ருவாண்டா படிப்பினைகள் – 04

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)

உலகத்திலேயே அதிகளவான சதவீதத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் நாடென்றால் அது ருவாண்டாதான். நாடாளுமன்றத்தில் 61.4 வீதமானவர்கள் பெண்கள்.

ருவாண்டா படிப்பினைகள் – 03

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)

ஆபிரிக்கர என்றால் நாம் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நம் மனக் கண் வருவது வெயிலின் தாக்கத்தினால் வரண்ட செம்மண்ணும் மரங்களேயற்ற பரந்த மணல்வெளிகளில் வாழுகின்ற வயறுஎக்கிய அல்லது வயறு வெளித் தள்ளிக்கொண்டு உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளும் வெளித்தெரியும் மனிதர்களும் தான்.

ரஷ்யாவின் எச்சரிக்கையும், புவி அரசியலும்

(க.ஆனந்தன்)

கியூபா ஏவுகணை நெருக்கடி க்குப்பின் அதற்கு சற்றும் குறைவில்லாமல், உக்ரை னில் ரஷ்யா ஆக்கிரமிக்கப் போகிறது என்ற பிரச்சாரத்தை அமெரிக்க நேட்டோ படை கள் கட்டவிழத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு யுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியைப் பொறுத்த வரை அவர் பதவிக்கு வந்த ஓராண்டு என்பது தோல்விகளின் ஆண்டாக உள்ளது, ஏற்கனவே அவர் மிகுந்த விளம்பரத்துடன் ஏழை மக்களுக்கும் முதி யவர்களுக்கும் வாக்குறுதி அளித்தது போல் “பில்ட் பேக் பெட்டர்” திட்டம் தோல்வி யில் முடிந்தது.

அடுத்து குடியரசுக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில், சிறுபான்மை மக்கள் மற்றும் கருப்பின-லத்தீன் மக்கள் வாக்க ளிப்பதை தடுக்க கொண்டுவந்த சட்டங் களைத் தடுக்க, அனைத்து மக்களின் வாக் குரிமையை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட வாக்குரிமைச் சட்டம் செனட்டில் அவரது கட்சியினர் இருவராலேயே தோற்கடிக்கப் பட்டது.

ருவாண்டா படிப்பினைகள் – 02

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)

1994.04.06 ஆம் நாள் தன்சானியாவின் தலைநகரான டொடோமாவில் ருவாண்டாவிலிருந்து உகண்டாவில் அடைக்கலம் பெற்றிருந்தவர்களால் ருவாண்டாவில் நல்லாட்சி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ருவாண்டா நாட்டுப்பற்றாளர் முன்னணியானது (Rwandese Patriotic Front – RPF) வரலாற்று முக்கியத்துவம் மிக்க அமைதி ஒப்பந்தமொன்றில் அப்போதைய ருவாண்டா நாட்டின் குடியரசுத் தலைவர் ஜுவன்ட் கவியரிமான ( Juvend Habyarimana) உடன் கையெழுத்திட்டனர்.

ருவாண்டா படிப்பினைகள் – 01

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)


• தூய்மையான ஊர்களைக் கொண்ட நாடு.
• நெகிழி (Plastic) முழுமையாக தவிர்க்கப்பட்ட நாடு.
• 100 மலைகளைக் கொண்ட சுத்தமான காற்றுக்குச் சொந்தமான நாடு.
• 25 கிலோமீற்றர்களுக்குக் குறைவான தூரங்களை ஈருருளிகளிலும் அதிகமான தூரங்களை மின்பாவனை வாகனங்கள் மூலமாகவும் சென்றடையும் போக்குவரத்தினைப் பேணும் நாடு.
• இனம், சாதி போன்ற வேறுபாட்டினை மக்களிடையே திணிக்கும் அல்லது பேணும் முறைமைகள் அற்ற மனிதம் மாத்திரமே மனிதர்களிடம் தேவை என்பதனை போற்றும் நாடு.
• நாடாளுமன்றில், அமைச்சரவையில் 60 வீதமானவர்கள் பெண்கள்.
• தொழிற்துறையில் 60 வீதமானவர்கள் பெண்கள்.
• தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகமானவர்கள் வாலிபர்கள்.
• கிழமையில் ஒவ்வொரு குடிமகனும் தனது ஊரில் ஒரு மணிநேரம் சிரமதானத்தில் ஈடுபடுகின்ற உன்னத நடைமுறை.

உ.பி. தேர்தலை உலுக்கும் சாதி அரசியல்

உத்தரப் பிரதேசம் உள்ளட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதாலும், நாட்டின் மிக முக்கியமான மாநிலமான உ.பி.யில் தேர்தல் என்பதாலும் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.

உக்ரைனில் அதிகரிக்கும் சீனாவின் புவிசார் அரசியல் முயற்சி

(Freelancer)

உக்ரைனில் சீனாவின் பன்முகத் தன்மை கொண்ட ஆர்வம், அதன் மூலோபாய புவியியல் இருப்பிடம், உயர்நிலை சோவியத் பாதுகாப்பு அமைப்புகளின் தொழில்நுட்பம் ஆகியவை பீஜிங்கின் செல்வாக்கை கீயேவில் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

குவாதரின் அகிம்சை வெற்றி சொல்லும் கதை

பாகிஸ்தானிய அடக்குமுறை அதிகாரத்துக்கு எதிராக குவாதர் கோ ஹூக் டோ தெஹ்ரீக் (குவாதரின் உரிமைகளுக்கான இயக்கம்) நடத்திய அகிம்சை போராட்டங்களின் வெற்றி, இம்ரான் கானின் அரசாங்கத்தின் பாதிப்பைக் காட்டுகிறது.

இந்தியாவுடனான கடல் பாலத்தை இலங்கை மக்கள் எதிர்க்கின்றனர்

(டாக்டர். சுதா ராமச்சந்திரன்)

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் ஒரு கடல் பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்க தயாராக இருப்பது போல், இலங்கையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. படம் மோடி அரசால் தனுஷ்கோடி வரை கட்டி முடிக்கப்பட்ட அதிவேக கடல் தரை பாதையாகும். இங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு 22 கிலோ மீட்டரே உள்ளது. (ஆசியா டைம்ஸ் 23டிசம்பர் 2015)

சிந்திக்க வைத்து… சிலிர்த்த நாடு சிலி

(தோழர் சாகரன்)

நெருப்பும் பனியும் நிறைந்த அற்புத பூமி என்று சொல்வார்கள் சிலி நாட்டை. அங்கு தீவிர வலதுசாரி அரசிற்கும் அதன் எதிர் கொள்கையுடைய இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றியீட்டியுள்ளார்கள். நாட்டின் இயற்கை அமைப்பைப் போலவே அரசியல் செயற்பாடும் அங்கு அமைத்திருப்பது இயற்பியல் அதிசயமாக அரசியல் அவதானிகளால் ஒப்பீட்டுப் பார்க்கப்படுவதுண்டு.