உண்மையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சனை இரண்டு தான்…..

ஒன்று ராணுவத்திடம் இருக்கும் மக்களுடைய காணிகள் …….

மற்றது சிறையில் இருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்…….

ஆகவே இவர்களுக்கு ஒரு கட்சி தேவை இல்லை…….

அவர்களுக்கே அது புரிகிறது போலும்…….

உளவு அமைப்புகளுடன் சேராமல் எந்த ஒரு அமைப்பும் இருக்க முடியாது……..

விக்கி ஐயாவும் அமரிக்கா போய் வந்த பின்தான் இவ்வளவு துள்ளலும்…….

(“உண்மையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சனை இரண்டு தான்…..” தொடர்ந்து வாசிக்க…)

பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பார்கள். ஆனால் ஈலம் டமில்சுக்கு அப்படியல்ல

சென்னையில் வெள்ளம் வந்த போது மக்கள் சாதி மத பேதத்தை மறந்து யார் உணவு கொடுத்தாலும் வாங்கி உண்டார்கள். ஆச்சாரமான பிராமணர்கள் கூட முஸ்லிம்கள் கொடுத்த உணவை வாங்கி உண்டார்கள். ஆனால் தமிழீழம் கேட்ட தமிழர்கள் இந்தியப் படைகளுடன் புலிகள் யுத்தம் செய்த காலத்தில் அகதிகளாக இருந்த இடங்களில் தொண்டர்கள் சமைத்துக் கொடுத்த உணவை மேட்டுக் குடிகள் வாங்கி உண்ண மறுத்து தங்களுக்கு உணவுப் பொருட்களைத் தரும்படியும் தாங்கள் சமைத்து உண்ணுவோம் என்று கேட்டுக் கொண்டார்கள்.

(“பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பார்கள். ஆனால் ஈலம் டமில்சுக்கு அப்படியல்ல” தொடர்ந்து வாசிக்க…)

சோற்றில் கைவைக்கும் நாம் சேற்றில் கால் வைப்போரை காப்போம்!

பட்டு வேட்டி கனவில் இருந்தவன் கட்டி இருந்ததும் களவாடப்பட்டதை போல, நல்லாட்சி அரசில் நாம் சோற்றில் கைவைக்க தாம் சேற்றில் அல்லலுறும் விவசாயிகள் உரமானிய குறைப்பு உட்பட தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பட்டவர்த்தனமாக காட்ட, சிறு துணி அணிந்து கொழும்பில் நடத்திய போராட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட நாட்டில் வேண்டப்படாத நிகழ்ச்சி.

(“சோற்றில் கைவைக்கும் நாம் சேற்றில் கால் வைப்போரை காப்போம்!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய தமிழ்மக்கள் பேரவை

வடக்கு முதலமைச்சரின் புதிய தமிழ்மக்கள் பேரவை தமது மாகாணத்தில் வாழும் மக்களை பற்றியும் அவர்களின் அன்றாட பிரச்சினைகளை பற்றியும் கதைப்பதாக தெரியவில்லை. ஐ.நா வை பற்றியும் ரணில் அரசாங்கத்தையும் அதற்கு துனைபோகும் த.தே.கூ வின் தலைமையையும் குறிவைக்கின்றதாகவே உள்ளது.

(“புதிய தமிழ்மக்கள் பேரவை” தொடர்ந்து வாசிக்க…)

கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை ‘கலாம் எபெக்ட்’ என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

(“கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.” தொடர்ந்து வாசிக்க…)

நவ பாசிஸ எழுச்சி

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நெருக்கடிக்குட்படும் ஒரு சமூகம், பொதுவாக, நெருக்கடியின் தீர்வைத் தனக்கு வெளியிலேயே தேடத் தலைப்படும். இது பல சமூகங்கட்கும் பொருந்தும். சமூகங்கள் தமது தீர்வைத் தமக்குட் தேடுவது பயனுள்ளது. தவறின், நெருக்கடிக்கான காரணங்களை ஆட்சியாளர்கள் இலகுவாகத் திரித்துக் கவனத்தைத் திசைதிருப்ப வாய்ப்பாகும். இது ஈற்றிற், சமூகம் தனக்குத் தானே கொள்ளி வைப்பது போலாகும். (“நவ பாசிஸ எழுச்சி” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் புதுவையை மறந்தோர் அரசியல் சோரம்!

