சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் மீண்டும் ஒருமுறை உலக அளவில் பேசுபொருளாகியது!

(Nadarajah Kuruparan)

அரசியலில் குதித்தால் அப்பன், பெரியப்பன், சித்தப்பன், மாமன், மச்சான் என தடி எடு தண்டெடு என்கிற காலத்தில், ”வாழ்வு கொடுத்த துடைப்பத்தை கைவிடேன்” என்கிற தாயும் இருக்கிறார்.

அவர்கள் தான் கம்யூனிஸ்டுகள்…

(Kanagu Kanagraj)

பொக்கன் என்பவரின் குடிசையில் அந்த மனிதர் தலைமறைவு வாழ்க்கையைத் துவங்கியபோது, அவர்தான் இ.எம்.எஸ் என்று பொக்கன் அறிந்திருக்கவில்லை…..

தேர்தல் முடிவுகளால் திருத்தம் காணுமா காங்கிரஸின் அணுகுமுறை?

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்த பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் இழந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், உத்தராகண்டில் பாஜகவுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடப் பொய்த்துவிட்டது.

வரலாறு

இதை படிக்கும்போது ஏதோ..!ஒரு வித சிலிர்ப்பு உண்டாகுது..!

*1971ல் இந்தியாவை சுற்றி வளைத்த உலகநாடுகள்*.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சகட்டத்தை நெருங்குது. சோவியத் யூனியன், “இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை” ன்னு, பாகிஸ்தானை கூப்ட்டு எச்சரிக்குது.

உங்களில் ஒருவன்.!

மீண்டும் எதிரிகளை கலங்கடித்துள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள்.!

நேற்று முதல் பல நண்பர்கள் விவாதிப்பது..,
உங்களில் ஒருவன் பற்றிதான். மகிழ்ச்சி.

உக்ரேன் யுத்தக் களம்: ’Z’ குறியீட்டுக்கு அர்த்தம் என்ன?

உக்ரேன் படையெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரஷ்ய இராணுவ வாகனங்கள், போர் தளவாடங்களில் ‘Z’ என்ற எழுத்து இடம்பெறுள்ளது. இந்த எழுத்திற்கு என்ன அர்த்தம் என்ற வாதவிவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 6)

(சாகரன்)

ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா

உண்மையில் இந்த யுத்தம் ரஷ்யா உக்ரேன் இடையிலானதா என்றால் இல்லை என்பேன் நான்.

இது ரஷ்யா நேட்டோ இடையிலான போர் என்பதே சரியானது.

இதனைத்தான் ரஷ்யா உக்ரேன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக இவ்வாறு தெரிவித்தும் இருக்கின்றன.

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 5)

(சாகரன்)

ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா

மேற்குலக நாடுகளும் அவர்களின் ஊடகங்களும் ரஷ்யா உக்ரேன் மீது ஒரு தலைப்பட்சமாக போர் தொடுத்துவிட்டது என்ற பிரச்சாரங்களுக்கு மத்தியில் நேட்டோ நாடுகள் கொடுத்த… கொடுத்து வரும் ஆயுங்களைக் கொண்டு ரஷ்யாவின் உக்ரேனின் தலை நகரை நோக்கிய நகர்வை எதிர்த்து உக்ரேன் படைகள் போர் செய்து கொண்டிருக்கின்றனர்.

‘அமீனா புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த வீடும் உருப்படாது!’

(Rathan Chandrasekar)

ஒன்று தோன்றுகிறது.

சொல்கிறேன்.

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும்

உருப்படாது என்பார்கள்.

ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான போர்

ஐரோப்பிய யூனியன்

பார்லிமெண்ட் கூட்டம்.

காணொளியில் பேசுகிறார்

உக்ரெய்ன் செலென்ஸ்கி.

கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் –

“போரில் பின்வாங்கமாட்டேன் “

என்று செலென்ஸ்கி சொன்னவுடன் –

ஒரு ஆள் பாக்கி இல்லை –

எழுந்து நின்று கைதட்டுகிறான்.

எல்லாரும் ரஷ்யாவை பின்வாங்கச் சொன்னவன்.

எல்லாரும் ரஷ்யாவுக்குத் தடை போட்டவன்.

‘பேச்சுவார்த்தைக்குப் போ ‘

என்று உக்ரெய்னிடம்சொல்லாதவன்.

‘ஏன் குடிமக்கள் கையில் ஆயுதம் கொடுக்கிறாய்,

அவர்களைக் கேடயமாக்குகிறாய்’ என்று

செலென்ஸ்கியிடம் கேட்காதவன்.

அத்தனை பேரும் -இவ்வளவு வருடங்களாக

உக்ரெய்ன் தேசியவாதக் குழுக்களுக்கு

உக்ரெய்ன் ராணுவத்தின்மூலம்

ஆயுதம் கொடுத்து

உக்ரெய்ன் வாழ் ரஷ்ய குடிமக்களை

ஒடுக்கி வைக்கச் செய்தவன்.

அத்தனை பேரும் –

சண்டை நின்று விடக்கூடாது என்று

இப்போது மூட்டை மூட்டையாக

உக்ரெய்னுக்கு ஆயுதத்தை அனுப்புகிறவன்.

அவர்கள் முன் முஷ்டி உயர்த்தும் செலென்ஸ்கி

“போரில் பின்வாங்கமாட்டேன்!” எனும்போது

எழுந்து, கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.

இந்தப் போர் அமெரிக்காவுக்கும்

நேட்டோவுக்கும் செலென்ஸ்கிக்கும்

இனிக்கிறது என்று நான் எழுதியதன் –

இந்தப் போர் உக்ரெய்னுக்கு ஆகாது;

ரஷ்யாவுக்கும் கூடாது;

ஆனால், அமெரிக்காவுக்குத்

தேவையாக இருக்கிறது என்று

ரஷ்யா, உக்ரெய்ன் கம்யூனிஸ்டு கட்சிகள்

சொன்னதன் –

பொருள்

விளங்குகிறதல்லவா?

(Rathan Chandrasekar)