வார்த்தைப் போரில் அமெரிக்க ஜனாதிபதி ட்றம் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி


(தோழர் ஜேம்ஸ்)

ரஷ்யா, உக்ரேன் யுத்தம் ஆரம்பித்த நாட்களின் தொடராக அந்த யுத்த்தின் பின்புலம் பற்றி விரிவாக எழுதி இருந்தேன்.
தற்போது ட்றம் ஆட்சியிற்கு வந்த பின்பு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ‘வியாபாரத்தில்’ அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த வளங்களும் ஒரு காலத்து சோவியத் குடியரசின்(USSR) வளங்கள்தான் என்பதையும் இங்கு கவனத்தில் எடுக்கவும்.

யுத்தம் அற்ற வியாபாரத்தை அவர் சில இடங்களில் செயற்படுத்த விரும்புவார். அதில் அதிக வருவாய் வரும் என்பதாக.

அதில் ஒன்றுதான் அவரது முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் விலக்கி தலிபான்களிடம் ஆட்சியை கைவிட்டு வந்தது

இதற்கு முன்பு இருந்த ஜோ பைடன் அமெரிக்க நிர்வாகம் யுத்தத்தை தொடரும் ஆயுத விற்பனை என்ற வியாபாரத்தை நடாத்தி வந்தது
போர் நிறுத்தம்….

ஏலவே அமெரிக்கா யுத்தத்திற்கான வழங்கிய பணத்தை உக்ரேன் மீள் அளிக்க வேண்டும்.

அல்லது

உக்ரேனின் வளங்களில் சிலவற்றை 500 மில்லியன் அளவிற்கு எழுதித் தரவேண்டும் என்றான முன் மொழிவை ட்றம் நிர்வாகம் முன்வைத்துள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தை கைசாத்திட வெள்ளை மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார் ஜெலன்ஸ்கி

இதன் உச்சமாக இன்று அமெரிக்காவின் ஓவல் கட்டடத்தில் ட்றம், ஜெலன்ஸ்கி இடையிலான வார்த்தைப் போர் ஏனைய நிர்வாகிகள், பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது

இந்த வார்த்தைப் போர் உச்சத்தை அடைந்துள்ளது.

பொதுவாக இம்மாதிரியான சந்திப்புகளின் பின்பு நடைபெறும் கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு உணவருந்தல் என்பன இடை நிறுத்தப்பட்டு ஜெலன்ஸ்கி வெளியேறுவிட்டார்.

உலகம் முழுவதும் ஊடகங்களில் இது சார்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொணடிருக்கையில்
Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. இக் கட்டுரையை இங்கு இணைக்கின்றேன் இது பல உண்மைகளை தெளிவுபடுத்தும் என்பதற்காக…..

“எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது”
என்ற தலைப்பில் 27.9.2018 Yale (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை.

பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர்.

ரஷ்யா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.

1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன.

கோர்பச்சேவ் (1985-1991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Belavezha என்ற இடத்தில் ஒன்றுகூடி சோவியத் இனை இல்லாமலாக்க கூட்டணி அமைத்துக் கொண்டார்கள் என்ற தகவலும் வெளிவந்தது.

சோவியத் இன்மையின் பின், அந்த கட்டமைப்பின் மையமாக செயற்பட்ட ரஷ்யக் குடியரசு பலம்பொருந்திய நாடாக உருவாகியது.
பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து அமெரிக்காவுடனான அதன் உறவை பேண விரும்பியது.

1992 இல் ஜெல்சின்(அப்போதைய ரஷ்யா அதிபர்) அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார்.

“நாம் இருவரும் கைகுலுக்கிக் கொள்வோம்” என காங்கிரசில் உரையாற்றினார்.

ஆனால் அமெரிக்கா ரஷ்யாவை தனது எதிரி நிலையிலிருந்து மாற்றிக்கொள்ளவில்லை.

கம்யூனிச கட்சிகள் ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியிலும் பிரான்சிலும் பலம்பொருந்தியதாக இருந்தன அன்று.

கம்யூனிச அச்சம்; அமெரிக்காவுக்கு நீங்கியபாடில்லை.

