ரஷிய தலைநகரான மாஸ்கோவிலிருந்து 225கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது “யாஸ்னயா பாலியானா” கிராமம் அங்கே தான் 400,ஹெக்டேர் பரப்பளவில் பர்ச் மரங்களால் சூழப்பட்ட ரஷியாவின் மிகபிரபலமான எழுத்தாளராக விளங்கிய #லியோடால்ஸ்டாய் அவர்களின் பண்ணை அமைந்துள்ளது.
தொண்டைமானாற்றிலுள்ள ‘செல்வச்சந்நிதி’ எனும் தலம் அதற்குரிய பக்திக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது அதிகம் ஆராயப்படாத ஒரு தலமாகவேயுள்ளது. இலங்கையின் சைவக்கோயில்கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகாரமுடை யோரின் கோயில்களையே பெரிதும் சுற்றி நின்றுள்ளன. இது மனித இயல்பின் பால்பட்டதே.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆவார்.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவர். இதன்மூலம் பெருமளவான அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. கடந்த வருடத்திலிருந்து, கொடிய நோயான கொவிட்- 19 பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை முடங்கியதோடு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செழித்து வருகின்றது.
(மயில்வாகனம் திலகராஜா – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
கடந்த இரண்டு வாரங்களும் மலையகத்தில் மட்டுமல்லாது மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் ‘நீதி’ கோரிய கோஷங்கள் எழுந்திருந்தன. அந்த கோஷத்தை முன்னிறுத்தச் செய்தது ஒரு சிறுமியின் உயிர். அந்த சிறுமியின் துர்பாக்கிய நிலை மரணத்துக்கு நீதி வேண்டிய கோஷங்களுக்கு மத்தியில் ‘அரசியல்’ நிகழ்ச்சி நிரல்களும் தம்மைப் பிணைத்துக்கொண்டன என்பது வெளிப்படை. ஆனால், அதனையும் தாண்டிய சமூக ‘உணர்ச்சி’ நிலை மலையகத்தில் ஆத்மார்த்தமாக மேம்பட்டு நின்றது.
கலையும்¸ இலக்கியமும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதி என வாழ்ந்துக் காட்டிய கார்த்தி இன்று எம்மிடம் விடை பெற்றுச் சென்று விட்டார் மேடை நாடகக் கலைஞனாக வானொலி கலைஞனாக சினிமா கலைஞனாக இலக்கியக்காரனாக இவை யாவற்றுக்கும் மேலாக சக மனிதனோடு நெருக்கமாக வாழ்ந்துக் காட்டிய பண்பாளன்!
சொந்த நாட்டில் வசிக்கும் கறுப்பின மக்களை இழிவாக நடத்தும் அமெரிக்கா, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியட்நாமுக்கு சென்று யாரைக் காப்பாற்றப் போகிறது என்று கேள்வி எழுப்பியவர் குத்துச் சண்டை வீரர் முகமது அலி.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் போராடித் தோல்வியடைந்தது. ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.
ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, மதியுள்ள மக்கள் வலியுறுத்த வேண்டும். மாறாக, குற்றம்சாட்டப்பட்டவன், தான் சார்ந்த இனத்தவன் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவனுக்கான அபத்த நியாயங்களை வாதமாக முன்வைப்பதெல்லாம், இனவாதத்தால் மழுங்கிய மூளையின் சிந்தனையல்லாது வேறென்ன?