“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”

(பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்)

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”  என கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியவர்  தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா. அவரது 106ஆவது பிறந்த தினம் ஜூலை 18ஆம் திகதியாகும். 

கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் கழியும் பொழுது

இருப்பவர்கள் வாழ்கின்றனர்; இல்லாதவர்கள் பொழுதைக் கழிக்கின்றனர்; இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள், கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், அதனை வெளியில் சொல்லமுடியாமலும் விழுங்க முடியாமலும் பலரும் இருக்கின்றனர். 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்று பருக்கையே பதமானது

கற்பித்தல் மூலம் மாணவர்களுக்கு அறிவு, திறன் அல்லது நல்லொழுக்கத்தைப் பெற உதவுபவர் ஆசிரியர் ஆவார். பாடசாலை பருவத்தில் 13 வருடங்கள் பட்டைத்தீட்டி, சமூகத்தில் ஒவ்வொருவரையும் ஓர் உயரிய அந்தஸ்துக்கு ​கொண்டுவருவதில் தன்னுடைய வாழ்நாளில் அரைவாசிக்கு மேல் செலவழித்துவிடுவார்கள்.

லியோனல் மெஸ்ஸி

ஈடு இணையற்ற ஆட்டக்காரன் என்று நிரூபிக்கப்பட்ட மெஸ்ஸியை, “இனி நீ ஆடவே வேண்டாம்” என்று அர்ஜெண்டினா நாட்டவர்களே குரல் கொடுத்த காலமும் இருந்தது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான்‌உண்மை. இந்த ‘லியோ’ வின்‌ பாதை ரோஜாப்பூக்களால் மட்டுமே நிரம்பியதில்லை. இனி கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்.
எட்டு வருடங்களுக்கு முன்னால் ( 2014) ஜெர்மனியிடம் இறுதிப் போட்டியில் தோற்றுப் போன வடுவிலிருந்து மெஸ்ஸி மீண்டு வரும் வாய்ப்புகள் இல்லாமலாகிப் போய் விட்டதென்றே கால்பந்தாட்ட நிபுணர்களால் கணிக்கப்பட்டது.

சாவகச்சேரி மக்கள் போராட்டம் ஒரு அறச் சீற்றம்

(தோழர் ஜேம்ஸ்)

இலவசக் கல்வி இலவச மருத்துவம் என்பன இலங்கை மக்களுக்கு கிடைத்த உரிமைகள்…… வரப்பிரசாதங்கள்…..

இந்த இலவசக் கல்வியினால், மருத்துவத்தினால் கல்வியை ஆரோக்கியத்தைப் பெற்று உயர் கல்வி வரை பணம் ஏதும் செலுத்தாது தமக்கான சமூகத்திற்கான முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்தனர்.

அகதிகளது எதிர்காலம்

அண்மையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக சென்ற படகொன்று  ஏமன் கடற்கரை அருகே  கவிழ்ந்ததில் சுமார் 49 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாகவும், ஏனையோர் பாதுகாக்கப்பட்டதாகவும் , அதுபோல இம்மாதம் 17ஆம் திகதி தெற்கு இத்தாலியில் மத்தியதரைக் கடல் பகுதியில் பயணித்த இரண்டு படகுகள்  கவிழ்ந்ததால் அதில் பயணித்த அகதிகளில் 11பேர் உயிரிழந்தும், 64 பேர் காணாமல் போனதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள்  மனதை நெருடுகின்றது.

கால்நடைகளை காப்பாற்றவேண்டிய கடப்பாடு உள்ளது

பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடையுமென கடந்தகாலங்களில் வாய்க்கிழிய பேசப்பட்டாலும், பெருந்தொகையான டொலரை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பால்மாவை இறக்குமதிச் செய்யவேண்டிய நிலைமையிலேயே நாடு உள்ளது. பாற்பண்ணை தொடர்பில் போதியளவில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆங்கில மொழிப் பதத்தை வழங்குவது மிகவும் உசிதமானது

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதேனும் ஒரு விடயத்தை கற்றுக் கொண்ட வண்ணமேயுள்ளான். அது புத்தகப்பாடமாக இருந்தாலும் சரி, வாழ்க்கைப் பாடமாக இருந்தாலும் சரி.

மட்டக்களப்பில் வைகாசி மாதத்தில் நடக்கும் கதிர்காம யாத்திரையும் கண்ணகி அம்மன் கோயில் சடங்கும்

(மௌனகுரு)

பண்பாடு மிக வலிமையான ஒன்று. பண்பாட்டை நிர்ண யி ப்பதில் ஒரு சமூகத்தின் பொரு ளியல் அமைப்பும் கருத்தியல் அமைப்பும் பிரதான பங்கு வகிக்கின்றன.
கருத்தியல் அமைப்பிலே ஒன் றுதான் சமயமும் சமயச் சடங்குகளும் சமய நம்பிக்கைகளும்
கருத்தியல் என்பது சிறுவயதிலிருந்து நமது ஆழ் மனதில் பதிந்து சூழலால வளர்வது மாற்றம் பெறுவது
மட்டக்களப்பு வாழ் தமிழர்களுள் ஒரு சாராரின் கருத் திய லை யும் உளவியலை யும் வரலாற் றையும் அறிய வேண்டுமா னால் அங்கு வருடா வருடம் நடைபெறும் கோயில் சடங்கு களை அறிதல் வேண்டும் அதன் நடை முறைகளை அறிய வேண்டும்

இயற்கையை சீண்டியது போதும்

(ச.சேகர்)

காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.