ரஷ்யாவிலும்கூட அது மீண்டும் எழலாம் என்ற அச்சமும் இருந்தது.
இந் நிலையில் 1992 இல் அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கையின் பொறுப்பாளர் Paul Wolfowitz இன் இரகசிய அறிக்கை கசிந்து நியூயோர்க் ரைம்ஸ் இல் வெளியாகி பரபரப்பாகியது.
அது….

  • அமெரிக்கா தனது மேலாதிக்க நிலையில் ஒரேயொரு நாடாக இருப்பதற்கு சவாலாக எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்கக்கூடாது.
  • தமது நட்பு நாடுகள் ஆயுத உருவாக்கம் அல்லது உற்பத்தி குறித்து கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் உங்களுக்காக செய்வோம்.
  • ரஷ்யாவை கண்காணிக்க வேண்டும். அந்த கரடி மீண்டும் தனது பின்காலை ஊன்றி எழுந்து நிற்கலாம்.
    இது பின்னர் பாதுகாப்பு அமைச்சர் Powel, Cheney இருவராலும் மாற்றி எழுதப்பட்டது.
    ரஷ்யாவும், அமெரிக்காவும் Super Power ஆக தொடர்ந்து இருக்க வேண்டும் என மாற்றம் பெற்றது.
    ஆனால் அது காகிதத்தோடு போனது. விரைவிலேயே ரஷ்யா இரண்டாவது நிலை நாடாகவே கணிக்கப்பட்டது.
    அமெரிக்க வெளிநாட்டமைச்சரான ஜேம்ஸ் பேக்கருக்கு வாக்குறுதி அளித்தபடி பேர்லின் சுவரை கொர்பச்சேவ் வீழ்த்தினார்.
    “இனி நேற்றோ(NATO) ஒரு அங்கலம்கூட கிழக்குநோக்கி நகராது” என்பதே அந்த வாக்குறுதி.
    அந்த வாக்குறுதியும் காகிதத்தோடு போனது.
    90 களின் நடுப் பகுதியில் நேற்றோவை கிழக்கு நோக்கி விரிவுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டு முதற்கட்டமாக போலந்து, செக் குடியரசு, கங்கேரி நாடுகள் நேற்றோவில் இணைக்கப்பட்டன.
    அமெரிக்க வரலாற்றாய்வாளரும் இராசதந்திரியுமான ஜோர்ஜ் கென்னன் இந்த முடிவை எச்சரித்தார்.
    மே1998 இல், “இது ஒரு புதிய பனிப்போரின் ஆரம்பம் என நினைக்கிறேன்” என்றதோடு, “ரஷ்யா இதற்கேற்ப படிப்படியாக தனது நிலையை மாற்றிக்கொள்ள நேரிடும். அது அவர்களின் தற்போதைய கொள்கையை மாற்றியமைக்கும்” என்றார்.
    “இந்த நேற்றோ விரிவாக்க முடிவு ஒரு கவலைதரும் தவறு எனவும் அதை எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.
    நேற்றோவின் விரிவாக்கத்தால் ரஷ்யா ஏமாற்றமடைந்தது.
    அதன் விரக்தியை ஈடுசெய்ய அமெரிக்காவோ மேற்குலகோ எதையுமே செய்யவில்லை.
    மாறாக யூகோஸ்லாவியா மீதான யுத்தத்தை ஆரம்பித்தது. சேர்பியாவில் நிலப்பரப்புள் இருந்த கொசோவோவை தனிநாடாக பிரித்தது.
    ஜெல்சின்(ரஷ்யா அதிபர்) கோபமடைந்தார்.
    “நாங்கள் கெயிற்றி நாடு அல்ல. எங்களை நீங்கள் அப்படி கையாள முடியாது. நாங்கள் பெருமிதமான நாடு.
    எங்களுக்கு அத்தகைய கடந்த கால வரலாறு இருக்கிறது. ரசியா மீண்டும் எழும்” என தனது கோபத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தினார்.
    2000 இல் புட்டின் செய்த முதல் முயற்சி ரஷ்யாவை நேற்றோவில் அங்கம் வகிக்க கோரிக்கை விட்டதுதான்.
    ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நேற்றோ உண்மையில் சோவியத் இன் கம்யூனிசத்துக்கு எதிராகவும் அது மேற்கொள்ளக்கூடிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் செயற்படும் நோக்கம் கொண்டதாகவே இருந்தது.
    இதன் மாற்றுக் கூட்டணியாக இருந்த Warsaw கூட்டணி சோவியத் உடைவோடு இல்லாமல் போனபோது நேற்றோவுக்கான தேவையும் இல்லாமல் போயிருக்க வேண்டும்.
    மாறாக அது பலம்பொருந்தியதாக மாறிக்கொண்டிருந்தது.
    ஐரோப்பாவின் பாதுகாப்பு என்ற லேபலில் இயங்கியது NATO அமைப்பு.
    இதே தர்க்கத்தை வைத்து புட்டின் “அப்படியானால் ஐரோப்பாவில் உள்ளடங்கும் ரஷ்யா ஏன் இதில் அங்கம் வகிக்கக்கூடாது அல்லது எம்மையும் உள்ளடக்கிய புதிய அமைப்பு ஒன்றை ஏன் உருவாக்கக் கூடாது” என கேள்வி எழுப்பினார்.
    அதற்கு அவருக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த பதில் Go for walk என்ற நையாண்டியாகும்.
    ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக அல்லது இணைப்பு நாடாக ரஷ்யா இருப்பதற்கான கோரிக்கையை புட்டின் முன்வைத்தபோதும், அதை நிராகரித்தமைக்கு அரசியலடிப்படையிலான காரணம் முன்வைக்கப்படவில்லை.”இல்லை ரஷ்யா மிகப் பெரிய நாடு” என்ற பதிலே கிடைத்தது.
  • நேற்றோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் உண்மையில் 1994 காலப்பகுதியில் பில் கிளிங்ரனின் அமெரிக்க ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று வரை எந்த மாற்றமும் இன்றி தொடர்கின்றது.

