ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற புதிய அரசியல் கூட்டணியொன்று, கடந்த வாரம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உதிரிகளின் கூட்டணி என்கிற எதிர்வினையை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுள்ள இந்தப் புதிய கூட்டணி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா அல்லது மற்றொரு தேர்தல் கூட்டணியா, என்கிற விடயங்கள் பற்றியே இந்தப் பத்தி கவனம் செலுத்த விளைகின்றது.
Category: இலங்கைத் தமிழர் போராட்டம்
Sri Lankan Tamil Freedom Struggle
ரிஎன்ஏ புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்னே
ரிஎன்ஏ புதிய அரசியல் யாப்பு அம்சங்களை தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்னே நேற்று மே 8இல் றெய்னர்ஸ்லேனில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தார். இச்சந்திப்பினை Non Residential Tamils of Sri Lanka – NRTSL ஏற்பாடு செய்திருந்தது.பாராளுமன்ற உறுப்பினரும் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்கு நிபுணத்துவ உதவியை வழங்கும் குழுவிற்கு பிரதம மந்திரியால் தலைவராக நியமிக்கப்பட்டவருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ண இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பும் தேவையும் சவால்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரமும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
காத்துக்கிடக்கும் மக்கள்! தேர்தல் கூட்டு வைக்கும் கட்சிகள்?
நீண்ட அன்நிய ஆட்சி முடிவுக்கு வந்த 1948 முதல் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பு சமத்துவம். இலங்கையின் எந்த மூலையிலும் தான் விரும்பும் தொழில், வியாபாரம், வாழ்விட தேர்வே அவர்களின் விருப்பு. இந்த விருப்பு சிங்கள் மக்களிடமும் காணப்பட்டது. வடக்கிலும் கிழக்கிலும் இருந்த வெதுப்பகங்கள் உட்பட பல தொழில் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் சிங்களவர்கள். அதே போல அனுராதபுரம் முதல் தென்னிலங்கையில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, பலாங்கொடை வரை வாழைப் பழம், கோடா சுருட்டு உட்பட பலசரக்கு விற்கும் யாழ்ப்பாணத்தவர் வியாபார நிலையங்கள். தீவகத்தின் கால நிலை சூழலால் கொழும்பு நகரில் பல இடங்களில் உணவகம் நடத்தி யாழ்ப்பாண குத்தரிசி சோறு, நண்டு, றால், கணவாய், கோழிக் குழம்பு, ஆட்டுறச்சி பிரட்டல் என அசத்திய காலம் இன்று சிலர் அறிந்ததும் பலர் அறியாததும்.
(“காத்துக்கிடக்கும் மக்கள்! தேர்தல் கூட்டு வைக்கும் கட்சிகள்?” தொடர்ந்து வாசிக்க…)
கூட்டமைப்பிற்கு மாற்று உடனடியாக சாத்தியப்படுமா?
(விஸ்வா)
DTNF தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு அமைப்பு – அல்லது கட்சி உருவாகும் சாத்தியம் உள்ளதா? அவ்வாறு ஒரு அமைப்பு உருவானால் அதனால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறமுடியுமா? இவ்வாறான கேள்விகள் தமிழ் அரசியல் தளத்தில் நின்று சிந்திப்பவர்களுக்கு எழுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக குறைகூறும் கட்சிகள் எவையுமே அதற்கு மாற்றாக மேலெழுந்து மக்கள் செல்வாக்கைப் பெறும் நிலைமை இதுவரை காணப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உள்ள சக்திகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை- கூட்டணியை உருவாக்கினாலும் கூட அது மக்களின் செல்வாக்கை பெற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.
(“கூட்டமைப்பிற்கு மாற்று உடனடியாக சாத்தியப்படுமா?” தொடர்ந்து வாசிக்க…)
இணைந்த கைகளை வெட்டிய துரோகத்தின் நினைவு!
TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின்………..
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது.
தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார்வையோ அதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமோ இருந்திருக்கவில்லை.
(“இணைந்த கைகளை வெட்டிய துரோகத்தின் நினைவு!” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (SDPT) யின் மே தின அறைகூவல் 2016 மே 1 – தொழிலாளர் தினம்
மேதினம் ஒடுக்கப்பட்ட மக்களின் தினம். சமூக பொருளாதார ரீதியில் இம் மக்களின் வாழ்க்கைநிலை பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக வடக்கு-கிழக்கிலும்; எவ்வாறிருக்கிறது? வடக்கு- கிழக்கைப் பொறுத்தவரை பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவத்தை, ஆட்சிப் பொறுப்பை கைகளில் வைத்திருக்கும் தமிழ் அரசியல் தலைமை சாதாரண மக்களின் அபிலாசைகள் தொடர்பாக என்ன செய்கிறார்கள், செய்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. இதற்கான பதில்; வெறுமை, விரக்தி, அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. இவர்கள் மக்களுக்கு உருப்படியாக எதைச் செய்தார்கள் என்பதை பட்டியலிட முடியவில்லை.
தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை
வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை வாசிக்கும் பலருக்கு, 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி, அன்றைய இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலாவதும் கடைசியுமான முதலமைச்சர் வரதராஜப் பெருமாளினால் முன்மொழியப்பட்டு, அன்றே அச்சபையில் நிறைவேற்றப்பட்ட தனி நாட்டுப் பிரகடன எச்சரிக்கைப் பிரேரணையும் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் சமர்ப்பித்த இடைக்கால சுயாட்சி அதிகாரசபையும் (Interim Self-Governing Authority- ISGA) ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்க முடியாது.
(“தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)
புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்
வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம், அரசியல் அரங்கில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்த வீடுகள், வடக்கிலுள்ள காலநிலைக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்றதல்ல என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபையின் வாதமாக இருக்கிறது.
(“புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)
ஒரு புகையிரதப் பயணம்போல் அரசியல் கட்சி ஒன்றின் பயணத்திலும் பலர் வருவார்கள் போவார்கள் – தோழர் டக்ளஸ் தேவானந்தா ஈபிடிபி செயலாளர் நாயகம்
ஒரு புகையிரதப் பயணம்போல் அரசியல் கட்சி ஒன்றின் பயணத்திலும்பலர் வருவார்கள் போவார்கள். ஒரு ஜனநாயகக் கட்சியில் இவையெல்லாம் சகஜமானவைதான். புகையிரதம் அதன் இலக்கை நோக்கி பயணத்தை தொடர்வதைப்போல், கட்சியின் பயணமும் அதன் இலக்கு நோக்கி தொடரும்.
ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து அறிந்ததும் அறிய வேண்டியதும்…..
தமிழினியின் பிறப்பிலிருந்து போராட்ட வாழ்க்கை, அவரின் தனிப்பட்ட திறமைகள், இயக்கத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகள், இறுதியில் சரணடைவு புனர்வாழ்வு, அவரின் குடும்ப பின்னணியையும் அறியக் கூடியதாக இருந்தது. இது அவர் வாழ்ந்த பெரும்பாலான வன்னி மக்களுக்கு தெரிந்தவையே.
(“ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து அறிந்ததும் அறிய வேண்டியதும்…..” தொடர்ந்து வாசிக்க…)