குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள்

(ப.பிறின்சியா டிக்சி)

பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

“வழமைக்குத் திரும்புதல்” என்ற சொற்றொடர், இன்று பொருளற்றது. இனி, புதிய சொற்களை நாம், தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு, இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு, இதைப் பயன்படுத்தவியலாது. வழமை என்பது, இனிப் புதிதாக வரையறுக்கப்படும். அந்த வழமை, நாம் விரும்பியதாக இராது, நாம் எதிர்பார்த்ததாக இராது. ஆனால், உலகம் புதிய நடைமுறைகளுடன் இயங்கத் தொடங்கும். அது தவிர்க்கவியலாதது.

எங்க அப்பன் எங்க?.

எரித்துக் கொல்லப் பட்ட ஏழைச்சாதிச் சிறுமி ஜெயஸ்ரீ, நினைவிழக்கும் முன் கூறிய இறுதி வார்த்தைகள் என் அப்பன் எங்கே என்ற வார்த்தைகள்.

அம்மாக்கள் தினம்……!

(சாகரன்)
நுகர்வோரை மையப்படுத்தி புதிய உலக ஒழுங்கு முறைக்குள் இன்று விசேட தினங்களும், கொண்டாட்டங்களும் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளைகளில் அவற்றில் எனக்கு அதிகம் நாட்டம், உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்த தினங்களை சார்ந்த உறவுகள், பாசங்கள், சந்திப்புக்கள், சந்தோஷங்களில் எனக்கு நிறையவே ஈடுபாடு உண்டு.

கொரோனா: லேட்டஸ்ட் செய்தி

இத்தாலிய போஸ்ட்மார்ட்டம் ரிப்போட்களுக்கு நன்றி. கோவிட்-19 நிமோனியா அல்ல. ஆனால் இரத்த நாளங்களில் பரவலான இரத்த உறைதல் அதிக அளவில் இருந்தது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது (Disseminated Intra vascular Coagulation).

நெடுந்தீவு மக்களை கொந்தளிக்க வைத்த ‘வாடைக்காற்று’

(Maniam Shanmugam)
1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கைத் தேசியத்தை அடிப்படையாக வைத்து பொருளாதார, அரசியல், கலாச்சாரத் துறைகளில் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து வந்த மூன்றாத்தர, நாலாந்தர மஞ்சள் மற்றும் நச்சு வெளியீடுகள் தடை செய்யப்பட்டன.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது.

என்னத்த சொல்றது…

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களே. உண்மையாக நீங்கள் யார்.?

ஒவ்வொரு நாளிலும் பத்திரிகை பேட்டியில் பேசுவது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு நாள் சொன்னீர்கள், கவலை வேண்டாம்.
கவனம் போதும் என்று.

விவசாயிகளுக்காக அரசு செய்ய வேண்டியது என்ன?

ஊரடங்கால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விளைபொருட்களைத் தடையின்றி விற்கவும், விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவும் மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. இந்தப் பரிந்துரைகள் திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலானவை.

புத்தகம்…..

(சாகரன்)

(உலக புத்தக தினத்தை முன்னிட்டு இப்பதிவை எழுதியுள்ளேன்)

அகரம் என்ற அரிச்சுவடியை மதிப்பிற்குரிய மூத்தவரின் மடியில் இருந்து தாம்பாளத்தில் உள்ள பச்சையரிசியில் விஜயதசமி அன்று என் பிஞ்சுக் கரம் பற்றி ஏடு தொடக்கிய நாளில் கற்கண்டு உடன் அ இலிருந்து ஃ வரையிலான எழுத்துக்களையுடைய அரிச்சுவடிதான் நான் பெற்ற முதல் புத்தகம். இது பனை ஓலையிலான் ஆனது. ஒரு பக்கமாக இருந்தாலும் இது இன்றி நான் இல்லை.. நாம் இல்லை. இன்றளவிற்கு மிகப் பெரிய பொக்கிஷமாக… முதல் புத்தகமாக இதனை நான் என் வாழ்நாளில் கருதுகின்றேன்.