தஞ்சாவூர் பெரியகோவில்

விபரம்:

75000 ஊழியர்கள்

700 டன் கற்கள்

1000 ஆண்டுகள் பழமை

216 அடி உயரம்

25000 சிற்பங்கள்

ஒரு மன்னன்

ஒரு கோவில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்!

160 நாட்கள்

5 மின் சிற்பிகள்

12500 மணி நேர உழைப்பு

175 தனிச் சிற்பங்கள்

9 மாதிரிகள்

1 கோவில்தஞ்சைப் பெரியகோவில் சிற்பம்!

உருவாக்கியது..

ஒரு நிறுவனம்..

சிலை!

கால்நடைப் பண்ணைகள் ஏன் தோல்வியடைகின்றன…?(பகுதி 1)

(Dr.S.கிருபானந்தகுமாரன் [BVSc,MVSc])


( கால்நடை வைத்தியர்)(கடந்த சில மாதங்களாக தமிழர் பொருண்மியம் வார இதழுக்கு நான் எழுதும் கட்டுரைத் தொடர்)

நேர்மையாக செய்யப்படும் எந்த தொழிலும் இலாபத்தை தர சிறிது காலம் எடுக்கும். சமையலை எடுத்துக் கொள்வோம் ஒரு சிறந்த சமையல்காரராக வர ஒருவருக்கு பல வருடங்கள் பிடிக்கும். இதை இப்பிடியும் சொல்லலாம் .ஒருவர் வாய்க்கு ருசியாக சாப்பாட்டை தயார் செய்ய அவருக்கு பல நாட்கள் எடுக்கும். பல தடைவைகள் சமையல் செய்ய வேண்டும்.

சர்வதேசமயமாகும் இந்திய ரூபாய்: இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம்

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன.   இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான கூட்டாண்மையை கட்டியெழுப்ப உதவும் முன்முயற்சிகள் குறித்த  விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன.

பர்தா – 3

(MYM Siddeek)

பர்தாவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் இனவாதிகளா (racists)?
மேற்படி கூற்றினை ஓர் ஆராய்ச்சிக்கான வினா (Research Question) வாக மட்டுமே முன்வைக்கின்றேன். இஸ்லாமோபோபியாவின் (Islamophobia) அறிகுறிகளில் ஒன்று தான் பர்தாவுக்கு எதிரான விமர்சனம்.

பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் ​சேவை

(Tamil Mirror)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது நினைப்பில் இருந்தது.

பர்தா -1

(MYM Siddeek)

அறிவீனமா அல்லது பெண்ணுரிமைக்கு எதிரான அடக்குமுறையா ?
அறியாததை முழுவதும் அறியாமல் பேசுவதையே அறிவீனம் என்கின்றோம் ! இது அறிவிலிகள் காலத்து மக்களின் நிலையாக இருந்தது. அதே காலத்திலேயே சிலர் இன்னும் இந்த 21ம் நூற்றாண்டிலும் வாழ்வது ஆச்சரியமானதும் சகிக்க முடியாததும் ஆகும்.

வாழைப்பழ நாடுகள் (பகுதி-2)

(Ravindran Pa)

வாழைப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் பழவகைகளில் ஒன்று என்ற இனிமைக்குப் பின்னால் அது ஒரு அரசியல் ஆயுதமாக எப்படி பாவிக்கப்பட்டது என்ற கசப்பும் உள்ளது. ரெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான Rebecca Cohen சொன்னார், “வாழைப்பழம் ஒரு பழம் என்பதாய்த் தெரிந்தாலும் அது சுற்றுச்சூழல் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, மற்றும் சமூக அரசியல் சார்ந்த பிரச்சினைகளையும் அது கொண்டிருக்கிறது. வாழைப்பழ வர்த்தகமானது பொருளாதார ஏகாதிபத்தியம் மற்றும் விவசாயப் பொருளாதார உலகமயமாக்கம் என்பவற்றை அடையாளமாகக் கொண்டுள்ளது.“ என்றார்.

தேவதாசி

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

நீர் இன்றி அலையும் உலகு

(சாகரன்)

நீ இன்றி அமையாது உலகு என்றேன்
நீர் இன்றி அமையாது உலகு என்றாய் நீ
நீங்கள் இன்றி அமையாது உலகு என்கின்றார்கள் அவர்கள்

இந்த காதலுக்குள்ளும் அந்த நீர் இல்லாமல் இல்லை.
அதுதான் வாழ்வியல்.

பூபாலசிங்கம்: இது ஒரு பத்திரிக்கைப் பை யனின் கதை

1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கிபத்திரிக்கைப் பை யனாக ஆரம்பித்து இமயம் தொட்டவர்.