(மப்றூக்)
ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளூர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளூராட்சி மன்றங்களில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.க கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் யுத்தத்துக்காக, கட்சிகள் அனைத்தும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆளுந்தரப்பாக ஐ.தே.க உள்ளதால், பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதற்குரிய எத்தனங்களை அந்தக் கட்சி எடுக்கும்.