இதற்குள் இருக்கும் நீண்ட காலமாக செயற்பாட்டில் இருக்கும் தற்போதைய இஸ்ரேல் பிரதம மந்திரியி நெத்தனயாகோவின் நீண்ட கால செயற்பாடுகளும் அடங்கும். அது முன்னால் சோவியத் நட்பு நாடுகளை துவசம் செய்வது என்பதாகவும் அதன் உடன் கூடி ஏனைய சோவியத் ஆதரவு திவுpரவாத அமைப்புகளை இல்லாது செய்தலும் அடங்கும்.

இந்த புறக்கணிப்பு எல்லாம் ரஷ்ய மக்களுக்கு கோர்பச்சேவ் மற்றம் ஜெல்சின் மீதான கோபத்தை விளைவித்தது.
“நீங்கள் இருவரும் எமது நாட்டை விற்றுவிட்டீர்கள்” என அவர்கள் கடுமையாக சாடினார்கள்.

இன்று இந்த இருவருக்குமான செல்வாக்கு ரசியாவில் 5 வீதத்துக்கும் குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.(இந்த இருவரும் தற்போது மரணமடைந்தும் விட்டனர்)

இந்த கோப உணர்ச்சி ரஷ்ய மக்களை அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு மேலும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

ஆனாலும் நியுயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தபோது தொலைபேசியில் புட்டின், அமெரிக்க அதிபர் புஷ் உடன் தொடர்புகொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்பட தனது உதவியை நல்குவதாக தெரிவித்தார்.

அதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு மத்திய ஆசியப் பகுதியை உபயோகிக்க வசதிசெய்து தருவதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக சேர்ந்து செயற்படுவோம் எனவும் சொன்னார்.
ஆனால் புஷ் அதை புறந்தள்ளினார்.

இவ்வாறாக ரஷ்யா தனது தரப்பில் எடுத்த இராசதந்திர முயற்சிகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டன.

2007 இல் G20 மாநாட்டில் புட்டின் உரையாற்றியபோது, நேற்றோவின் விரிவாக்கம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார்.
“நேற்றோ ஐரோப்பிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது என்பதால் இதை கேட்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கு எதிராக ஏன் இந்த விரிவாக்கம்?” என நேரடியாகவே கேட்டார்.

“1990 மே17 அன்று புரூசலில் என்ன சொல்லப்பட்டது. நேற்றோ இராணுவத்தை ஜேர்மனிக்கு வெளியில் தரித்துவைக்க மாட்டோம். சோவியத் யூனியனுக்கு ஒரு ஸ்திரமான பாதுகாப்பு உறுதிப்பாட்டை நாம் வழங்குவோம் என்றீர்கள். எங்கே அந்த உறுதிப்பாடு?” என்று கேட்டார் புட்டின்.

