சுன்னாகம் சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை அவசியம்

பொலிஸ் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது, ​​பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், அந்த நபரின்கடந்த காலத்தை ஆராய்வார்கள். அடுத்து, அந்த நபரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் கடந்த காலமும் பார்க்கப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளால் தற்போது தூக்கி எறியப்பட்ட ஒரு பாரம்பரியமாகிவிட்டது.

கடினமாக உழைத்து சம்பாதித்ததை தூக்கி எறிய வேண்டாம்

கடினமாக உழைத்து சம்பாதித்ததை முதலீடு எனும் வலையை வீசுகின்ற வலையமைப்புகளில் சிக்கி சின்னாப்பின்னமாகி தவிப்பதை விடவும், முறையான நிதிநிறுவனங்கள், வங்கிகளில் வைப்பிடுவதன் ஊடாக, ஓய்வுகாலத்தில் நிம்மதியாக வாழமுடியும். எனினும், கூடிய இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்டவர்கள் பலரும், அந்த வலைக்குள் சிக்கிவிடுகின்றனர்.

அநுர அரசாங்கம் உண்மையில் புதிதாக பணம் அச்சிடுகின்றதா?

(ச.சேகர்)

அண்மைய வாரங்களில் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, பிரதான ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்ட விடயங்களில் பணம் அச்சிடப்படுவதைப் பற்றியதாகும்.

அறுகம்பே அச்சுறுத்தலும் சுற்றுலாத்துறை மீதான பாதிப்புகளும்

இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

மெய்யழகன்

(தோழர் ஜேம்ஸ்)

கல்வியிற்காக…, கஸ்டத்திற்காக…., கலகத்தால்… பிறந்து வாழ்ந்து, வளர்ந்து ஒன்றாக, உறவுகளாக, நட்புகளாக வாழ்ந்த எம்மில் பலர் கிராமத்தை விட்டு வெளியெறி நகரத்திற்கு இன்னொரு தேசத்திற்கு என்றாக இடம் பெயர்ந்த நிகழ்வுகள்.

இந்திய மக்களின் இதயத்தில் இறுக இடம் பிடித்த டாடா(TATA)

(தோழர் ஜேம்ஸ்)

(இந்தப் பதிவில் இணைத்திருக்கும் புகைப்படம் டாடா(TATA) நிறுவனத்தின் செயற்பாடுகளை துல்லியமாக எடுத்து இயம்புகின்றது)

1962 ம் ஆண்டு நடைபெற்ற சீன இந்திய யுத்தம் இவரின் வாழ்வை தனி மனிதனாக திருமணம் செய்யாது வாழ்வதற்கும் வழி கோலியது.
அதுவே அவரின் வாழ்வின் இறுதி வரை தொடரவும் வைத்து.

மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா

(ச.சேகர்)

வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர்.

மார்பகங்கள் பற்றி பேசுவதற்கு தயங்கும் பெண்கள்

சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆரம்பமாகியுள்ளது. உலகில், ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் இந்த மாதத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன.  

காத்தாடியாகி மரணிக்கும் ‘குஷ்’ க்கள்

உணவுத் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் கொரோனா காலத்தில் மரக்கறிகளை தேடி வீடுகளில்இருந்து வெளியேறாமல் இருப்பதற்காகவும், வீட்டுத் தோட்டக்கலையை அரசாங்கம் ஊக்குவித்தது. அதில், தங்களை அர்ப்பணித்தவர்கள், இன்னும் பயிரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். பலரும் கைவிட்டுவிட்டனர். எனினும், மரக்கறிகளின் விலை உயரும் போது ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்பதற்கு இணங்க மண்ணை பதப்படுத்துவர்.

ஜனநாயக முயற்சிகளுக்கு வெற்றி

(லக்ஸ்மன் )

போராட்டங்களால் வெற்றிகள் எட்டப்படுவது ஜனநாயகம் மறுக்கப்படாத நாடுகளிலும், ஜனநாயக ரீதியாக முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர்கள் உள்ள இடங்களிலுமே நடைபெறும். இலங்கையைப் பொறுத்தவரையில்  2,000 நாட்களைத் தாண்டிய போராட்டம். 300 நாட்களைக் கடந்த போராட்டம்  4 மாதங்களை எட்டியுள்ள போராட்டம் என பல போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன.