சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 3 | அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம் | ஆங்கில மூலம் : றொனால்ட். எல். வாட்ஸ் | தமிழில் : கந்தையா

சண்முகலிங்கம் மலேசியாறொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.