(Rathan Chandrasekar)
எண்பதுகளிலெல்லாம் –
கத்தரின் புரட்சிப்பாடல்கள் அடங்கிய
கேஸட்டுகளைப் பையில் சுமந்து –
ஒரு பொக்கிஷம் மாதிரி பாதுகாத்திருந்த
தோழர்களை அறிவேன்.
The Formula
General
சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் ஜேதவனாராம, அபயகிரி ஆகிய விகாரை வளாகங்களில் காணக் கிடைத்தது. பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன்.
தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைக் குறிவைத்து, அடத்தாக திட்டங்களைத் திணிப்பதில் பெரும்பான்மை அரசாங்கம் கைதேர்ந்ததாகத் தன்னைக் காண்பித்து வருகின்றது. சனப்பரம்பலை சீர்குலைப்பதில் இருந்து, மக்களைப் பாதிக்கக்கூடிய திட்டங்கள் வரை, அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வாறான பிரதேசங்களில், முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக, மக்கள் பெற்ற பயன்களைத் தேடினாலும் கிடைக்காது.
ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணி. அணிவகுப்பு மைதானத்தில் மரங்களின் நிழல்கள் நிலவொளியில் அழகாகக் காட்சியளித்தன. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென்று துப்பாக்கிகள் முழங்கின. ஒரே நேரத்தில் ஐரோப்பியர் குடியிருப்பு, வெள்ளைக்காரக் காவலர்கள், அதிகாரிகள் வசிப்பிடம் என்று அனைத்தையும் இந்திய வீரர்கள் தாக்கினர்.
(திருமதி மாதங்கி சுதர்சன்)
தாதிய உத்தியோகத்தர்
உளவியல் துறை
மருத்துவ பீடம்
யாழ் பல்கலைக்கழகம்
திரை நேரம் (Screen Time ) என்பது தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது திரையுடன் கூடிய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்ஃபோன்,டேப்லெட் போன்றவை) ஆகியவற்றில் செலவழிக்கும் நேரத்தினை குறிக்கும்.
(Maniam Shanmugam)
முன்னாள் ஆசிரியரும், பன்முக ஆளுமை கொண்டவருமான தோழர் கலைவாதி கலீல் காலமான செய்தி துயரமானது, அதிர்ச்சிகரமானது.
சமூகப் பிரக்ஞை கொண்ட கலீல் எழுத்துலகில் தொடாத துறையே கிடையாது எனலாம். வாழ்நாள் முழுவதும் தாம் வரித்துக்கொண்ட முற்போக்கு சிந்தனையின் அடிப்படையில் அயராது செயற்பட்ட வண்ணமே இருந்தார். அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது. நாடு முழுவதும் எல்லா இனங்களிலும், எல்லாத் தரத்திலும் நண்பர்களே மிகுந்திருந்தார்கள்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களினால் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகளால் நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையினால், அவ்வாறான திறமை மற்றும் போதியளவு அனுபவமற்றவர்களை தெரிவு செய்த மக்களுக்கு நல்ல படிப்பினையை ஏற்படுத்தியிருந்தது.