மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை கண்டு பிடிக்க வேண்டுமென்று இலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் மனு கொடுக்க விரும்புகிறேன் என்று இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
Category: இலங்கைத் தமிழர் போராட்டம்
Sri Lankan Tamil Freedom Struggle
கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை
(கருணாகரன்)
வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்துகின்றன.
(“கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை” தொடர்ந்து வாசிக்க…)
புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவை இடைமறித்துக்கேட்ட புளொட் அமைப்பின் உறுப்பினர் ஓருவர் அதனை தனது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்- அவர் அதனை உடனடியாக இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிற்கு தெரிவித்தார்.
(“புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்
தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திலிருந்து வெளியில் வந்த பின்னர் புற்றுநோய் ஏற்படவில்ைலயெனவும் அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்க்குள்ளானதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார்.
(“தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்” தொடர்ந்து வாசிக்க…)
பயிரை மேய்ந்த வேலிகள்..(6)
(பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)
மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.
ரா உளவாளியாக நியமிக்கபட்ட மாத்தையா கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார் பிரபல பத்திரிகையாளர் புத்தகத்தில் தகவல்
பிரபல பத்திரிகையாளர் நீனா கோபால். 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் நீனா கோபால்தான் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார். தற்போது “The Assassination of Rajiv Gandhi” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நீனா கோபால் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் மாத்தையா என்ற கோபாலசுவாமி மகேந்திரராஜா குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்: நாடி பிடிப்பு
(மொஹமட் பாதுஷா)
தீர்வுத்திட்டத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கணை இணைத்தல் பற்றிய கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று அறிந்து கொள்வதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.
(“வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்: நாடி பிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!
(Yalini)
யாழ்ப்பாண ‘கம்பஸ் சயன்ஸ்பக்கல்றி டீன்‘ ஆக இருப்பவர் சற்குணராசா. 1996-2000ம் ஆண்டு காலப்பகுதியில் ‘ஆமி‘க்காரர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது ‘கம்பஸ்சில‘ படிக்கிற பொடியல் இவருக்கு வைத்த பட்டம் ‘சக்கர்‘. அந் நேரம் ‘சக்கர்‘ கோவில் வீதியில் நல்லுாருக்கு அருகாமையில் ‘கந்தன்கருனை‘ என்ற வீட்டுக்கு அருகில் உள்ள மேல்மாடி வீட்டில் வசித்து வந்தார். அந்நேரம் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் போராளிகளில் இருவர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கும் முகாமைத்துட பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்று வந்தார்கள். இப் போராளிகளில் ஒருவரின் சொந்த இடம் மன்னார். இன்னொருவர் கிளிநொச்சி. இரு போராளிகளும் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கிலோமீற்றர் துாரத்தில் இருந்த வயோதிபத் தம்பதிகளி்ன் வீட்டில் தங்கியிருந்தனர்.
(“‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!” தொடர்ந்து வாசிக்க…)
இனப்பிரச்சனையில் சிங்களத் தலைவர்களின் கண்ணோட்டம்
(சுகு, சமரன்)
இலங்கையின் சிங்கள தமிழ் அரசியல் தலைமைத்துவத்துவங்களிடம் பொதுவான போக்கொன்று நிலவுகிறது. தேசிய இனப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் இதய சுத்தியான அக்கறைகள் இவர்களிடம் கிடையாது. விதிவிலக்குகள் இருக்கலாம். இனப்பிரச்சனை நீடித்து நிலவுவது தமது அதிகாரக் கைப்பற்றல் அரசியலுக்கு உதவும் என்பது இவர்களின் திடமான நம்பிக்கை. இந்த அற்பத்தனம் இலங்கை சமூக பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு என்றென்றும் தடையாகவே இருக்கும் – சுகு சறீதரன்
(“இனப்பிரச்சனையில் சிங்களத் தலைவர்களின் கண்ணோட்டம்” தொடர்ந்து வாசிக்க…)
திராய்க்கேணி படுகொலைகள்
திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea’ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.