பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” இது ஒரு மகா கலைஞனின் எடைக்கல் வார்த்தை.
Category: பொதுவிடயம்
General
சங்கத் தமிழ்! தங்கத் தமிழ்!!
இந்தியாவிலேயே எழுத்துக்கள் முதன்முதலில் தோன்றிய, கல்வி அறிவினுடைய தலையாய நிலமாக விளங்கிய ஒரு மாநிலத்தில் நாம் இருக்கிறோம். 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே அந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. 28 கி.மீ சுற்றளவிற்குள் 20 இடத்தில் 2 ஆயிரம் வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட எழுத்துக்கள் இருக்கின்ற ஒரே நகரம் உலகத்திலேயே மதுரை என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாகும்.
தோழர் மு.சின்னையா மறைவுக்கு புரட்சிகர அஞ்சலி!
தென்மராட்சி மட்டுவில் கிராமத்தின் ஒரு பகுதியாக விளங்கும் புகழும் வீரமுமிக்க மானாவளைக் கிராமத்தில் வாழ்ந்து வந்த தோழர் மு.சின்னையா தமது 85 ஆவது வயதில் (01.10.1938 – 14.01.2023) காலமான செய்தி எங்கள் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்குக் காரணம் அவரது மக்கள் நலன் சார்ந்த முழுமையான வாழ்வாகும்.
மினிமலிசம்
பணமதிப்பு நீக்கம் துரிதப்படுத்துகிறது: தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க டாலர் மேலாதிக்கத்திற்கான முடிவின் ஆரம்பம்?
உலக சமூகம் தங்கள் பொருளாதாரங்களை மதிப்பிழக்கச் செய்யும் முக்கிய நகர்வுகளை அமெரிக்கா எதிர்கொள்கிறது. அமெரிக்க டாலரின் ஒரு வேளை விரைவில் இல்லை என்றாலும் இருப்பு நிலை இறுதியில் முடிவுக்கு வரும்,
காசியில் ‘புனித’ கங்கை!
- ஒரு அனுபவப் பதிவு
நம்மில் பலருக்கு இந்தியாவின் கங்கை நதி என்றால் புனித நதி என்ற நினைப்பும், அதன் காரணமாக அது ஒரு வணக்கத்துக்குரிய நதி என்ற எண்ணமும் எழும். ஆம், உண்மையில் கங்கை, அவள் ஊற்றெடுக்கும் போது புனிதமாகத்தான் தனது பயணத்தை ஆரம்பிக்கிறாள். ஆனால், பின்னர் அவள் சுமார் 3,200 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் போது எப்படித் தன்னை வணங்கும் மனிதர்களால் மாசுபடுத்தப்படுகிறாள் என்பதை தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் இந்த அனுபவப்பதிவு எடுத்துக் காட்டுகிறது. - 2014 கிறிஸ்து பிறப்பையொட்டி நான்கு நாட்கள் காசியில் இருந்தேன். காலையும் மாலையும் கங்கைக் கரைக்குச் சென்றேன்.
எட்டு டிகிரி குளிரிலும் ஒருவித பரவசத்தில் இருந்தபோது, அண்ணா சௌந்தர் வல்லத்தரசு அவர்களுடன் பேசினேன்.
‘ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ‘அரிச்சந்திரா காட்’க்குப் போயி கங்கையைப் பார்த்துக்கிட்டு கொஞ்ச நேரம் சும்மா உட்காருங்க!’ என்றார். இரவு பதினொரு மணிக்கு மேல் மிதி ரிக்ஸா கிடைத்தது. மேட்டில் இறங்கி நடந்து கங்கைக்கரை அடைந்தோம்.
எட்டு, பத்துப் பேர் எரிந்து கொண்டிருந்தனர். சற்று உயரமாக இருந்த மேடையில் நாலைந்து பேர் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தனர். கஞ்சா புகையாக இருக்கலாம். எரியும் சடலங்களின் சிதையைச் சீர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஓரிருவர். ஒரு சிதையின் இரு கால்களும் எரி நெருப்புக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. பின்னர் கங்கையின் மச்சங்களுக்கு விருந்தாகும் போலும்.
ஊரில் சுடுகாட்டில் பிணமொன்று எரிந்தால் சுற்று வட்டாரம் நாற்றம் உணரும். எட்டு, பத்து பிணம் எரிந்தால் எவ்வளவு நாற்றம் வரவேண்டும்? நாற்றத்தை நாசி அறியவில்லை. காசி பற்றிய நம்பிக்கைகளில் ஒன்று அது. நம்மூர் பரோட்டாக்கடை அடுப்புத் தீ போல, எந்நேரமும் பத்துப் பன்னிரண்டு எரியும் போலும்! அடுத்தடுத்த நாட்களில் வாடகைக் கார்களின் டாப்பில், வண்ண ஜிகினாத் துணிகளில் பொதியப்பட்ட பிணங்கள் கட்டப்பட்டு, அரிச்சந்திரா காட்டுக்கு விரைவதைக் கண்ணுற்றேன்.
மிக அசுத்தமாகக் கிடந்தது கங்கை அந்தக் கட்டத்தில். அந்தக் கட்டத்தில் பாரிக்கர் சொன்னார், ‘கியா ஜிந்தகி ஹை சாப்!’ என்று. எனக்குள்ளும் பற்றிப் படர்ந்தது அந்த விரக்தி. மனித வாழ்க்கை என்பது இவ்வளவுதானா இறுதியில்? எதற்கு வாரிக் கோரிக் குவிக்கிறார்கள் ஆயிரமாயிரம் கோடிகள்? ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!’ என்றார் பட்டினத்துப் பிள்ளை.
எத்தனையோ இழவுகளுக்குப் போயிருக்கிறேன். பல ஊர் சுடுகாடுகளைப் பார்த்திருக்கிறேன். சுடுகாட்டு வழியில் இரவென்றும் பகலென்றும் பாராமல் அலைந்திருக்கிறேன். ஆனால் நள்ளிரவில், கடுங்குளிரில் கங்கையின் சாந்நித்தியத்தில், எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை, வந்துகொண்டிருக்கும் பிணங்களை, கங்கைக்குள் சென்றுகொண்டிருக்கும் எச்சங்களைக் கண்டுகொண்டிருந்தபோது மனதில் அச்சமோ, பீதியோ இல்லை. என்றாலும் வெறுமை வந்து என்னைக் கௌவிக்கொண்டது.
எதிர்கால பேரழிவுகளை பாக். வெள்ளம் நினைவூட்டுகிறது
திரிகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டு!
திரிகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகளைக் கூறுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய பொருளாதாரம் 2023 – துள்ளிக் குதிக்கும் மீன்வளத் துறை
(பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி)
இந்தியாவுக்கு இயற்கை தந்த கொடை -கிழக்கிலும் மேற்கிலும் நீண்டுள்ள கடற்கரை.மீன்வளத்தை நம்பி சுமார் 2.8 கோடி பேரின் வாழ்வாதாரம் உள்ளது. 2014-15-ல் இருந்து, மீன்வளம் சராசரியாக 10.87% வளர்ச்சி கண்டு வருகிறது. 2019-20 நிதியாண்டில் 141.6 லட்சம் டன் மீன்கள் பிடிக் கப்பட்டுள்ளன.