அவசியம்.

(“தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

பொது சந்தை போலான வட மாகாணசபை பேரவை கூட்டம்!

2013ல் மலர்ந்தது தமிழர் அரசு என்ற பத்திரிகை தலையங்கத்தை பார்த்து இது சற்று அதிகப் பிரசிங்கதனம் என நினைத்தாலும், மாற்றம் வரும் என நம்பியவர்களில் நானும் ஒருவன். காரணம் எனது சொந்த விஜயமாக நாட்டில் அதுவும் வடக்கில் நின்றபோது போது தான், வட மாகாணசபபை தேர்தல் நடந்தது. கூட்டமைப்பில் இணைத்து கொள்ளப்பட்ட புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வவுனியா நகரசபை தலைவர் லிங்கநாதன் போன்றவர்கள், வேட்பாளராக போட்டியிட களம் இறங்கிய அந்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை த.தே.கூ பெறும் என அப்போதே தெரிந்திருந்தது. பண்ணாகத்தில் கோவில் முன்றலில் நடந்த கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமித்து மேடையில் இருந்ததை பார்த்தபோது சாதிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் துளிர்விட்டது. ஆனால் அண்மைய நிகழ்வுகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் நடத்திய கூட்டுப்பொறுப்பு என்ற போர்வையில் விட்ட தவறுகள் இன்று வெட்ட வெளிச்சமாகின்றன.

(“பொது சந்தை போலான வட மாகாணசபை பேரவை கூட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் பெருச்சாளி ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றம்! காப்பாற்றிய விக்னேஸ்வரன் சரணாகதி!

வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கும் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான்கு தசாப்த ஆயுதப் போராட்டத்தையும் அதன் இழப்புக்களையும் வட மகாணசபைக்குள்ளும், யாழ்ப்பாணத்தினுள்ளும் முடக்கி அழித்து வாக்குப் பொறுக்கும் அரசியல் கலாச்சாரத்தை மீள் கட்டமைத்த பெருமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், விக்னேஸ்வரனையுமே சாரும். வட மாகாண சபையின் ஊழல் பெருச்சாளிகளுள் அதிஉச்ச பங்காற்றியவர் போ.ஐங்கரநேசன் என்பது குறிப்பிடத்தக்கது. சுன்னாகம் நச்சு நீர் தொடர்பான பிரச்சனையில் ஐங்கரநேசனின் ஊழல் தொடர்பாக இனியொரு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஐங்கரனேசன், சுன்னாகத்தில் அழிப்பை நடத்திய நிறுவனத்தைக் காப்பாற்ற போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாகாண சபையில் அதன் உறுப்பினரும் புளொட் அமைப்பைச் சார்ந்தவருமான கே.ரீ.லிங்கநாதன் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

(“ஊழல் பெருச்சாளி ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றம்! காப்பாற்றிய விக்னேஸ்வரன் சரணாகதி!” தொடர்ந்து வாசிக்க…)

அப்பன் குதிருக்குள் இல்லை!

இலங்கையில், கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஆர்வக் கோளாறில் செய்யும் பல விடயங்கள், இவர்களினதும் இவர்கள் சார்ந்தோரினதும் தலைகளில் இவர்களே மண்ணை வாரி இறைக்கும் நிலையினை ஏற்படுத்தி விடும் அபாயமுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை வந்திருந்தார். இலங்கை மீது மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய ஜெனீவா பிரேரணையினை அமுலாக்குதல் பற்றியதாக ஹுஸைனின் விஜயம் அமைந்திருந்தது.

(“அப்பன் குதிருக்குள் இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?

நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி நிதானமாக தொடர்ந்து சென்றால், முடிவு எமக்கு சாதகமாகும். அதேவேளை வேகமாக செயல்படுவதாய் இறுமாப்பாக புறப்பட்டு, நிலமை எமக்கு சாதகமாக இருப்பதாக தப்புக்கணக்கு போட்டால், காரியம் கைநழுவி போகும் நிலை ஏற்படலாம். இதனைத்தான் அண்மையில் யாழில் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், ஒரு முக்கியமான சந்திப்பை தமிழ் அரசு கட்சி தலைமையகத்தில் திரு மாவை சேனாதிராசா உடன் நடத்தியது கோடிட்டுகாட்டுகிறது.

