புதிய தமிழ்மக்கள் பேரவை

வடக்கு முதலமைச்சரின் புதிய தமிழ்மக்கள் பேரவை தமது மாகாணத்தில் வாழும் மக்களை பற்றியும் அவர்களின் அன்றாட பிரச்சினைகளை பற்றியும் கதைப்பதாக தெரியவில்லை. ஐ.நா வை பற்றியும் ரணில் அரசாங்கத்தையும் அதற்கு துனைபோகும் த.தே.கூ வின் தலைமையையும் குறிவைக்கின்றதாகவே உள்ளது.

(“புதிய தமிழ்மக்கள் பேரவை” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் புதுவையை மறந்தோர் அரசியல் சோரம்!

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிராத கலை இலக்கியவாதிகளை யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். ஏறத்தாள எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு தேவைக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள்தான். கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் ஒரு பத்திரிகை நேர்காணலில் காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது, எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும் என்று சொல்லி இருந்தார்.

(“வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் புதுவையை மறந்தோர் அரசியல் சோரம்!” தொடர்ந்து வாசிக்க…)

மின்னல் ரங்காவின் யன்னல் பார்வை !

ஒரு விடயத்தை அறிவு பூர்வமாகவும் அலசலாம் விசமத்தனமாவும் அலசலாம். அந்த வகையில் கடந்த காலங்களில் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் மலையகத்திலும் வன்னியிலும் போட்டியிட்ட பிரஜைகள் முன்னணி அடைந்த படுதோல்வி அதன் தலைவர் ரங்காவிற்கு ஏற்படுத்திய பாதிப்பு அவரை மது உண்ட மந்தி போல சேட்டை செய்ய தூண்டுவதாய் அவரது மின்னல் நிகழ்ச்சி அமைகிறது.

(“மின்னல் ரங்காவின் யன்னல் பார்வை !” தொடர்ந்து வாசிக்க…)

30 வருடங்களின் பின் மீண்டும் துளிர்விடும் தேவானந்தா (டக்ளஸ்) வழக்கு விசாரணை?

சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாது துரத்துகிறது தேவானந்தாவை சூளைமேடு திருநாவுகரசு கொலை வழக்கு. 1986ல் நடந்த சம்பவத்தின் பொலிஸ் தரப்பு சாட்சிகள் 18 பேரும் 2016 ஜனவரி 18ல் நீதிமன்றில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி கூடுதல் செசன் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார். பலத்த வாத பிரதிவாதங்கள் கொண்டதே இந்த வழக்கு என்பது என் வாதம்.

(“30 வருடங்களின் பின் மீண்டும் துளிர்விடும் தேவானந்தா (டக்ளஸ்) வழக்கு விசாரணை?” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வர் தலைமையில் குளிர்காய விரும்புவோர்!!!

அண்மையில் பேசப்படும் விடயமாக பெரிது படுத்தப்படுவது வட மாகாண சபை முதல்வர் பற்றியதே. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலாக அவர் செயல்ப்படுவது போலவும் அதன் தலைமை அவர் வசம் கொடுக்கப்பட வேண்டும் என்பது போலவும் ஒரு நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது. அண்மையில் யாழ் விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் கூட முதல்வரிடம் உங்களுக்குள் ஏதாவது முரண்பாடு உண்டா என கேட்டதாகவும் அதற்கு கொள்கை ரீதியான சில முரண்பாடுகள் உண்டு ஆனால் எமக்குள் பிரிவினை இல்லை என தான் கூறியதாகவும் முதல்வர் பேட்டியளித்துள்ளார்.