அதற்கான பதில் இவ்வாறாக இருந்தது. “ஆம் கொடுத்தோம்தான். அது சோவியத்துக்குத்தான், ரஷ்யாவுக்கு அல்ல. நீங்கள் ரஷ்யர்கள்”. என பதில் கிடைத்தது.

ரஷ்யாவை அவமானப்படுத்துகிற இன்னொரு நையாண்டிப் பதிலாக இது இருந்தது.

2017 இல் புட்டின் அமெரிக்காவையும் மேற்குலகையும் பார்த்து இவ்வாறு கூறினார். “எங்களுடைய தவறு உங்களை நம்பியது. உங்களது தவறு அதை உங்களுக்கு சாதகமாக எடுத்தது” என்றார்.

மேற்குலகினதும் அமெரிக்காவினதும் இந்த அரசியல் சித்துவிளையாட்டு புட்டினின் அணுகுமுறைகளை மாற்றியமைத்தது.

அதாவது புட்டின் இன்று இவர்களை எந்தவிதத்திலும் நம்பவில்லை.
இன்னும் எதிர்நிலையில் நிறுத்திவிட்டிருக்கிறது.

இராஜதந்திர முயற்சிகளை இல்லாமலாக்கியிருக்கிறது.

விடுவிக்கப்பட்ட ஒரு இஸ்ரேல் கைதியின் வாக்குமூலம்


ஹமாஸ் விடுதலை போராளிகளிடம் கைதியாக இருந்து விடுதலையான அலெக்சண்டர் ட்ரோபனோவ் வழங்கிய அழகான மற்றும் ஆணித்தரமான வாக்குமூலம் :

வட இலங்கை வளம்

(Sivakumar Subramaniam)

வட இலங்கை, குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள், பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட மாகாணமாக அறியப்படுகிறது.

ஜனாதிபதி அனுர இன் பாதுகாப்பு

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அது ஆட்சி மாற்றமாக ஆரம்பித்து அரசியல் மாற்றமாக உருவெடுத்து வருவதாக உணரப்படுகின்றது
இந்த அரசியல் மாற்றம் உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் விரும்பப் படாத நிலமைகளையும் சிலர் மத்தியில் ஏற்படுத்தியும் இருக்கின்றது.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது சமூகப் பொறுப்பாகும்

மானிட குலத்துக்கும் பூமிக் கிரகத்தின் எதிர்காலத்துக்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் என்றே கூறலாம். அந்தவகையில், நீரானது எமது மிகப்பெரிய இயற்கை வளமாகும். இந்த நீர் வளத்தை வேறு எதனாலும் ஈடு செய்யப்பட முடியாது. அவ்வாறு எமது உயிர்வாழ்வுக்கு உறுதுணையாக உள்ள நீரை நாம் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

திராய்க்கேணி படுகொலைகள்

‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.

தோழர் அன்ரனி ஜீவா

(என். சரவணன்)

அந்தனி ஜீவா அவர்கள் காலமாகிவிட்ட செய்தி கவலையளிக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் உடல்நிலை குன்றி இருந்தார்.மலையக இலக்கியத்தின் அடையாளங்களில் ஒருவராக பலரால் அறியப்பட்டவர்.

பொருளாதார நெருக்கடியும் முடிவுறாத் துயரமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

புத்தாண்டு பிறந்தாலும், அதனை சராசரி இலங்கையர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி, ஏமாற்றம், புதிய ஜனாதிபதி, அதீத பெரும்பான்மையுடனான பாராளுமன்றம் என மூன்று ஆண்டுகளில் ஏராளமானவற்றை இலங்கையர்கள் பார்த்து விட்டார்கள். இன்னமும் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. போகிறபோக்கில் இப்போது அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லத் தோன்றுகிறது.

“தாழ்த்தப்பட்ட’ மக்களை மறந்தனவா தமிழ்க் கட்சிகள்?

இராசலிங்கத்துக்கு ஆலோசனை வழங்கிய சிங்கள எம். பி.

1970 ஆம் ஆண்டு எம்.சி.சுப்பிமணியம் அவர்களுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி எவரும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை என்றும் அதுவும் அரசாங்கக் கட்சியின் தேசியப்பட்டியல் மூலமே அவர் வரமுடிந்தது என்றும் சாரப்பட அருண் சித்தார்த் நேற்று காணொளியில் தோன்றிப் பகிர்ந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னரும் ஒரு இணைய ஊடக நிகழ்ச்சியில் தமிழ்க் கட்சிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தோரை பாராளுமன்றம் அனுப்ப முயற்சிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.