(“முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?” தொடர்ந்து வாசிக்க…)

அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழவைக்கும் வடமாகாணம்! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?

வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக, ஓரளவு தமிழ் மொழி பேசும் திறனுள்ள இடதுசாரி அரசியலில் பற்றுள்ள, மேல் மாகாணத்தின் முதலமைச்சராகவும் மத்தியில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகவும் விளங்கிய ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். ரெஜினோல்ட் குரே ஒரு மூத்த அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராகி. சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராக இருந்தார்.

(“அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழவைக்கும் வடமாகாணம்! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

ஜேஆர் அறிவிப்பு! பண்டா அமுலாக்கல்! பெரேரா எதிர்ப்பு! கொல்வின் விளக்கம்! பதவிக்காக கொள்கையை கைவிட்டவர்கள்!

காந்தியின் வெள்ளையனே வெளியேறு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட ஜே ஆர், தான் ஆற்றிய உரையில் இலங்கை பல மொழி பேசும் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்படல் வேண்டும் என்ற தன் நிலைப்பட்டை தெரிவித்தார். பின்பு அநகாரிக தர்மபாலாவின் சிந்தனை வழியில் சிங்களம் தேசிய மொழியாக வேண்டும் என, சட்டசபையில் கூறி தன் அரசியல் நிலைபாட்டை மாற்றிக்கொண்டார். அதேபோல பிரித்தானியாவில் மேற்படிப்பு படித்து நாடு திரும்பிய பண்டாரநாயக்க, இலங்கை மூன்று சமஸ்டி ராச்சியங்களாக மாற்றம்பெற வேண்டும் என கூறினார். ஆனால் தான் ஆட்சிக்கு வந்ததும் தமிழரசு கட்சி கோரிய சமஸ்ட்சிக்கு ஒப்பமிட்டு பின்பு அதனை கிழித்து எறிந்தார்.

(“ஜேஆர் அறிவிப்பு! பண்டா அமுலாக்கல்! பெரேரா எதிர்ப்பு! கொல்வின் விளக்கம்! பதவிக்காக கொள்கையை கைவிட்டவர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனின் கண்ணீரால் சங்கரி கடுப்பில்…

சம்பந்தனுக்கு கண்ணீர், மக்களிற்கு இரத்தம் வடிகிறது!!! எனும் தலைப்பில் வீ.ஆனந்தசங்கரியினால் ஊடக அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது, இதில் அரசியல் கைதிகள், முன்னால் போராளிகள், கணவனை இழந்த இளம் பெண்கள் பொன்றோரின் நிலையை அறிந்து, அவர்களிற்கு கிடைக்க வேண்டியதை பெற்று கொடுக்க அஎதிர் கட்சி தலைவராக ஏதாவது முயன்றுள்ளீர்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திரு.சம்மந்தன் ஐயா அவர்கள் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டிருந்தபோது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட வேளை கண்கள் கனிந்து கண்ணீர் முட்டியதாக வந்த செய்தி எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. எமது பிள்ளைகள் சிறையில் விடுதலை பற்றிய கனவு கண்டு கொண்டு பல தடைவ ஏமாற்றமடைந்து விரக்தியுடன் இருக்கும் அரசியல்கைதிகளை நினைத்து வராத கண்ணீர், காணாமல் போன உறவுகளின் நிலையறியாது, நாளும் பொழுதும் கண்ணீருடன்வாழும் ஆயிரமாயிரம் தாய்மார்கள் கதறி அழும்போது வராத கண்ணீர், யுத்தத்தின் இறுதி நாட்களில் அம்மக்களை விடுவிக்க வந்த சந்தர்ப்பத்தை நளுவ விட்டுவிட்டடோம் என்ற குற்ற உணர்வில் வரவைக்காத போது இன்று மட்டும் தேசிய கீதம் தமிழில் பாடபட்டபோது எப்படி கண்கள் பனித்தன என்பது ஆச்சரியமானதே.

(“சம்பந்தனின் கண்ணீரால் சங்கரி கடுப்பில்…” தொடர்ந்து வாசிக்க…)