அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டவுடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தளபதிகளில் ஒருவரும், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் அனைவராலும் கேணல் கருணா என அழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளிதரனும் பேச்சுவார்த்தைக் குழுவில் கலந்துகொண்டிருந்தார். கருணா அம்மான் புலிகள் இயக்கத்திலிருந்து ஏன் பிரிந்தார். எதற்காக பிரிந்து சென்றார். இந்தப் பிரிவுக்கு பலரும் உரிமைகோருகிறார்கள். இதன் உண்மை நிலை என்ன என்பதை அவரிடமே கேட்டோம்.
(“பேச்சுவார்த்தையை இழுத்தடித்துச் செல்வதே பிரபாகரனின் விருப்பமாக இருந்தது!!!” தொடர்ந்து வாசிக்க…)