(அந்தோணி!)
யூதர்களை கிற்லர் எப்படிக் கொடுமைப் படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர். யூதர்கள் மீது இரக்கம் கொண்டனர். ஆனால் தமிழீழம் என்ற சொல்லின் பின்னால் மறைந்திருந்த மிருகங்களான மிருகம்கள் (புலிகள்) எங்கள் இனத்தவரை எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினர் என்பது வெளியுலகுக்குத் தெரியாது. இந்த மிருகம்கள் எங்கள் இனத்தை நசுக்கி அதன் இரத்தத்தினை உறிஞ்சிய வரலாற்றினை எங்கள் மக்களுக்கு எடுத்துரைக்க மிருகம்களே வழி கோலியுள
புலிகள் பற்றியஉண்மைத் தகவல்களை வெளியிட நாம் அவர்களாலேயே தள்ளப்பட்டுள்ளோம். இங்கே வரும் புலிகள் என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் மிருகம்கள் என்று குறிப்பிட்டுள்ளோம். கீழே வரும் தகவல்களில் மிருகம்கள் என்ற பதத்தினை புலிகள் என்று எடுத்துக்கொள்ளவும். நாசிகளின் கொடுமைகளை விட மிருகம்கள் செய்த கொடுமைகள் பயங்கரமானது.
எங்கள் இணைய தளம் மூலமாக தனது அனுபவங்களை வெளியிடுகிறார், திரு. அந்தோணி. இவர் நாப்பது மாதங்கள் மிருகங்களின் வதை முகாம்களில் இருந்துள்ளார். இதோ அவரே:-
எனது சொந்த ஊரான நாவாந்துறை யாழ்ப்பாணம் நகரில் நான் இருந்தபோது ஆயுதம் தரித்த மிருகம்கள் ரெண்டு பேர் என் வீட்டுக்கு வந்தனர். விசாரணை ஒன்று உள்ளது எங்களுடன் வரவேண்டும் என்றனர்.
எங்கள் ஊரின் தலைவர் முன்னிலையில் இவர்கள் மிருகம்கள்தான் என்பதை உறுதி செய்த பின்னர், என்னை நல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு வானில் ஏற்றி கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர். என்னுடன் மூன்று மிருகம்கள் ஒட்டிக்கொண்டிருந்தனர்.
மறுநாள் அங்கிருந்து வட்டக்கச்சிக்கு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கூடவே இரண்டு மிருகம்கள் சைக்களில் வந்தனர். அங்கு சென்றதும், வட்டக்கச்சி பொறுப்பாளர் நசீர் என்னும் பெரிய மிருகம்யிடம் ஒப்படைத்தனர். அவர் என்னுடைய முகவரி, குடும்ப உறுப்பினர்கள் விபரங்களைச் சேகரித்தார்.
ஒருநாள் அங்கு வைத்திருந்தனர். மறுநாள் காலை மீண்டும் சைக்கிளில் உருத்திரபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே “அத்தார்” என்ற பெரிய மிருகம்யும் உதவி மிருகம் \”கீதன்\” என்பவரும் என்னை விசாரித்தனர். 1990 மார்ச் 15ம் திகதி என்று நினைக்கிறேன், உருத்திரபுர வயல்வெளியில் தனியாக ஒரு வீடு இருந்தது. அங்கே அழைத்துச் சென்றனர். அந்தத் தனி வீட்டினுள் ஏறக்குறை 15 தமிழ் இளைஞர்கள் விலங்கு மாட்டப்பட்டு தனித்தனியாக அமரவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தலையைக் குனிந்து கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இலங்கை ராணுவம்தான் கைவிலங்கிட்டு தமிழர்களை வதைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். முதல் தடவையாக தமிழர்கள் தமிழர்களை கைவிலங்கிட்டு அமரவைத்திருந்ததைப் பார்த்தேன். பின்நாளில் நான் படவிருக்கும் கொடுமைகளை அன்று அறிந்திருக்கவில்லை.
