
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நடைபெற்ற முதலாவது குவேட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தனது அவுஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய சகாக்களுடன் அம்மாநாட்டில் கலந்துகொண்டார்.
The Formula
International Politics
(சாகரன்)
உலகில் முதன்மைத் தொகை புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொண்டிருக்கும் கனடாவில் இன்று பொதுத் தேர்தல். கடந்த 2 வருடங்களாக சிறுபான்மை அரசாக செயற்பட்டு வந்த ஜஸ்ரின் ரூடோவின் லிபரல் கட்சியின் ஆட்சி அவர்களாலேயே வழமையான தேர்தல் காலத்திற்கு இரு வருடங்கள் முன்பே கலைக்கப்பட்டு நடைபெறும் தேர்தல் இது . கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாத காரணத்தால் பெரும்பான்மை பெற்ற இந்தக் கட்சி புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தனது ஆட்சி நடாத்தி வந்தது.
ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, தாலிபான்களால் கெரில்லா போர் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஒரு அரசாங்கத்தை நிறுவி அதனை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பே. இதற்கு விடை காண்பதற்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதே வேளையில், பயங்கரவாதத்தால் ஒரு ஜனநாயக அரசு வீழ்த்தப்பட்டு, மாறுபட்ட ஓர் அரசைச் சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலானது, வருங்காலங்களில் இவ்வகையான அரசியல் முறைகள் அனைவருக்கும் ஏற்புடையதாகிவிடக் கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.
ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களான தலிபான்களின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி மிகவும் பிரபலமான தனியார் தொலைக்காட்சி வலைத்தளம் அதன் அபாயகரமான துருக்கி சோப் ஒப்பேரா மற்றும் இசை நிகழ்ச்சிகளை டேமர் நிகழ்ச்சியுடன் இணைத்துள்ளது. தலிபான்கள் தமது எண்ணங்களுக்கு ஏற்ப ஊடகங்களுக்கு சட்டதிட்டங்களை வெளியிட்டுள்ளனர்.
ஆங்கிலேயர் அஞ்சிய எலும்புகள்
வ.உ.சி.க்கு எதிரான அரச நிந்தனை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து ஆங்கிலேய நீதிபதி ஏ.எஃப். பின்ஹே 1908 ஜூலை 7-ல் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், ‘இவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. இவருடைய எலும்புகள்கூட, சாவுக்குப் பின் ராஜதுவேஷத்தை ஊட்டும்…’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படிக் குறிப்பிட்டதற்குக் காரணம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வ.உ.சி. உருவாக்கியிருந்த எழுச்சி.