அருண் சித்தார்த்தின் தந்தையார் அருளானந்தம் அண்ணர் எனது அன்பிற்கும் நட்பிற்குமுரிய மூத்த ஊடகர்.


அருண் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பதை நானறிவேன். அதுவும் நான் பணியாற்றிய தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சிக்கு “சப்டைட்டில்’ செய்யவேண்டிய தேவை வந்தபோது “சப்டைட்டில்ஸ்’ என்ற புதுவகை மொழிபெயர்ப்பு முறையை விரைவாகப் பிடித்துச் செய்த திறமைசாலி அவர் என்பதை உணரமுடிந்தது. அந்தக் கதைகள் இங்கு அவசியம் இல்லை. விடயத்துக்கு வருவோம்.


அவர் காணொளிகளில் குறிப்பிட்டது போல அந்தக் காலத்தில் தேசியப் பட்டியல் முறை இருக்கவில்லை. நியமன எம்பி முறை பழைய அரசியலமைப்பிலிருந்தது.


செல்லையா குமாரசூரியர், எம்.சி. சுப்பிரமணியம், பதியுதீன் மஹ்மூத் போன்றோர் நியமன எம்பிக்களாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐக்கிய முன்னணி அரசில் நியமனம் பெற்றவர்கள்.
அருண் பிரசாத் சொன்ன”தாழ்த்தப்பட்ட மக்கள்’ என்ற பதத்தை நான் இங்கு பாவிக்க விரும்பவில்லை. “சிறுபான்மை சமூகங்கள்” என்று அதனை இப்பதிவில் சில தகவல்களைச் சொல்வதற்காகக் குறிப்பிடுகிறேன்.
1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களில் ஒருவராக உடுப்பிட்டி வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய அமரர் த. இராசலிங்கம் அவர்களை உடுப்பிட்டித் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது.
“சாதிப் பெருமையும் தடிப்பும்” மிக்க தொகுதியாகக் கருதப்பட்ட உடுப்பிட்டியில் இராசலிங்கத்தை நிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் விடுதலையை அடைவதற்காக எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையாகத் தங்கள் ஆணையைத் தருகிறார்கள் என்று காட்ட இராசலிங்கத்தை வெற்றியடையச் செய்யுமாறு கூட்டணித் தலைவர்கள் இளைஞர் பேரவையினர் மேடைகளில் ஏறிப் பிரசாரம் செய்தனர்.
அருணின் பாணியில் சொல்வதானால் சாதித் திமிர் பிடித்த, கரவெட்டி ,உடுப்பிட்டி, நவிண்டில், கரணவாய் வெள்ளாளர் மத்தியில இராசலிங்கம் நிறுத்தப்பட்டார்.
மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தமது வீட்டுக்கருகில் இராசலிங்கம் அவர்கள் கரவெட்டிக்கு வாக்குக் கேட்டு வந்தபோது ஒரு வீட்டில், அங்கிருந்த மூதாட்டி பேசிய கொடும் வார்த்தைகளைச் சொல்லி விசனப்பட்டார். அந்த மனுசியின் கடும் சொற்களை விட இராசலிங்கத்தைக் கல்லால் எறியலாமடா..அது காயம் குறைந்ததடா -என்றார்.
அந்த ‘மனுசி’ ஒன்றுமே படிக்காதது; ஆனால் இராசலிங்கம் ஒரு எம்.ஏ முதுமாணி. கொழும்பு


சென்.ஜோசப்பில் கற்று அங்கு ஆசிரியராகி உதவி அதிபராகி கல்வி அதிகாரியான ஒருவர். நிலைமையைப் பார் என்றார் கவலையுடன். கூட்டணி இப்படியான எதிர்ப்புகளின் மத்தியில் தான் உடுப்பிட்டித் தொகுதியில் அவரை நிறுத்தியிருந்தது.


