மரம் நடுகை மாதம் பகுதி 5

(வடகோவை வரதராஜன்)

நேற்றைய தொடர்ச்சி

36 வீட்டில் நடக்கூடிய மரங்கள்
மா , பலா , ஈரப்பலா , தோடை ,எலும்பிச்சை , அரிநெல்லி , கொய்யா , யம்பு , மாதுளை , அவகோடா , சீமைஇலுப்பை , தென்னை , மரமுந்திரி , அன்னமுன்னா —
37 இப்போ அநேகமானோர் உயிர் வேலிகளை அகற்றி தகர வேலிகளை அமைத்து வருகிறார்கள் . இதில் பட்டுத்தெறிக்கும் வெயில் , வளவையும் வீட்டையும் மிகுந்த உஷ்ணமாக்கிறது.
சீமெந்து மதில்கள் , தகரவேலிகள் என்பனவற்றை விட உயிர்வேலிகளே நமது வீடுகளை மிகவும் பாதுகாக்கிறது .
உயிர்வேலிகளை ஏறிக்குதித்து நமது வளவுக்குள் திருடர்கள் நுழைய முடியாது .
நீங்கள் தகர வேலிகள் அமைந்திருந்தாலும் கீழ்வரும் மரங்களை தகரவேலிக்கிடையில் நட்டால் சூழல் குளிர்ச்சியாவதோடு வீடும் பாதுகாக்கப்படுகிறது.உகந்த மரங்கள்
கிளிசீரிடியா , பூவரசு , அகத்தி , இப்பில் இப்பில் , வாதநாராயணி.
38 பொது வெளிகளில் புளி, வேம்பு இலுப்பை புன்னை ஆகியவற்றை அதிகம் நாட்டுவது சிறப்பானது .
இன்று வளவுகளில் உள்ள அநேக புளிய மரங்கள் மூடக்கொள்கை காரணமாக தறிக்கப்பட்ட காரணத்தால் இன்று புளி உச்சவிலையைத் தொட்டு நிற்கிறது.
நெடும் சாலைகளிலும் பொது இடங்களிலும் புளியை நாட்டினால் சட்டத்துக்கு பயந்து யாரும் தறிக்க மாட்டார்கள் .
தமிழகத்தில் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது , நெடும்சாலையோரம் எல்லாம் புளியை நட்டாராம் . அப்போது அநேகர் அவரை கேலி செய்தார்களாம் .
இன்று தமிழ்நாட்டுக்கு அதிக வருமானம் பெற்றுத்தருபவை அந்த சாலையோர புளியமரங்களே .
39 ஏன் எண்ணெய்வித்துப் பயிர்கள் அதிகம் நடவேண்டும் ?
இன்று பாம்ஒயிலின் பாவனை குறைந்து உலகளாவிய ரீதியில் தேங்காய் எண்ணெயின் பாவனை அதிகரித்து வருகிறது .
சவர்க்காரம் செய்யப்பயன்படும் மூலப்பொருள்களில் முக்கியமானது தேங்காய் எண்ணையும் விலங்கு கொழுப்புமாகும் . தேங்காய் எண்ணெயின் உச்சவிலை சவர்க்கார உற்பத்தியாளர்களை வேறு தாவரஎண்ணைகளை நாடவைக்கும் . இதனால் வேப்பெண்ணெய் , இலுப்பெண்ணை, புன்னைஎண்ணெய் , ரப்பர்வித்து எண்ணெய் என்பவற்றிற்கு அதிக சந்தைமானம் கிடைக்கும் . இப்பொழுதே வேப்பெண்ணெய் போத்தல் 1000 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது . சுவிஸில் இலுப்பெண்ணை இங்கத்தைய பெறுமதியில் அங்கு 9000 ரூபாவிற்கு விற்கப்படுவதாக Inuvaijur Mayuran குறிப்பிடுகிறார் . எனவே நெடும் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் அதிகளவு புளி ,வேம்பு , இலுப்பை ,புன்னை ஆகிய மரங்களை அதிகளவில் நடுவோம் .

40 கீழுள்ள படம் எனது மகள் பிறந்தபோது எமது ஆலய வீதியில் என்னால் நடப்ட்டட இலுப்பைமரம் .இன்று இதன் விதைகளில் இருந்து பெறப்படட இலுப்பெண்ணையில் இருந்தே கோவில் விளக்குகள் எரிக்கப்படுகின்றன .
இம்மரம் மகளை , இம்முறை ஊவாவெல்ல பல்கலைக்கழகத்திற்கு Mineral resource and management கற்கை நெறிக்கு அனுப்பிவைக்கிறது.

மரம் நடுகை மாதம் பகுதி 3

(வடகோவை வரதராஜன்)


நேற்றைய தொடர்ச்சி

October நடுப்பகுதியில் மரங்கள் நடப்பட்டால் February வரை மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டிய தேவை இராது .
19 March மாதம் கிழமைக்கு ஒருதரம் நீர் ஊற்றிவர April மாதத்தில் சிறுமாரி தொடங்கிவிடும்.

மரநடுகை மாதம் பகுதி 2

8 நாம் நடும் மரங்களில் 80% நடப்பட்ட ஓர் ஆண்டு முடிவிலும் 60% மும் இரண்டாம் ஆண்டு முடிவிலும் உயிருடன் இருக்குமாயின் நம் மரம் நடுகை வெற்றியாகும்.

மர நடுகை மாதம் 1

(வடகோவை வரதராஜன்)

இது மரம் நடுகைக்கானமாதம் .இந்தமாதத்தில் மரங்களை நட்டால் மரங்கள் இலகுவில் வேர் பிடித்து வளர்கின்றன .எனது அனுபவத்தில் சில குறிப்புகளை தருகிறேன்.

40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா: தமிழறிஞரின் மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தகவல்

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

`மழைக்காட்டில் துளிர்க்கும் ஈர நம்பிக்கை!’ – உற்சாகத்தில் காட்டுயிர் ஆய்வாளர்கள்


(ரா.சதீஸ்குமார், கே.அருண்)
சூழலுக்குப் பயனற்ற அந்நிய களைத்தாவரங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் தொட்டபெட்டா காடுகளில் சோலை மரங்கள் மெல்ல வளரத்தொடங்கியுள்ளது, காட்டுயிர் ஆய்வாளர்களிடம் நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்துள்ளது.

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

(ஆசிரியர்: Medlife வலைப்பதிவாளர்)

நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவினைப் பெற்ற சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். அரிசி போன்றவற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்தச் சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே இதனை முதல் தானிய வகை உணவு என்று கூடச் சொல்லலாம்.

தெகிவளையில் ஒரு சாப்பாடு கடை

(Vimal Kulanthaivelu)
தெகிவளை கடல் கரை தாழம்மரங்களுக்கும் ரயில் தண்டவாளத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் இரண்டு மகன்களின் உதவியுடன் சிறியதொரு சாப்பாடு கடை வைத்து நடத்துகிறார் அந்த அம்மா.

வில்லங்கமான விளையாட்டு

(கே. சஞ்சயன்)
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நீடித்து வருகின்ற பிரச்சினைகளுக்குள், இலங்கையும் அடிக்கடி சிக்கிக்கொண்டு வருகிறது. இப்போது, கிரிக்கெட் விவகாரத்தால் சர்ச்சை எழுந்திருக்கிறது. இலங்கைக் கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இலங்கை அணியின் 10 முன்னணி வீரர்கள் அந்தப் பயணத்தில் இருந்து விலகியுள்ளதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம்.

Dragon fruit

(Rubasangary Veerasingam Gnanasangary)

வணக்கம் நண்பர்களே.
எழுதுவதற்குப் பல நூறு விடயங்கள் இருந்தும் எதை முதலில் எழுதுவது என்று ஜோசித்துக் கொண்டிருந்த வேளையில் நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் Dragon fruit பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். ஆகவே அதையே முதலில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.