வெளிநாடு வாழ் இலங்கையர் தமிழர் ( NRTSL )அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் இலங்கைக்கான அரசியல் அமைப்பின் உள்ளமைப்பு, அதனை நிறைவேற்றுவதற்கான புறச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 9-10-15ம் திகதி லண்டனில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் தேசத்தின் நலனில் குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து ஆர்வமும், அபிப்பிராயங்களையும் வெளியிடும் பலர் கலந்துகொண்டனர். மிகவும் திறந்த அடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தற்போது இலங்கையில் நிலவும் அரசியற் பின்னணியானது அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உகந்த சூழல் என்பதோடு அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கான தருணம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.