கனவு மெய்ப்பட்டது

(சாகரன்)


ஊர்த் திருவிழாவைப் போல் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற உலகக் கோப்பையிற்கான உதைப்பந்தாட்டப் போட்டி யார் சாம்பியன் என்ற இறுதிப் போட்டியுடன் முடிவுற்றது.

FIFA கால்பந்து உலகக்கோப்பை: யாருக்கு எவ்வளவு பரிசு? முழு விபரம் இதோ…

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு

(December 15, 2022 | Ezhuna)

இந்தக் கட்டுரைத் தொடர், சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடபகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், இலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலை, அவர்களின் கலாசார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

பனை

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.

புத்தமதமும் – டாக்டர் அம்பேத்கரும்

இளம் பருவத்திலிருந்தே புத்தர் வாழ்க்கைச் சரித்திரத்தையும், புத்த தருமத்தையும் பற்றிக் கசடறக் கற்கத் தொடங்கினார் அம்பேத்கர். 1954இல் பர்மாவில், இரங்கூன் மாநகரில் உலக புத்தர் மாநாடு கூடிற்று. டாக்டர் அம்பேத்கர் அம்மாநாட்டில் கலந்து கொண்டார். புத்தர் மதச் சடங்குகளை வெறுத்தவர்.

அதிகரிக்கும் வரிகள் – நியாயமா, கொள்ளையா?

(என்.கே அஷோக்பரன்)

‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு ’என்றார் வள்ளுவர். தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் என்ற வள்ளுவனின் கருத்து.

பல்கலைக் கழகங்களில்: வதைக்கும் ‘சைபர்’ பகடிவதைகள்

பெரும்பாலான பாலியல்  துன்புறுத்தல்கள், நெருங்கிய உறவினர்களால், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களால் இடம்பெறுவது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. ஆகையால், கைக்கெட்டிய தூரத்தில் இருப்பவர்கள், உறவினர்களென உரிமை, சம்பந்தம் பேசுவோரிடம் மிகக் கவனமாகவும் அவதானமாகவும் இருக்கவேண்டும்.
ஒருவரின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பலரும் அருகில் இருந்துகொண்டே குழியைப்பறித்து தடுத்துவிடுவோர்.

“நடந்தாய் வாழி வழுக்கியாறு

“நடந்தாய் வாழி வழுக்கியாறு” எனப் புகழ்வாா் எனது அபிமான எழுத்தாளா் செங்கை ஆழியான்.

யாழ் நகரிலிருந்து மானிப்பாய் ஊடாக கீரிமலை நோக்கிச் செல்லும் வீதியில் சண்டிலிப்பாய் உள்ளது. பத்து கிலோ மீற்றர் தூரமும் இல்லை. எனது கிராமத்துக்குரிய சிறப்புகளில் ஒன்று – யாழ்ப்பாணத்திலே உள்ள ஒரே ஒரு ஆறான “வழுக்கியாறு” ( வழுக்கையாறு என்பாா்கள் பேச்சுத் தமிழில்.அதில் தவறில்லை )சண்டிலிப்பாயை ஊடறுத்தே ஓடுகிறது என்பதுவும் தான்.

மாணவ சமுதாயத்தைக் காக்க வேண்டும்

யாழ்ப்பாணத்தில், க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள், தனியார் கல்வி நிலையத்துக்கு செல்வதாகக்கூறி, நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக மதுபானமும் போதைப்பொருளும் பயன்படுத்தியதை அடுத்து, கைது செய்யப்பட்டு பின்னர், எச்சரிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்கள்.