அந்த தனிவிடுதியில் இரண்டு நாட்கள் வைத்திருந்தனர். இந்த இரண்டு நாளும் அங்கிருந்த ஏனைய 15 பேருடனும் கதைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அங்கிருந்தவர்களும் என்னுடன் கதைப்பதற்கு முற்படவில்லை. அந்த அறையினுள் எந்த நேரமும் நான்கு ஐந்து மிருகம்கள் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மூன்றாவது நாள் ஒரு ட்ராக்ரர் ஒன்று நாம் இருந்த வீட்டின் முன் வந்து நின்றது. அதில் உருத்திரபுரம் பெரிய மிருகம் அத்தார் இருந்தார். மாலை ஆறுமணியளவில் அந்த ட்ரக்ரரில் ஏறச் சொன்னார் ஒரு முரட்டு மிருகம். நாம் ட்ராக்ரரில் ஒவ்வொருவராக ஏற்றப்பட்டோம். ஏறுவதற்கு முன்னர் என்னுடைய கண்கள் கட்டப்பட்டன. அதே போன்று ஏனையவர்களது கண்களும் கட்டப்பட்டன. இருட்டு வேளை, வாகனம் நகர்கிறது. எந்தப்பக்கம் அந்த வாகனம் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ட்ராக்ரர் பெட்டி குலுக்கிக் கொண்டும், சிலவேளை எங்களை ஒருவருக்கு மேல் ஒருவர் மோதி விழவும் செய்தது. கண்கள் கட்டப்பட்டிருந்ததால் விழுந்துவிடாமல் இருக்க எதனைப் பிடிக்கவேண்டும் என்று தெரியாது. ஒரு தடவை அத்தனை பேரையும் மூன்றடி உயரத்துக்குத் தூக்கி வீசி நாம் அனைவரும் பெட்டியின் ஓரங்களில் அடிபட்டு விழுந்தோம். இதனைக் கண்டு நகைத்தனர். அவர்களுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். ஏனென்றால் நாம் அவர்களுக்கு அப்போ மனிதர்களாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் மனிதர்கள் அல்ல என்று பின்னால் கண்டுகொண்டேன்.
மூன்று மணி நேர ஓட்டத்திற்குப் பின்னர் அந்த இருட்டுவேளையில் ஓர் வீட்டினில் வாகனத்தை நிறுத்தி அனைவரையும் இறங்கும்படி அத்தார் என்ற பெரிய மிருகம் உத்தரவிட்டார். கட்டப்பட்டிருந்த கண்கள் கழற்றப்பட்டன. அந்த வீட்டில் \”மல்லி\” என்ற ஓர் கொடிய மிருகம் எங்களைப் பார்த்து முறைத்தது. இந்த மிருகம்க்குத் துணை மிருகம்யாக இருந்தது \”ராஜன்\” என்ற மிருகம். எங்களை அத்தார் மிருகம் மல்லி மிருகம்யிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டார்.
இந்த அத்தாரை நான் இதன் பின்னர் பார்க்கவே இல்லை. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த அத்தார் மிருகம் தற்கொலை செய்து கொண்டதாகக் கேள்விப்பட்டேன். இராணுவத்திடம் அகப்பட்டுக்கொடதால் தற்கொலை செய்து கொண்டதாக என்னவேண்டாம். பெண்களுடன் தவறாக நடந்துகொண்டதும், மக்களிடமிருந்து பறித்த பணத்தை இவர் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டதால் அவமானத்தினால் விசாரணைக்கு முன்னரே சைனையிட் உண்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் தெரியவந்தது நாம் இருக்கும் இடம் வவுனிக் குளத்தில் இருக்கும் சிவபுரம் என்பது. இந்த இடத்தில் ஐந்து முதல் ஆறு வீடுகள் வரையில் மிருகம்கள் வைத்திருந்தனர். கையில் போடப்பட்டிருந்த விலங்குகள் கழற்றப்பட்டன. அதற்குப் பதிலா சங்கிலி கொண்டு வந்தனர். அந்தச் சங்கிலி 2 அடி நீளம் இருக்கும். என்னுடைய இரண்டு கால்களையும் அதன் இரு முனைகளாலும் சுற்றி முனைகளில் பூட்டுப் போட்டு பூட்டினர். எனது இரு கால்களுக்குமிடையில் இருந்த சங்கிலி நீளம் 10 அங்குலங்களாகும். எனதருமைத் தமிழர்கள் எங்களுக்கு மிருகங்களைப் போன்று கால்களில் விலங்கிட்டனர். நான் ஓர் கிறிஸ்தவன், “ஓ ஆண்டவரே இந்தப் பாவிகளை மன்னிக்க வேண்டும்” என்று இறைவனை வேண்டிக்கொண்டேன். ஏனெனில் இதுவே கொடுமை என்று அப்போது எண்ணிக் கொண்டேன். இதையும் விடக் கொடுமைகள் எனக்கு நடக்கப் போகிறது என்று என்னால் உணர முடியவில்லை!
நான்கு நாட்கள் இந்தச் சங்கிலியுடன் பெரும் அவதிப்பட்டேன். மலம் கழிப்பதற்கு கழிவிடம் ஒரு திசையிலும் கிணறு ஒரு திசையிலும் இருந்தது. கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு கழிவிடத்துக்குச் செல்ல வேண்டும். நிதானம் தவறி காலை எடுத்துவைத்து ஐந்தாறு தடவைகள் முகம் நிலத்தில் படுமளவு விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டது. நான் நடந்து செல்வதை மிருகம்கள் தள்ளி நின்று ரசிப்பார்கள். எங்கள் வேதனை அவர்களை மகிழ்வித்தது.
(தொடரும்…..)