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிராத கலை இலக்கியவாதிகளை யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். ஏறத்தாள எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு தேவைக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள்தான். கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் ஒரு பத்திரிகை நேர்காணலில் காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது, எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும் என்று சொல்லி இருந்தார்.

(“வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் புதுவையை மறந்தோர் அரசியல் சோரம்!” தொடர்ந்து வாசிக்க…)

மின்னல் ரங்காவின் யன்னல் பார்வை !

ஒரு விடயத்தை அறிவு பூர்வமாகவும் அலசலாம் விசமத்தனமாவும் அலசலாம். அந்த வகையில் கடந்த காலங்களில் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் மலையகத்திலும் வன்னியிலும் போட்டியிட்ட பிரஜைகள் முன்னணி அடைந்த படுதோல்வி அதன் தலைவர் ரங்காவிற்கு ஏற்படுத்திய பாதிப்பு அவரை மது உண்ட மந்தி போல சேட்டை செய்ய தூண்டுவதாய் அவரது மின்னல் நிகழ்ச்சி அமைகிறது.

(“மின்னல் ரங்காவின் யன்னல் பார்வை !” தொடர்ந்து வாசிக்க…)

சிரிய அகதிகளை உள்வாங்குதல்……

(சாகரன்)

சிரிய அகதிகளை உள்வாங்குதல் என்பதில் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளும், அமெரிக்க முதலாளித்துவ நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதுபோல் தோன்றுகின்றது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் உதவுவது போல் தோன்றினாலும் விமான நிலையங்களில் வந்திறங்கும் சிரிய மக்களையும் அவர்கள் கொண்டு வரும் பொதிகளையும் பார்க்கும் போது இவர்கள்; சிரியாவை விட்டு இடம்பெயர்ந்து இன்னும் ஒரு நாட்டில் வசதியாக வாழ்ந்து விட்டு இன்னும் ஒரு வசதியான நாட்டிற்கு….. அது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயருவது போல் தோற்றம் அளிக்கின்றது. உண்மையான யுத்தத்தினால்; பாதிப்பிற்குள்ளான அகதிகள் ஆண்டாண்டு காலமாக அகதி முகாம்களில் ‘வாட’ மேற்கூறியவர்களை பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு வகை ‘தத்தெடுத்தல்’ விளையாட்டில் இந்த நாடுகளுக்கு விமானங்களில் கொண்டுவந்து இறக்கி தமது மனிதாபிமானங்களை? நிரூபிக்க முயலுவது தெரிகின்றது. இதற்கான பிரச்சார முன்னெடுப்புக்களை இவ் அகதிகள் இந்த நாடுகளுக்கு வந்திறங்க முன்பும், பின்பும் செய்துவரும் வேடிக்கைகள் எம்மால் ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இதில் இன்னொருவிடயமும் அறிய முடிகின்றது, அது இவ் வகையாக பொறுப்பெடுக்கப்படும் அகதிகளும் ஒருவகையில் வடிகட்டப்பட்ட பின்பே தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த வடிகட்டலில் குலமும், மதமும் முக்கிய பங்கை வகிக்கின்றன. யுத்ததில் பாதிக்கப்பட்ட யாவரும் அகதிகள் என்றாலும் யாரை முதன்மைப்படுத்தல் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அகதிகளை உருவாக்கும் யுத்தத்தை நிறுத்துவதே இதற்கான சரியான நிரந்தரத் தீர்வும் ஆகும். அகதிகளை ஏற்பவர்களே யுத்தத்தையும் நடாத்துகின்றனர் என்பது இவர்களின் போலியான மனிதாபிமான முகமூடியை கிளித்தெறியப் போதுமானதாகும்.