உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் அமெரி்க்க மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிக அதிகமாகும். இந்த அளவுக்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Category: பொதுவிடயம்
General
இந்தியாவின் எதிர்வினை மிகையானதா? கொரோனா தொற்று இதுவரை ஐரோப்பிய மற்றும் சீன பாதையில் செல்லவில்லை..
எச்சரிக்கையான நம்பிக்கையே தற்போதைய தேவை….
டாக்டர் என். தேவதாசன் ஒரு பொது சுகாதார நிபுணர். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். உலக சுகாதார நிறுவனத்துடன் இந்தியாவில் தொற்று நோய்களுக்கான தேசிய திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் வடிவமைப்பிற்கு பெரும்பங்காற்றியவர். பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் மூன்று நிபா தொற்று உட்பட பல்வேறு தொற்றுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். தற்போது ஹெல்த் சிஸ்டம்ஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிளாட்ஃபார்ம் (Health Systems Transformation Platform) எனும் அமைப்பிற்கு தொழில்நுட்ப ஆலோசகராக உள்ளார்.
தந்தையரும், மகளும்…. கோபி பிறையன்ர்(Kobe Bryant) உம் அவர் மகளும்(Gianna)….
(சாகரன்)
எல்லா தந்தையருக்கும் தனது மகள் என்றால் ஒருவகையான விசேட உறவு பாசப்பிணப்பு இருப்பது இயல்பானதே. பிறக்கும் முதல் குழந்தை மகளாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்புதான் தந்தையரிடம் இருக்கின்றது. என் வீட்டிற்கு ஒரு தேவதை புதிதாக வரவேண்டும் என்று மனதிற்குள் குதூகலித்து இருப்பர் தந்தையர்.
யாழ் இல் ஆறுமுகநாவலரின் வாரிசுகள்
பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்..
‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’
(Rajes Bala)
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
அவுஸ்ரேலியக் காடுகள் ஏன் எரிகின்றன?
(ஜெயக்குமாரன் சந்திரசேகரம்)
1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது?
முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும்.
முன்மாதிரி,கிராம பஞ்சாயத்து
வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் கலாநிதி காசிநாதன், பதினைந்து வருடங்களுக்கு மேலாக மெல்பனில் வாழ்கிறார். இருந்தாலும் பொது வெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர், கலாநிதி இந்திரபாலா. இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த (2019) தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். நமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் ‘எல்லோருக்கும் எல்லாம் தெரியும்’ என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.