‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’

(காரை துர்க்கா)
யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.

சில்க் ஸ்மிதா என்கிற தோழர் விஜயலக்ஷ்மி

(Rathan Chandrasekar)


நேற்று பா.பாலா Paa Baalaa
மெஸெஞ்சரில் சில்க் ஸ்மிதா படம் ஒன்று அனுப்பி நினைவூட்டல் என்றார்.
பிறந்தநாளா என்றேன். சார்ர்ர் என்று இழுத்து நினைவுநாள் சார் என்றார்.

காலம் பிறந்தநாள் இறந்தநாளை மறக்கடிக்கிறது. ஆனால் ஸ்மிதாவை மறக்கடிப்பதேயில்லை.

ஒரு மீள் பதிவு பதியத் தோணுகிறது .

பிக்குகளின் மகாவம்சக் கனவு இலங்கைத் தீவை நாசமாக்கி வருகிறது

(வேதநாயகம் தபேந்திரன்)

இலங்கையின் நீதித்துறை தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தண்டனை வழங்க மட்டுமே உருவாக்கப்பட்டது என்ற ஐயம் முல்லைத்தீவு செம்மலை விவகாரத்தால் மீண்டும் தோன்றியுள்ளது. இது சிங்கள பௌத்த நாடு என்பதை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பதை தேரர்கள் ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.

எழுக தமிழ்: ‘வரலா(ற்)று’ தோல்வி

(என்.கே. அஷோக்பரன்)
“தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர்.
சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே, ‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்யப் பேரினவாதத் தேசியம் முயன்றது.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 4)


(அந்தோணி!)

சூனா. பானா. தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவராகி வெளிநாடுகளுக்குச் சென்று பல்லிளித்து வந்ததைத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை. அரசியல் என்றால் புன்னகைப்பதுதான் என்று இவர் கண்டுபிடித்திருந்தார் போலும். அன்று என்னைத் தாக்கும் போது அவரது முகத்தை நான் நேராகப் பார்த்தேன். மிகவும் கொடூரமானதும், அசிங்கமானதாகவும் இருந்தது.

ராஜனிதிராணகம படுகொலை வெளிவராத உண்மைகள்

தன்னுடைய 20 வயதில் 35 வயதான ராஜினியை கொன்றவன் தன்னுடைய 33 ம் வயதில் நோய்வந்து மாண்டான். எல்லாப் புலித்தலைவர்களும் தங்களது பிள்ளைகளின் திருமணங்களைகாணாது 2009 முள்ளிவாய்க்காலில் மண்டையை போட்டார்கள்.

(By 1989ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக
மருத்துவபீட மாணவன்)

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 3)

(அந்தோணி!)

காலையில் கடன் கழிக்க வரும்போது அவர்களை அருகில் பார்ப்பேன். மனிதன் என்ற அடையாளங்களை இழந்திருந்தனர். அவர்கள் தாக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, நாட்பட்ட பிணங்கள் போல நடந்து வருவார்கள். மனிதர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்படுகின்றனர் புலி என்ற விலங்குகளால், இந்தப் புலி விலங்குகளை பிற நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்த்திப் பாடுகின்றனர். வெளியுலகுக்கு வேங்கைகள், உள்ளுர் மக்களுக்கு கொடிய விலங்குகள்.

AR , FR,JR………

(வேதநாயகம் தபேந்திரன்)
1977 பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 5/6 பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அப்போது கொழும்பு அரசின் உயர் பதவிகள் பலவற்றைத் தமிழர்களே வகித்தனர். தமிழர்கள் AR ( Administration Regulations – நிர்வாக ஒழுங்கு முறைகள் ), FR ( Financial Regulations – நிதிப் பிரமாணங்கள் ) முறைகளை அச்சொட்டாகக் கடைப்பிடித்து அரசாங்கத்தை வினைத் திறமை உள்ளதாக நடத்தினார்கள்.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (Part 2)

(அந்தோணி)

‘ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர். அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை அதிகாரி அங்கே இருந்த மல்லி என்ற கொடிய மிருகம்தான். இந்த மல்லி என்ற மிருகம் பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராம். அப்போது அவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நெத்தியில் சுட்டுக்கொன்ற மாவீரன் என்று சிறிய மிருகம்கள் புகழ்ந்து சொன்னார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா?

(இலட்சுமணன்)

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு நாள் நெருங்குகையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பிரகடனங்களும் பிரசாரங்களும் சூடு பிடித்துள்ளன. இந்த வேளையில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் ஒருபுறமாகவும், சி. வி விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமசந்திரனும் பிறிதொரு புறமாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்னொரு புறமாகவும் தமிழ்த் தேசியத் தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனர்.