அமெரிக்க காட்டுபன்றியை அலறி ஓட வைத்த இந்த ஒல்லி மனிதர். வியட்நாம் புரட்சியாளர் தோழர் ஹோசிமின் நினைவுநாள் இன்று…..
Category: கட்டுரைகள்
Articles
செயற்கை நுண்ணறிவு; மனிதனை மனிதனே பலியெடுத்தல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மனிதகுல வரலாற்றின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், பகுத்தறிவினதும் அறிவியல் வளர்ச்சியினதும் பங்கு பெரிது. இன்று, மனிதகுலம் கண்டிருக்கிற வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சியின் வலிமையால் சாத்தியப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத ஒன்று, இன்று சாத்தியமாகியிருக்கிறது. அறிவியல், மிக வேகமாகக் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் வளர்ந்துள்ளது. இப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிர்ப்புக் கூறக்கூட முடியாத வகையில், அறிவியல் பல திசைகளிலும் பரந்து விரிந்துள்ளது.
தோல்வியின் விளிம்பில் ‘எழுக தமிழ்’
(புருஜோத்தமன் தங்கமயில்)
கடந்த வாரம், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரசாரப் பயணத்தை சி.வி. விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமசந்திரனும் இருந்தார். முதலாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, 2016 செப்டெம்பரில் நடைபெற்றது. மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, ‘எழுக தமிழ்’ போராட்ட வடிவத்துக்கான வரலாறு, மூன்று வருடங்கள் மட்டுமே!
தமிழீழ ஆதரவும் திருமாவளவனும்
ஆரம்பகாலங்களில் போராட்டத்தை திமுக ஆதரித்ததுபோல நடித்தாலும் ஆதரிக்கவே இல்லை.ஆனால் திமுகவின் தொண்டர்கள் மனப்பூர்வமாக ஆதரவைத் தந்தனர்.இதே நேரம் திராவிடர் கழகம் ஆதரித்தபோதும் ஈழ ஆதரவை வைத்து பொருளாதார வளங்களைத் தேடினார்கள்.இதற்கு புலிகளையும் திமுக தொண்டர்களையும் பயன்படுத்தினார்கள்.
பொய்கள்
(Vijaya Baskaran)
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் யோகேஷ் வராதே என்ற பீகார்வாசி இந்திய சாதிக்கொடுமைகள் சம்பந்தமான சிறிய கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்.நானும் போயிருந்தேன் அங்கே வந்த இந்தியர்கள் நாங்கள் இலங்கையர்கள் என்றதும் அன்போடு வரவேற்றார்கள்.புலிகளின் போராட்டம் இன ஒற்றுமை பற்றி புகழ்ந்தார்கள்.சாதிவேறுபாடின்றி ஒற்றுமையாக போராடுவதாக பெருமைப்பட்டார்கள்.
அம்பேத்கர் வெறும் நிறுவப்பட்ட சிலை…..?
விடுதலைச்சிறுத்தைகள் எதிர்கொள்ளும்
(Chinniah Rajeshkumar)
விடுதலைச்சிறுத்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் SOAS பல்கலைக்கழக மண்டபத்தில் திருமாவளவன் பேசும் போது சாதிய மன நிலை எவ்வாறு சமூகத்தில் வேரூன்றி இருக்கின்றது என்பதற்கு உதாரணம் காட்டினார். கருணா நிதி அண்ணா கட்சி தொடங்கினால் அது அனைவருக்குமான கட்சி. எம் ஜி ஆர் தொடங்கினால் அனைவருக்குமான கட்சி. விஜய காந்த், கமலகாசன் தொடங்கினால் அனைவருக்குமான கட்சி. ரஜனி காந்த் தொடங்கினாலும் அனைவருக்குமான கட்சி. ஆனால் திருமாவளவன் தலைமையில் தொடங்கினால் அது ஒரு தலித்துகளை பிரதினிதுத்துவப்படுத்தும் கட்சி.
மூன்றாவது வேட்பாளர்
(என்.கே. அஷோக்பரன்)
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே இருதரப்புப் போட்டிகளாகவே அமைந்திருக்கின்றன. பல கட்சி முறைமை நடைமுறையிலிருக்கும் நாடாக இருந்தாலும், பிரதான கட்சிகளாக இரண்டு கட்சிகளே எந்தக் காலகட்டத்திலும் இருந்து வந்த போக்கைக் காணலாம். ஏனைய கட்சிகள் ஒன்றில் ஏதோவொரு பிரதான கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் அல்லது, தனித்து எதிர்த்தரப்பிலிருக்கும் அரசியல் பாணியே இங்கு காணப்படுகிறது.
நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்…
இந்தியாவின் அணுவாயுத அரசியல்
(ஜனகன் முத்துக்குமார்)
இந்தியாவின் அணுசக்தி கொள்கையில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியாவின் பாதுகாப்பமைச்சரின் அறிக்கை பிரதிபலிக்கிறது. இந்தியா ஏற்கெனவே அதன் விநியோக முறைகளையும், ராடார் திறனையும் பூர்த்தி செய்துள்ளதாக குறித்த அறிக்கை மூலம் தெரிகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாகவே தான் இரட்டை நோக்கங்களுடன் செவ்வாய் மற்றும் சந்திரன் பயணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஏவியிருந்தது. இந்நிலை, பாகிஸ்தானில் அணுவாயுதங்கள் உள்ளிட்ட இலக்குகளை இந்திய வான்படை கண்டுபிடித்து சரிசெய்ய முடியும் என்று இந்திய வான்படை தலைவர் கூறுகிறார்.