இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தவறானதும், பயனற்றதும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தவறானது என்று சொல்வதற்குக் காரணம், அந்த இயக்கம் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் ஜனநாயக அரசியல் அமைப்புமுறையை (முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் கூட) அழித்தொழிப்பதற்கு இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்த பயங்கரவாத இயக்கமாகும்.

ஓர் அஸ்தமனத்தின் உதயம்?

(இலட்சுமணன்)

போருக்குப் பின்னரான, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அண்மைக்கால செல்நெறியானது, என்றுமில்லாத அளவு ஓர் இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம், ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளும் அதன் பின்னரான அரசியல் சூழலும் ஆகும்.

சீனா 70: வரலாறும் வழித்தடமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது. அதனடிப்படையில், நாம் புதிய தகவல்களைப் பெறும்போது, எம்மைத் நாம் திருத்திக் கொள்வதற்காகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

காந்தி 150 ஆண்டுகள் பதிவு 145

திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை ஈழவர், புலையர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தக் கூடாது, நடக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

சிந்திக்கணும் சீமான்

(த.ராஜன்)

சீமானிடம் வழக்கமாக வெளிப்படும் தெனாவட்டான பேச்சின் அடுத்தகட்ட நீட்சியாகியிருக்கிறது ராஜீவ் காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி தொகுதியில் அவர் பேசியது. ராஜீவ் காந்தி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது இன்னும் ஆறாத காயமாகவும், நம் தமிழக அரசியல் வரலாற்றில் நீங்காத கறையாகவும் தொடர்கிறது.

விடிந்தால் கனடியத் தேர்தல்

(சாகரன்)

ஒரு கண்டம் அளவிற்கு விரிந்திருக்கும் வட அமெரிக்க நாடு கனடாவின் பொதுத் தேர்தல் விடிந்தால். பல இலட்சம் உழைக்கும் மக்களின் விடியலைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும் உலகளாவிய காலநிலை மாற்றம் பற்றிய சுற்றுச் சூழல் போன்ற விடங்களின் போக்கை தீர்மானிக்கும் தேர்தலாகவும் இது முன்னிலை பெறுகின்றது. அமெரிக்கா, இதனைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அதி தீவிர வலதுசாரிக் கொள்கையாளர்களை நாட்டின் தலைவராக மாற்றி தேர்தலைப் போன்று கனடாவையும் மாற்றியமைக்கும் பொது செயற்பாட்டிற்குள் கனடாவையும் வீழ்த்தும் பிரச்சாரங்களே உள்ள நாட்டிலும் வெளி நாட்டிலும் ஊடகச் செல்வாக்குள் செயற்பட்டு வரும் நிலையில் தேர்தலை கனடா சந்திக்கின்றது.

குர்திஷ் மீதான துருக்கிய முற்றுகை: வரலாறு கற்றுக்கொடுக்கும் போது…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்க)

‘வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரேயொரு பாடம், நாம் வரலாற்றிலிருந்து பாடங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே’ ஆகும். கன்பூசியஸின் இவ்வரிகளை மீள்நினைவூட்டுவதுபோல், நிகழ்வுகள் நடக்கின்றன.   

கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?

வெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம் சில புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ‘அசுரன்’ ஒரு நவயுகப் படம். அண்மைக் காலமாக, சாதியால் ஒடுக்கப்பட்டவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு திரைப்படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

அந்தத் தேசப்பற்றாளர்கள் எங்கே?

(எம்.எஸ்.எம். ஐயூப்)
இவ்வருட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம்களின் பெயரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பௌத்த தீவிரவாதக் குழுக்கள், பயங்கரமான முஸ்லிம் விரோத பிரசாரமொன்றை ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

முதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு

(காரை துர்க்கா)
இனிமையான ஒரு மாலைப் பொழுது; மழையோ வெயிலோ இல்லாத இ(மி)தமான ஒரு காலநிலை. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில், புதினப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்….