தனித்துவத்தை விட கூட்டுத்தன்மை முக்கியமானது

நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. நிகழ்காலம் விரைவில் கடந்த காலமாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் சிறந்த முதலீடு நிகழ்காலத்தில் உள்ளது. எனவே, எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய அனுபவம் மிகவும் முக்கியமானது. 2025ஆம் ஆண்டை மறுமலர்ச்சி ஆண்டாகப் பெயரிடலாம். மேலும் இது மக்களின் எதிர்பார்ப்பு ஆண்டு; சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள்  நம்பிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கும்

தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்நிலைப்பாடு

(லக்ஸ்மன் )

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் எனும் அலையில் அடிபட்டுப் போனதைப் பற்றி இன்னமும் சிந்திக்காத தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்புசாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்திவருகின்றனர். இது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலைமையையே மேலும் வலுப்படுத்தும் என்பதனை மறந்தும் விடுகிறார்கள். 

தமிழனுக்குத் தமிழனே எதிரி

(மொஹமட் பாதுஷா)

ரணில் விக்ரமசிங்கவின் கடந்த  ஆட்சியில் அரசியலமைப்பு பேரவைக்குச் சிறிய கட்சிகள்  சார்பில் தமிழ் பிரதிநிதியாக ஒருவரை  நியமிக்கப் பேரினவாதக் கட்சிகள் காட்டிய எதிர்ப்பும்  அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகத்  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட  எம்.பியுமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை பிரேரித்து விட்டு, அவரை நியமிக்குமாறு  தமிழ் தேசியக் கட்சிகள் நடத்திய  போராட்டமும்  ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கலையும் வரை சித்தார்த்தன் நியமிக்கப்படாமையும் வரலாறு.

தோழர் றொபேட் (த.சுபத்திரன்) 67 ஆவது பிறந்த தினம்


(தோழர் மோகன்)

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சுபிட்சமான எதிர்காலத்திற்காகவும் ஆயுதந் தாங்கிய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காத்திரமாக செயலாற்றிய தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களது 67 வது பிறந்த தினம் 24.12.2024 இன்றாகும்.

தோழர் றொபேட்

(தோழர் சுகு)

“நான் பிறந்தது பாலன் பிறந்த நேரத்திலாக்கும் “என்று நகைச்சுவை உணர்வுடன் பெருமிதம் கொள்வார்
இன்று அவரது 67வது அகவை நாள்
இலங்கையின் 76ஆண்டு சரித்திரத்தின் திருப்பு முனையில் தோழர் சுபத்திரன் ரஞ்சன் றொபேர்ட்டை நினைவு கூரல்.

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண மர்மத்தில் புதிய ‘ட்விஸ்ட்’…


(Paranji Sankar)

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்மங்களை அவிழ்ப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் உண்மையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாமல் வெறும் கூற்றாகவே கூறி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் சிறு தீவுகள் மூலம் உருவாக்கக்கூடிய வணிக வாய்ப்புகள்

யாழ்ப்பாணத்தின் சுற்றுச்சூழல், பசுமை இயற்கை வளங்கள், மற்றும் பண்பாட்டு சிறப்புகள் சிறு தீவுகளின் மூலம் பல வணிக வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவை சுலபமாக மேம்படுத்தி, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் திறன் கொண்டவை. பின்வரும் வாய்ப்புகளை விரிவாகப் பார்க்கலாம்

முடிச்சு மாறிகள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம்

பண்டிகை காலம் என்பதால், சகலரும் அவதானமாக இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கிறதோ, இல்லையோ, எனினும், பண்டிகையை கொண்டாடுவதில் சகலரும் ஆர்வமாக இருப்பர். சிலர், கடன்களை பெற்றாவது, தங்களுடைய பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பர். வீடுகளையும் சுத்தம் செய்து கொள்வர். இவ்வாறு கஷ்டப்படுவோரும் இருக்கின்றனர். மிக இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

விஏகே வாழ்வும் மறைவும்


(தோழர் சுகு)

04/12/24-09/11/92
தோழர் வி ஏ கே 100வது ஜனன தினம் டிசம்பர் 4
“2024 டிசம்பர் 4 அவரது நூறாவது ஜனன தினம்
” 2024 இல் இலங்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் தோழர் வி ஏ கந்தசாமி அவர்களின் கனவுகள் மெய்ப்படுவதற்கான தருணங்கள். வாழ கிடைத்திருந்தால் அவர் பரவசம் அடைந்திருப்பார் அப்படியான மனம் அவரது”
“இங்கிலாந்து ஹைட் பார்க் இடுகாட்டில் கார்ல்மார்க்ஸின் நிரந்தர உறக்கம் போல