அந்தப் பெண்ணின் அறிவும் வாழ்ந்த சூழலும் அந்தளவுந்தான் என்று தவிர்த்தாலும்…1977 தேர்தலின்போது முற்போக்கானவர்கள் என்று சமூகத்தில் மதிக்கப்பட்ட சமசமாஜியான ஆர்.ஆர் தர்மரத்தினமும் கே.சி மகாதேவனும் இராசலிங்கத்துக்கு எதிராகப் போட்டியிட்டனர்.
இதையும் விட.


சிறுபான்மை மகாசபை போன்ற இயக்கங்களுடனும் சிறுபான்மை சமூகங்களுக்கான போராடாடங்களுடனும் தொடர்புடைய அமரர் எஸ்.எஸ். சுந்தரமும் பிள்ளையினாரும் இராசலிங்கத்துக்கு எதிராகக் கேட்டார்கள்.


அமரர் சுந்தரம் பிரசாரத்தின்போது இராசலிங்கம் அல்ல, தான்தான் அவரைவிட இன்னும் தாழ்ந்தவன் என்றும் பேசினார்.


தொழிற்சங்கவாதியான கே.சி மகாதேவனும் தமிழீழம் ஒரு கனவு என்று கூட்டணிக்கு எதிராகக் கேட்டார். இராசலிங்கத்துக்கு தாம் எதிரல்ல என்றார்.


ஏனைய தொகுதிகளை விட உடுப்பிட்டியில் அதிக வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இராசலிங்கத்தை எதிர்த்துத் எட்டுப் பேர் போட்டியிட்டனர்.


சாதியத் திமிர் எப்படியும் இராசலிங்கத்துக்கு எதிராகத் தமக்கே வாக்குகளை வழங்கும் என்று இவர்கள் எதிர்பார்த்தனர்.

இதே வேளை , போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் சார்பிலான வேட்பாளர் மோதிலால் நேரு தமது பரப்புரையில் இப்படிச் சொன்ன ஞாபகம்:-
கோப்பாய் தொகுதியில் சிறுபான்மை சமூக மக்கள் ( வாக்காளர்கள்) அதிகம் உள்ளனர். அங்கு திரு இராசலிங்கத்தை இறக்கியிருக்கலாம். தமிழரசு தனது மூத்த உறுப்பினர் கதிரவேற்பிள்ளையை விடாமல் தமிழரசின் நலனுக்காக இங்கு ( உடுப்பிட்டியில்) போட்டமை தமிழினத்தில் பிளவுகளை ஏற்படுத்த என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மோதிலால் நேரு பேசினார்.


1977 தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் வந்தன.
உடுப்பிட்டித் தொகுதியில் இராசலிங்கம் 18768 வாக்குகள் பெற்றார் அது 63.44%
அவரை எதிர்த்து நின்ற
ஆர். ஆர். தர்மரத்தினம் 13.6%
மோதிலால் நேரு 9.4%


