பலம் அறிவதற்கான தேர்தல் களம்

(மப்றூக்)

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளூர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளூராட்சி மன்றங்களில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.க கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் யுத்தத்துக்காக, கட்சிகள் அனைத்தும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆளுந்தரப்பாக ஐ.தே.க உள்ளதால், பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதற்குரிய எத்தனங்களை அந்தக் கட்சி எடுக்கும்.

(“பலம் அறிவதற்கான தேர்தல் களம்” தொடர்ந்து வாசிக்க…)

எழுமின் ! வருமின் ! மரம் நடுமின் !

(மாதவன் சஞ்சயன்)

கார்த்திகை மாதம் எம் மண் மழை நீரால் மட்டுமல்ல தமிழ் மக்களின் கண்ணீராலும் நனையும் மாதம். எனவே கார்த்திகை மாதம் 1ம் திகதி தொடங்கி 30ம் திகதி வரையான மழைக் காலத்தில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் ஐந்துலட்சம் மரங்கள் நடுவதற்கு தான் திட்டமிட்டிருப்பதாக, வட மாகாண சுற்றாடல் அமைச்சர் அறிவித்துள்ளார். வடக்கில் மர நடுகையைப் பெருமளவில் மேற்கொள்ள பொருத்தமான மாதம் மட்டுமல்ல, தமிழர் தம் வாழ்வில் புனித மாதமாக கருதி கார்த்திகை தீபம் ஏற்றுவதோடு எம் மாவீரரையும் நினைவு கூரும் புனித மாதம் கார்த்திகை மாதம் எனவும் கூறினார்.

(“எழுமின் ! வருமின் ! மரம் நடுமின் !” தொடர்ந்து வாசிக்க…)

யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது “பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது.” கோழி விட்டேற்றியாகச் சொன்னது” உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.” உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு “நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்.” என்றது. மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை “எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?” என்று நக்கலும் அடித்தது. அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி ” பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு “சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது” என்று யோசனை சொன்னாள். கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.

நீதி ::– அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் “என்ன” என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

(Kanniappan Elangovan)

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் அங்குள்ள தமிழ் சகோதரர்கள் மீது வெறுப்புக்கொள்ளவில்லை

கார்த்திகேசு ஆசிரியர் துரையப்பா போன்றோர் முஸ்லிம்களிடையே செல்வாக்கு மிகுந்தவர்களாக திகழ்ந்தார்கள். ஜி ஜி பொன்னம்பலம் கூட தமிழ் தேசியத்துக்கெதிராக தமிழரசுக்கட்சிக் கெதிராக தேர்தல்களை சந்தித்தபோதும் முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கிய வரலாறும் உண்டு. 1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது முஸ்லிம்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்பு வட மாகாண முஸ்லிம்களின் நலனோம்பு அமைப்பின் சார்பாக ஏ.சி .எம் .இக்பால் “யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் அங்குள்ள தமிழ் சகோதரர்கள் மீது வெறுப்புக்கொள்ளவில்லை ஏனெனில் அவர்கள் ஒரு பொழுதில் சுல்தானை நகர பிதாவாக ஆக்கியவர்கள் என்பதனாலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். 2008 பிப்ரவரியில் நாங்கள் யாழ்ப்பாணம் செல்ல நேர்ந்தபோது அங்கு யாழ் முன்னாள் அரச அதிபர் கணேஷ் தலைமையில் சிவில் சமூக பிரதிநிகள் சிலரையும் சந்தித்து கருத்துப்பகிர்வு செய்யும் ஒரு நிகழ்வு யாழ் அரச அதிபர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. (Bazeer)

குழவியையும் ஈவிரக்கமின்றி கொல்வதற்கு ஆணையிட்ட தமிழ் தேசியத் தலைவரிடம்….

 

பாணியில் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என பிரகடனப்படுத்திக்கொண்டு தமது இனத்தினை ஏதோ புலிகள்தான் அங்கீகரிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் ஹக்கீம் புலிகளுடன் ஒப்பந்தம் செய்த பொழுது முஸ்லிம் தரப்பில் சென்றிருந்த முன்னாள் செனட்டரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான ஜனாப் மசூர் மௌலானா அவர்கள் நன்கு சமைத்த ஹலால் ஆட்டிறைச்சிக் கறியினை உண்டதன் பின்னர் பிரபாகரனிடம் தம்பி உங்களுடைய பிள்ளைகளினுடைய படிப்பு எப்படியென்று கேட்டுவைத்தார். அவரும் பதிலுக்கு தனது பிள்களகனின் சிறந்த பெறுபேறுகளை சொல்லிவைத்தார். ஆனால் 1990 ம் ஆண்டு 12 வயதிற்கும் குறைந்த பாலகர்கள் காத்தான்குடிப் பள்ளிவாசலிலே தொழுது கொண்டிருந்த வேளையிலும் ஏறாவுரில், அழிஞ்சிப்பத்தானையில், படுக்கையிலும், தாயின் முலையைச் சப்பிய மழலையையும், கற்பிணியின் வயிற்றில் ஜனித்திருந்த குழவியையும் ஈவிரக்கமின்றி கொல்வதற்கு ஆணையிட்ட தமிழ் தேசியத் தலைவரிடம் நிட்சயமாக கேட்கவேண்டிய கேள்விதான் அது!

(Bazeer Seyed)
புலிகள் இன சுத்திகரிப்பு செய்தார்கள் என்று இனவாதம் பேசவேண்டாம். புலிகள் மனித சுத்திகரிப்பு செய்தனர்.அவர்கள் செய்ததை தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று பார்த்தல் உங்களை மக்கள் நடுநிலை வாதிகள் என்று ஏற்கமாட்டார்கள்.(Neethirajan Chellamanickam)

இரண்டும் நியாயமான கருத்துக்கள்தான் (Saakaran)

அகிம்சாவாதியும் ஆயுததாரியும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே !

இரு வேறுபட்டவரின் மரண நிகழ்வுகள் அண்மையில் பிரசித்தம் பெற்றது. ஒருவர் முதியவர் காந்தியம் டேவிட் ஐயா, மற்றவர் நடுவயதினர் போராளி தமிழினி. தமிழினி என்றால் முன்னாள் போராளி எனத்தானே போடவேண்டும்? ஆனால் தமிழினி என்ற சிவகாமி இறுதி வரை மரணத்துடன் போராடினாள் என்பதால் அவள் இறுதிவரை போராளிதான். இருவருமே இரு வேறு பாதையில் பயணித்தவர். அடைய நினைத்த இலக்கு ஒன்றுதான். தம் இனம் தமது சொந்தக்காலில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற வேட்கையில் தான் இருவரும் தாம் தேர்ந்தெடுத்த பாதையில் தம் பயணத்தை தொடர்ந்தனர்.

(“அகிம்சாவாதியும் ஆயுததாரியும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே !” தொடர்ந்து வாசிக்க…)

இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல.

 

புலிகள் இயக்கம் ஒரு சூனியமான இயக்கம். பல இளஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்த பின்னால் வருத்தப்பட்டார்கள். சிலர் தாங்கள் இறந்துவிடுவதே நல்லதென நினைத்தார்கள் இறந்தார்கள்… பலர் இணைந்த பிறகுதான் உட்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் செய்ய வேண்டியதற்கு ஆளானார்கள். இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் யுத்தம் தொடுத்த பின்னர் பல நூற்றுக்கணக்கான புலிகள் இதுதான் தருணம் என இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், கனடாவிற்கும் சென்றுவிட்டார்கள். குறிப்பாக கிட்டுவுடன் சேர்ந்து இயங்கிய பல புலிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

(“இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல.” தொடர்ந்து வாசிக்க…)

சிரிய நெருக்கடி: ரஷ்ய அதிரடி

(தெ.ஞா.மீநிலங்கோ)

எல்லாக் கதைகளும் எதிர்பார்த்தபடி முடிவதில்லை. சில கதைகளில் எதிர்பாராத திருப்பங்கள் எதிர்பாராதபோது ஏற்படலாம். அவை சில சமயம் கதைகளின் முடிவுகளையே மாற்றிவிடும். அதனால் அத் திருப்பத்துக்காகவே அக் கதை காத்துக்கொண்டிருந்தது போன்ற மயக்கம் ஏற்படலாம். எனினும் பொதுவாகவே திருப்பங்கள் சுவாரசியமானவை. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிரிய நெருக்கடியும் அதையொட்டிப் பல்முனைகளில் வெடித்த சிரிய உள்நாட்டு யுத்தமும் இப்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளன. சிரியாவில் பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்ற அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நேரடி ஆதரவுடன் களமிறங்கிய ‘சிரிய விடுதலை இராணுவம்’ என்ற கிளர்ச்சிப் படைகளுடன் அல் நுஸ்ரா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகியன கைகோர்த்து சிரிய இராணுவத்துடன் போரிடுகின்றன.

(“சிரிய நெருக்கடி: ரஷ்ய அதிரடி” தொடர்ந்து வாசிக்க…)

காத்தான்குடிக்குள்ள காணி வாங்கப்போன கந்தப்போடியார் !

நம்மட கந்தப்போடியார் கடைசி காலத்தில காத்தான்குடிக்குள்ள இருப்பம் இஞ்ச இருந்தா டாக்டரிட்ட போறத்திற்கு மருந்து எடுக்கிறதுக்கெல்லாம் வசதியாக இருக்கும் அது மட்டுமல்ல அவருக்கு காத்தான்குடியிலதான் நிறைய கூட்டாளிமாரும் இருக்காங்க. சகோதர இனத்துடன் வாழ்ந்துதான் பார்ப்போம் என்று நினைச்சி மனிசன் ஆறு மாதமாக ஒரு துண்டு காணி வாங்கலாம் என அலைஞ்சாரு பாருங்கோ. ஒருத்தரும்ஒரு துண்டுக் காணியும் கொடுக்கவில்லை.வாடகைக்கு வீடும் கேட்டுப் பார்த்தார் கிடைக்கவே இல்லை.

(“காத்தான்குடிக்குள்ள காணி வாங்கப்போன கந்தப்போடியார் !” தொடர்ந்து வாசிக்க…)

நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்…..கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்….!!!!

இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பெண்கள் சிறுவர் பிரிவின் மாதாந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். வழமைபோல கூட்டத்தில் சுவாரசியமான விடயங்கள் (பெண்கள் சிறுவர் சம்பந்தப்படாத) பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது….அடுத்த கூட்டத்தையும் இதே போல பயனுள்ளதாக(?) இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உறுதி பூண்டு கூட்டத்தை நிறைவு செய்தனர்.

(“நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்…..கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்….!!!!” தொடர்ந்து வாசிக்க…)