வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம்

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

“அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” –  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார்.

தோல்விப் பயத்தில் எம்.பிக்கள் மாற்றுத் திட்டமில்லாத மக்கள்

  (மொஹமட் பாதுஷா)

இதயத்துடிப்பு கண்காணிப்புக் கருவியின் வாசிப்பைப் போல தேர்தல் பற்றிய பேச்சுக்கள்; ஏற்ற. இறக்கங்களாக சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் எந்தத்; தேர்தலையும் எப்படி எதிர்கொள்வது என்ற எந்த திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் இருப்பதை தௌ;ளத்தெளிவாக காண முடிகின்றது.

முன்னைய தலைவர்களை விட மோசமானவரா?

எம்.எஸ்.எம். ஐயூப்

ராஜபக்‌ஷக்களும் அவர்களது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கடந்த கால சம்பவங்களிலிருந்து,  குறிப்பாக  2022 கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கியெறிந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும்  கோப் என்று அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமை எடுத்துக் காட்டுகிறது.

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

’ஆடுஜீவிதம்’

வலிகளின் வேர்களைத் தேடி எழுத்தாக வடித்து கடந்த 2008-ம் ஆண்டு எழுத்தாளர் பென்யமின் (Benyamin) எழுதிய நாவல் ‘ஆடுஜீவிதம்’. 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட நாவல். உண்மைச் சம்பவத்தை இரத்தமும், சதையுமாக எழுத்தின் வழியே காட்சிப்படுத்தியிருந்த நாவலின் திரையாக்கம்தான் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.

துரையப்பா கொலையும் வன்னி நோக்கிய பெயர்வும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவுநாளில் நிகழ்ந்த துயரங்கள் தமிழ் மக்களிடையே சீற்றத்தை உண்டுபண்ணின.  அரசாங்கம் நிகழ்வுக்குப் பொறுப்பேற்காததுடன் குற்றத்திற்குப் பொறுப்பானோரைத் தண்டிக்கவும் தவறியது. இது ஏற்கெனவே தரப்படுத்தலால் வெகுண்டிருந்த தமிழ் இளைஞர்களிடையே மேலும் சினத்தை மூட்டியது. இதைத் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்த் தேசியவாத அரசியலும் அரசியல் வன்முறையும் வளர்க்கப்பட்டன.

சாடியோ மானே செனகல்

வீண் ஆடம்பரமும் வறுமையே 👇 உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான “சாடியோ மானே செனகல்” sadiyemane (மேற்கு ஆபிரிக்கா),
இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது…

அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம்

(Nixson Baskaran Umapathysivam)

TORONTO இல் நடந்த NPP இன் கூட்டத்தில் தமிழ் தரப்பின் 3 கேள்விகளுக்குப்பின், அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம்

நன்றி மனோரஞ்சன்…

ஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது

(ச.சேகர்)

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

புத்தகம்

ஒரு சமூகத்தின் இருப்பையும் போக்கினையும் தீர்மானிப்பதில் அதனுடைய சிந்தனைப்போக்குகட்கு முக்கிய இடமுண்டு. மனிதனின் சிந்தனையை ஊக்குவிக்கும் முக்கிய கருவியாக புத்தகங்கள் மிளிர்கின்றன.ஆக வாசிக்கும் சமூகம் எப்போதும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது எனலாம்.