எஸ்.எஸ்.சுந்தரம் 5%
கே.சி. மகாதேவன் 4%
பிள்ளையினார்.1%
இதேவேளை சிறுபான்மை சமூக மக்கள் அதிகம் கொண்ட தொகுதியான கோப்பாயில் தமிழர். விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட
சி. கதிரவேற்பிள்ளை 77.2% வாக்குகளைப் பெற்றார்.
அன்று தமிழ் மக்கள் சாதிய வேறுபாடுகளையெல்லாம் கடந்து தங்களது சுயநிர்ணயம் பற்றிய சிந்தனையில் ஒற்றுமையாக நின்றார்கள் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் இன்றும் காட்டுகின்றன.
தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர் இராசலிங்கத்துக்குச் சொன்ன ஆலோசனை :-
அன்றைய பிரதமர் பிரேமதாச கரவெட்டி இராசகிராமத்தைத் திறக்க வந்தபோது இராசலிங்கம் அதிற் கலந்து கொண்டதால் இளைஞர்கள் குழம்பி சில சர்ச்சைகள் தோன்றின. அது நடந்த காலப்பகுதியில் தம்முடன் பழகிய சிலருக்கு அமரர் இராசலிங்கம் இந்தக் கதையைச் சொன்னார். ஹரிஸ்பத்துவ எம்.பி விஜயசிறி சொன்ன ஆலோசனைபற்றிய கதையே அது.
1978 இல் கூட்டணித் தலைமையுடன் மனஸ்தாபப்பட்டு அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான செ. இராசதுரை அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசாங்கத்தில் அமைச்சர்ப் பதவி பெற்ற காலத்தில் பாராளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராயிருந்து ஐ.தே.க வில் பின்னர் இணைந்த ஹரிஸ்பத்துவத் தொகுதி உறுப்பினரான (இரட்டை அங்கத்தவர் தொகுதி -மற்றவர் ஏ.சி.எஸ். ஹமீத்) ஆர்.பி விஜயசிறி இராசலிங்கத்துக்கு ஆலோசனை ஒன்று சொன்னாராம்.
சிங்கள சமூகத்தில் குறிப்பிட்ட சமூக வகுப்பைச் சேர்ந்த அவர் இராசலிங்கத்துக்குச் சொன்னது என்னவென்றால்,
“இராஸ், நீ சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஒருவன். உங்களுக்கு இடது சாரிகளோடோ அல்லது யு என்.பி அல்லது எஸ்.எல் எப் பியோடோ சேர்ந்து உங்கள் உங்கள் சமூகங்களுக்குப் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.
உங்களுக்குப் பலமான கட்சி தமிழர்களுக்குரிய கூட்டணிதான்.‌நீ அவர்களோடு இருந்து தான் உள்ளுக்குள் போராடி உனது மக்களுக்குச் செய்வதைச் செய்யலாம். இராசதுரை மாதிரி அரசாங்கத்தோடு சேரப் பார்க்காதே.
ஆட்சி மாறினால் அவ்வளவும் தான்.
கூட்டணி தான் உங்கள் பலம்”
என்றாராம் விஜயசிறீ.
இதனை இராசலிங்கம் தமக்கு நம்பிக்கையானவர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி அவரை பாராளுமன்றக் குழுவில் கல்வி தொடர்பான சுற்றுலாக்களுக்கு அனுப்பியதை அமரர் இராசலிங்கம் பெருமையாகக் குறிப்பிட்டதுண்டு.
மாவட்டங்கள் தோறும் மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டபோது இராசலிங்கம் கூட்டணித் தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்து கரவெட்டியில் இராசகிராமம் என்ற மாதிரிக் கிராமத்தை அமைத்திருந்தார்.
அதனைத் திறந்து வைக்க பிரதமர் ஆர்.பிரேமதாச வந்தபோது அதில் கலந்துகொள்ள கூட்டணித் தலைமைப்பீடம் அனுமதியளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“நான் கரணவாய் மகாவித்தியாலயம் திரு இருதயக் கல்லூரி, ஞானாசாரியர் கல்லூரி போன்றவற்றுக்கு கட்டிய கட்டிடங்கள் எங்களது மக்களுக்குத் தெரிவதில்லை.ஆனால் தேவரையாளி இந்துக் கல்லூரிக்குக் கட்டிடம் கட்டுவது மட்டும் தான் தெரிகிறது. இப்படியான பார்வையில் இந்த சமூகம் ஒவ்வொரு விடயங்களிலும் இருக்குமானால் எமக்கு விடிவு என்பது தூரத்தில் தெரிகிற நட்சத்திரமும் அல்ல” என்று இராசலிங்கம் அன்று சொன்னது இன்று நிதர்சனமாகிறது
யாழ்ப்பாணத்தில் 6 ஆசனங்களுக்காக 396 வேட்பாளர் போட்டிபோடும் நிலைக்கு
தமிழினம் வந்துள்ளது. ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை புரிந்துணர்வு பகிர்வு மனப்பான்மை இல்லாமை போட்டி, பொறாமை, சூழ்ச்சி என்பனதான் இத்தனை இலக்கம் வந்தமைக்குக் காரணமாகும்.
இந்த நிலையில் நாம் தமிழர்களைப் பொறுத்தவரையில் மேலும் சமூக ரீதியாக மத ரீதியாகப் போட்டியிடத்தான் வேண்டுமா?

தனித்துவத்தை விட கூட்டுத்தன்மை முக்கியமானது

நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. நிகழ்காலம் விரைவில் கடந்த காலமாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் சிறந்த முதலீடு நிகழ்காலத்தில் உள்ளது. எனவே, எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய அனுபவம் மிகவும் முக்கியமானது. 2025ஆம் ஆண்டை மறுமலர்ச்சி ஆண்டாகப் பெயரிடலாம். மேலும் இது மக்களின் எதிர்பார்ப்பு ஆண்டு; சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள்  நம்பிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கும்