(“வடக்கு முதல்வர் தலைமையில் குளிர்காய விரும்புவோர்!!!” தொடர்ந்து வாசிக்க…)

ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு பயிற்சி பெற அனுமதி வழங்க வேண்டும் – மக்கள் ஆசிரியர் சங்கம்

1943 என இலக்கமிடப்பட்ட 2015.11.27ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி ஆசிரிய கலாசாலைகளுக்கு இரண்டு வருட ஆசிரிய பயிற்சியினை பெறுவதற்காக ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன. இதில் குறைந்தது மூன்று மாத கால ஆசிரிய சேவை அனுபவம் கொண்ட பயிற்றப்படாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என குற pத்துரைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் கடமையாற்றும் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய ஆசிரிய உதவியாளர்கள் விண்ணப்பிக்க அனுமதிபெற மாகாண கல்விப் பணிப்பாளரிடம் சென்ற போது ஆசிரிய உதவியாளர்கள் எவருக்கும் பயிற்சிக்கு அனுமதி வழங்காதிருக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பயிற்சிக்கு அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆசிரிய உதவியாளர்களிடமிருந்து மக்கள் ஆசிரியர் சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அத் தீர்மானத்திற்கு தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கும் அதேவேளை பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டுமென மக்கள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் ஊவா மாகாண கல்வி பணிப்பாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

(“ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு பயிற்சி பெற அனுமதி வழங்க வேண்டும் – மக்கள் ஆசிரியர் சங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளை ஏமாத்திய பச்சை துரோகிகள் யார்…???

உலக நாடுகள் அனைத்திளும் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும் அனைத்து தமிழ் மீடியாக்களும் புலிகளுக்கு ஆதரவாக பயத்திலும் விசுவாசத்திளும் செயல்பட்டாலும் புலிகள் ஏன் BBC, CNN, மற்றும் நாடு அனைத்திளும் ஆர்பாட்டம் செய்த தலைமை குளுக்களுக்கு ஏன் சரண்டர் ஆகும் விடயத்தை கூறவில்லை…???

(“புலிகளை ஏமாத்திய பச்சை துரோகிகள் யார்…???” தொடர்ந்து வாசிக்க…)

நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள்

(என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 18)

இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை

1948இல், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. குறித்த சட்டமானது பின்வருமாறு வழங்கியது:

(அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது.

(ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவார். அத்துடன்

(இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர், இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும், அல்லது,

(ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.

(“நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

புலிகள் அழிந்துவிட்டார்கள். இனிக் குண்டுகள் வெடிக்காது. தந்தை செல்வா சொன்னாராம் இனித் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று. ஆனால் கூட்டமிப்பு இருக்கும்வரை தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. வடக்கின் வசந்தத்தை ஆரம்பித்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மகிந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைகளை எதிர்த்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. காப்பற் வீதிகள் , பாலங்கள், கட்டிடங்கள், ரயில் சேவை தேவை இல்லையென வடக்கின் வசந்தத்தை கூட்டமைப்பினர் எதிர்த்தது யாவருக்கும் தெரியும்.

(“தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.” தொடர்ந்து வாசிக்க…)

எம் தீராத நோய் பிரிவினை !!!

எல்லா வாதத்துக்கும் மருந்துண்டு அனால் பிடிவாதத்திற்கு? அண்மையில் வரும் செய்திகள் எத்தனை அனுபவப் பட்டும் திருந்தா மன நிலை கொண்டவர் நாம் என்பதை பகிரங்கப் படுத்துகிறது. வாலிபர் காங்கிரஸ் பகிஸ்கரித்த தேர்தல் மீண்டும் நடந்த போது தமிழ் காங்கிரஸ் அந்த நான்கு ஆசனங்களை கைப்பற்றியது. வாலிபர் காங்கிரஸ் செயல் இழந்தது. பின் மலையாக மக்களின் வாக்குரிமை பறிப்பை காரணம் காட்டி தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் அரசு கட்சி உதயமானது. வடக்கு கிழக்கு மக்களை இந்த இரு பெரும் கட்சிகளும் நீண்ட காலமாக பிரித்தே வைத்திருந்தன.

(“எம் தீராத நோய் பிரிவினை !!!” தொடர்ந்து வாசிக்க…)