வடிவேலுவுக்கு நன்றி சொல்வோம்………….. !

வடிவேலுவின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்துகளும், நன்றிகளும் சமூகவலைத்தலங்களில் குவியும். ஆனால் அன்று மட்டுமல்ல; இன்றும் (10/10/2020) அவருக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்லி நாம் மகிழ்வோம் என்கிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்.அதற்காக அவர் சொல்லும் காரணங்கள்…………. 10/10 என்பது மன நலத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான எண். அக்டோபர் மாதம் 10-ம் தேதி உலக மன நல நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் மன நலம் தொடர்பான விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் பரவலாக எடுத்துரைத்து வருகிறது.

“திரைக்கு பின்னால்”முதல் மரியாதை”

“எப்படியும் இந்தப் படம் ஓடாது.அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…”என்று பாரதிராஜாவிடம் பணம்வாங்க மறுத்தாா் இளையராஜா !முதல் மரியாதை 1985 ஆம்ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் .இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.!

கடலை கண்டதில்லையா மலையக இளைஞர்கள்?

(மஹேஸ்வரி விஜயனந்தன்)

அண்மைக் காலமாக மலையக இளைஞர்களின் வீண் சாவு, அதிகமாக அதிகரித்துள்ளதை தினமும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து துன்பப்படுவதா அல்லது இவர்களின் அறியாமையை நினைத்து வெட்கப்படுவதா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்று மனித உயிர்க​ளின் பெறுமதியை உணர்ந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு தான் சிந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ஒரு பிள்ளை, இரண்டு தாய்மார்; அம்பாறையில் சர்ச்சை


(மப்றூக்)
ஒரு பிள்ளையை, ஒரே நேரத்தில் உரிமை கோரிய பல தாய்மார்கள் பற்றிய கதைகளை, பாடப் புத்தகங்களிலும் பக்கத்துத் தெருக்களிலும் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்.

பெண்களுக்கு எதிரான வன்முறையின் களமாகும் சமூக வலைத்தளங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

“உலகம் மாறிவிட்டது” என்ற கோஷத்தை, நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். “தொழில்நுட்ப ரீதியில் உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது”, “மனிதன் இன்னும் நாகரிகமுள்ளவனாக மாறிவிட்டான்” போன்றவையும் நாம் அடிக்கடி கேட்பவை!

சிவாஜி நடிப்புக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்!” – சோ

நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நினைவுகளுடன்:

‘தங்கப் பதக்கம்’ படத்தில் எனக்கு இரண்டு வேடங்கள். ஆனால் நாடகத்தில் கான்ஸ்டபிள் ரோல் மட்டும்தான் இருந்தது. படத்தில் கான்ஸ்டபிள், அரசியல்வாதி என்று இரண்டு பாத்திரங்கள். மகேந்திரன்தான் வசனம். துக்ளக்கில் அவர் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாரதி நினைவுப் பதிவு 10

(Rathan Chandrasekar)
·
‘தமிழினி மெல்லச் சாகும்’ என்று
பாரதி சொன்னதாக பல அரைகுறை விற்பன்னர்கள்
மேடையிலும் எழுத்திலும்
விளம்பி வருகிறார்கள்.
பாரதி அப்படிச் சொன்னானா?
எப்படிச் சொன்னான், எப்போது சொன்னான்?
அவர் மகள் தங்கம்மா

நடிப்பில் ஸ்டைல்… ஸ்டைலில் நடிப்பு; ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் நினைவுநாள்

(வி. ராம்ஜி)

சினிமாவை, சி.பி., என்றும் சி.மு., என்றும்தான் ஒரு கோடு கிழித்துப் பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு கதை அமைக்கப்பட்டிருக்கும். நாயகன் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார். இயக்குநர் திட்டமிட்டபடி கதை நகரும். ஆனால் ‘நடிக்கிறது இவருப்பா. அதுக்குத் தகுந்தது போல தைரியமா எத்தனை பக்கம் வேணும்னாலும் வசனம் எழுதலாம்’ என்றார்கள். ‘அவர் நடிக்கிறார்னா, அந்த சீன்ல, டைட் க்ளோஸப்பை தாராளமாவும் தைரியமாவும் வைக்கலாம்’, ‘வெறும் சோளப்பொரி போடாம, அந்த நடிப்பு யானைக்குத் தகுந்தபடி நடிக்கறதுக்கு தீனியைப் போட்டாத்தான், படமே பிரமாண்டமாகும்’ என்றெல்லாம் சொன்னார்கள். அப்படியொரு நடிப்பு அசுரன்… சிவாஜி கணேசன். அதனால்தான், ‘சி.பி., சிவாஜிக்குப் பின், சி.மு., சிவாஜிக்கு முன்’ என்று பகுத்துப் பிரித்து, பிரித்துப் பகுத்து சினிமாவைப் பார்த்தார்கள்.

கரோனா காலம்: துயரத்தை மட்டுமே சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்

கரோனா காலத்தில் நாம் நலமாக இருப்பதற்காக நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்துவரும் தூய்மைப் பணியாளர்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எதிர்மறைப் பதிலைத்தான் பெரும்பாலும் பெற முடிகிறது. சென்னை போன்ற பெருநகரில் சுகாதாரக் களப்பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் பலர் பணிக்குத் தொடர்ந்து சென்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

குன்றக்குடி அடிகளாரின் 95-வது பிறந்தநாள்

இன்று குன்றக்குடி அடிகளாரின் 95-வது பிறந்தநாள். இதனையொட்டி ‘Being hindu and being secular’ எனும் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய Economic and Political Weekly கட்டுரையில் இருந்து சில பகுதிகள்: