பார்வதி கிருஷ்ணன்

இரா.அமுதினியன்.

கம்யூனிஸ்ட்கள் அதீத தன்னடக்கம் கொண்டவர்கள்..
தலைவர்களின் எளிமை, தியாகங்கள் பற்றியெல்லாம் பதிவுசெய்து வைப்பது விளம்பரம், ஆடம்பரமென்று கருதினார்கள்..
இதனாலேயே அருமைத் தலைவர்களின் தியாக வாழ்வெல்லாம் வெகு மக்களுக்குத் தெரியாமலே போயின
இதோ பார்வதி கிருஷ்ணன்
என்னுமொரு தோழரின் தியாக வாழ்வு

மதிப்புக்குரிய தர்மசிறி பண்டாரநாயக்க…!

(அ.யேசுராசா)

நேற்று இரவு, யாழ்ப்பாணம் ‘றீகல்’ திரையரங்கில் நடைபெற்ற – 9 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனைக்கான விருது, புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டது! ; மிக்க மகிழ்ச்சியைத் தருவ தாக அது இருக்கிறது! அவருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்து!

ஓப்பன்ஹைமர்

(ரதன்)

கிறிஸ்தோபர் நோலன் இன்று உலகின் மிக முக்கியமான ஹொலிவூட் இயக்குனர். இவரது கதை சொல்லும் முறையானது நேர் கோட்டில் அமையாது தொகையற்றிருக்கும். துண்டு, துண்டாக ஒழுங்கற்றிருக்கும். (நொன்-லீனியர்) இவை எதிரொலிகளாக, சம்பவங்களின் நினைவுகளாக, இடைச் செருகல்களாகவிருக்கும். ஆடையாளச் சிக்கல்கள், ஒழுக்க மீறல், தார்மீக பிரச்சினைகளை இவரது திரைக் கதை வெளிப்படுத்தினாலும், உலக ஒழுங்கை மீறுவதாக ஒரு மாயை தோற்றுவிக்கும்.

ஒரு பெட்டிக் கடையின் கதை

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள்.
யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி.

அக்கிராமத்தின் “நடுச்சென்ரறில்” இருக்கிறது இக்கடை. இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின் வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.

மரணசாலைகள் ஆகின்றனவா வைதியசாலைகள்

Sureka Paraman இன் பதிவு இது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இன்னுமொரு அசமந்தப்போக்கு ♦
இரட்டைப்பெண் சிசுக்களைப்பெற்று ஐந்து நாட்கள் கூட முடிவடையாத 25 வயதே ஆன, இளம் தாயை ; வீட்டிலே பராமரிக்குமாறு அனுப்பும் அளவிற்கு , தொற்றுநோய் தடுப்பு முகாமைத்துவம் கூட முறையாக இல்லாத ஒரு வைத்தியசாலை தானா இந்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை ?????

வெற்றி பெறாதவர்ளையும் பாராட்டுவோம்

(சாகரன்)

கிரிக்கட் விளையாட்டுப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கால் பந்தாட்டம் போல் உலகெங்கும் கொண்டாடப்படும் ஆட்டமாக கிரக்கட் இன்னும் வாழ்ந்து கொணடிருக்கின்றது என்பதே உண்மை.

ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கிய ஈ.வெ.ராமசாமி….?

(வீரமணி ஜெயகுமார்)

ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கிய ஈ.வெ.ராமசாமி ஒரு தேசத்துரோகின்னு ஏன் ஒரு சிலர் இன்னிக்கும் அலர்றாங்க?? அழறாங்க…??
ஏன்னா…
இந்தியாவை ஆண்ட மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், ஆண்ட, பேண்ட, மோண்ட , வீரத் தமிழ் மன்னர்களும்
மனுதர்ம படியே ஆட்சி
புரிந்தனர்.
ஆனால் 1620 கள் தொடங்கி
ஆட்சிசெய்த
ஆங்கிலேயர்கள்.

மழைக்கால முன் செயற்பாடு

(Lathah Kanthaiya)

யாழில் நீண்டகால வரட்சிக்குப்பின் மழை பொழியப்போகிறது. எந்தவொரு பிரதேசத்திலும் நீண்ட வரட்சி நிலவினால் இடியுடன்கூடிய மழை பொழியும். பலத்த காற்றுவீசும். இடி மின்னல் தாக்கங்களுக்கும் இடமுண்டு.

திணைகளுக்கென இசைவழங்கிய தமிழிசையும் அதை ஒத்த கிரேக்க இசையும் :

(TSounthar Sounthar)


பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றையும் கொடுத்தும், பெற்றும் மனித நாகரீகத்தை வளர்த்துள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும் பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் கண்டுபிடித்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே ஒரு நாகரீகத்தால் வளர்ந்த ஒன்றல்ல.

உடன் கட்டை ஏறுதல்

Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான். சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல் எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.