அநுர அரசாங்கம் கடன் மேல் கடன் பெறுகிறதா?

(ச.சேகர்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையில், அவர் பொறுப்பேற்று முதல் மூன்று வாரங்களினுள் 465.1 பில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்கள் வழங்கல்களினூடாக திரட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரால், மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒருங்கிணைத்து ஓர் அறிக்கையாக உருவாக்குவதே சிறந்தது

பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்குகளை ​அள்ளிக்கொள்வதற்கான களச்சமர் சூடுபிடித்திருக்கும் நிலையில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான கதையாடல்களும் பொதுவெளியில் மீண்டும், பேசப்படும் ​​பொருளாகிவிட்டது. இதனால் மீண்டும் உற்சாகமடைந்த சந்தர்ப்பவாதிகள் இந்த தலைப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

அனுசரணை அரசியலின் நிறுவனமயமாக்கல்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் அனுசரணை அரசியல் தவிர்க்கவியலாததாகவும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு விளைவிப்பதாகவும் அமைந்தமைக்கான காரணங்களிலொன்று அரச நிறுவனங்கள் அனுசரணை அரசியலுக்கு ஆதரவாக செயற்பட்டமையாகும்.

இந்திய மக்களின் இதயத்தில் இறுக இடம் பிடித்த டாடா(TATA)

(தோழர் ஜேம்ஸ்)

(இந்தப் பதிவில் இணைத்திருக்கும் புகைப்படம் டாடா(TATA) நிறுவனத்தின் செயற்பாடுகளை துல்லியமாக எடுத்து இயம்புகின்றது)

1962 ம் ஆண்டு நடைபெற்ற சீன இந்திய யுத்தம் இவரின் வாழ்வை தனி மனிதனாக திருமணம் செய்யாது வாழ்வதற்கும் வழி கோலியது.
அதுவே அவரின் வாழ்வின் இறுதி வரை தொடரவும் வைத்து.

மௌனமாகவே நடக்கும் அடக்குமுறை

(லக்ஸ்மன்)

‘காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?’ என்ற கேள்வியுடன், ‘எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேச விசாரணையே வேண்டும்’, ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வேண்டாம்’, ‘மரணச் சான்றிதழ் வேண்டாம்’ போன்ற வேண்டுகோள்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா

(ச.சேகர்)

வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர்.

மார்பகங்கள் பற்றி பேசுவதற்கு தயங்கும் பெண்கள்

சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆரம்பமாகியுள்ளது. உலகில், ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் இந்த மாதத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன.  

’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம்

“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.

அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் –

(ஆங்கிலத்தில்: டி.பி.எஸ். ஜெயராஜ் | தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்)

அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ‘ (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரத்தின் ‘ பிரதிகள் பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது.இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஒரு அர்த்தத்தில் இன்று இலங்கை வானில் எழுந்திருக்கும் சிவப்பு நட்சத்திரம் அல்லது இடதுசாரி நட்சத்திரமே . அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபல்யமாக அறியப்பட்ட திசாநாயக்க 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையின் ஒனபதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்றார்.55 வயதான திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர். ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்து பிறகு அரசியல் கட்சியாக மாறிய ஜே.வி.பி. ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது.தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி.யையும் வேறு 21 அமைப்புக்களையும் உள்ளடக்கிய இடதுசாரிப் போக்குடைய ஒரு பரந்த கூட்டணியாகும். இந்த அமைப்புக்களில் சிறிய கட்சிகள், தொழிற் சங்கங்கள், உரிமைகள் குழுக்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகள் அடங்குகின்றன. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியாகும். திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் திசையறிகருவி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் ( மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) திசாநாயக்கவை மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் — லெனினிஸட், சோசலிஸ்ட், நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ‘ இந்திய விரோதி ‘ என்றும் ‘ தமிழர் விரோதி ‘ என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி.ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது எனக்கு சந்தேகமே.சில காலத்துக்கு முன்னர் ட்ரம்ப் என்ற ஒரு பேர்வழி ” வெள்ளை மாளிகையை ” அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப் போர் ஒன்றையே நடத்தும் அளவுக்கு அவர் சென்றார்.லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு ” மரக் கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான ” ஒரு கதை என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் குறிப்பிடத்தக்க உயர்வையும் கூட ” மண்வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு ” வந்த ஒரு காவியம் என்று வர்ணிக்க முடியும். இந்த பின்னணியில்தான் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை இந்த பத்தி இரு பாகங்களாக ஆராய்கிறது.தம்புத்தேகம வாழ்க்கைதிசாநாயக்க முதியான்சலாகே அநுரா குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 ஆம் திகதி பிறந்தார்.அவரின் பிறந்த இடம் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் கலேவெல ஆகும்.அவரின் பெற்றோர்கள் கண்டிய கொவி பௌத்த சாகியத்தைச் சேர்ந்தவர்கள். திசாநாயக்கவும் அவரது மூத்த சகோதரியும் சிறுவர்களாக இருந்தபோது குடும்பம் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டதுக்கு குடிபெயர்ந்தது. சில வருடங்கள் கெக்கிராவையில் வாழ்ந்த பிறகு குடும்பம் அதே மாகாணத்தின் தம்புத்தேகமவுக்கு நகர்ந்தது.தம்புத்தேகம அநுராதபுரம் நகரில் இருந்து 25 கிலோமீட்டர்கள் தொலைவிலும் தலைநகர் கொழும்பில் இருந்து 190 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் ஒரு விவசாயப் பிரதேசமாகும். திசாநாயக்க தனது ஆரம்பக்கல்வியை காமினி மகா வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் நிறைவுசெய்தார். அவரே தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக பிரவேசம் செய்த முதல் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.திசாநாயக்கவின் தந்தையார் ஒரு விவசாயத் தொழிலாளி. பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு நில அளவையாளர் திணைக்களத்தில் ஒரு அலுவலக உதவியாளராக நிரந்தரமான தொழில் வாய்ப்பு கிடைத்தது. சில சந்தர்ப்பங்களில் நில அளவையாளர்கள் களவேலைக்கு செல்லும்போது தந்தையார் உபகரணங்களை தூக்கிச்செல்லும் வேலையையும் செய்தார். குடும்பப் பெண்மணியான தாயாருக்கு நெல் விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களில் ஒழுங்காக வேலை கிடைக்கும்.தம்புத்தேகமவுக்கு வந்த பிறகு ஆரம்ப வருடங்களில் குடும்பம் பெரும் பணக் கஷ்டத்துக்குள்ளானது. அவர்களது வீட்டுக்கு மின்சார வசதி கிடையாது. இளம் திசாநாயக்க இரவு வேளைகளில் மண்ணெண்ணெய் குப்பி விளக்கின் வெளிச்சத்தில்தான் படிக்கவேண்டியிருந்தது. குடும்ப வருமானத்துக்கு உதவுவதற்காக தாயார் இனிப்புப் பலகாரங்கள் தயாரிப்பார். மகன் அவற்றை எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள தம்புத்தேகம புகையிரத நிலையத்தில் யாழ்தேவி, உத்தரதேவி மற்றும் ரஜரட்ட போன்ற நீண்டதூர ரயில்களின் பயணிகளுக்கு விற்பனை செய்வார். பாடசாலை விடுமுறை நாட்களில் திசாநாயக்க குழிவெட்டுபவராக பகுதிநேர வேலை செய்தார்.குடும்பத்துக்கு பொருளாதாரக் கஷ்டம் இருந்த போதிலும், திசாநாயக்க திறமை மிகுந்த ஒரு மாணவனாக பிரகாசித்தார். பாடங்களை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆற்றலையும் நுட்பநுணுக்கமான விடயங்களை எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமையும் கொண்டவராக அவர் இருந்தார். நல்ல நினைவாற்றலும் அவருக்கு இருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து தெரிவான முதல் மாணவன் என்ற வகையில் அந்த பாடசாலைக்கு அவர் பெருமை சேர்த்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாக அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை கௌரவித்தனர். அந்த நிகழ்வு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைக்கவிருந்த வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.ஆர்வமிக்க வாசகர்திசாநாயக்க தனது மாணவ காலத்திலும் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலும் ஒரு ஆர்வமிக்காவாசகர். இப்போதும் தான். சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய அவரிடம் விரும்பிய நூல்கள் குறித்து கேட்கப்பட்டது. லியோ டால்ஸ்ராயின் ‘ போரும் சமாதானமும் ‘ , மார்க்சிம் கோர்க்கியின் ‘ தாய் ‘ , மகிந்த பிரசாத் மாசிம்புல எழுதிய ‘செங்கோட்டன் ‘, மோகன் ராஜ் யடவலவின் ‘ ‘ஆதரனீய விக்டோரியா’ ஆகியவை அவர் குறிப்பிட்டவற்றில் சில நூல்கள். பல சிறுகதைகளையும் தான் விருப்பி வாசித்ததாக அவர் கூறினார்.தனது பாடசாலை நாட்களில் டாக்டர் ஆபிரஹாம் கோவூரின் படைப்புக்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். தென்னிந்திய மாநிலமான கேரளாவில் திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்த டாக்டர் கோவூர் இலங்கைக்கு குடிபெயர்ந்து கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் பல வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினார். பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த்அவர் மூடநம்பிக்கைகள், போலிச் சாமியார்கள் மற்றும் மதங்களின் பெயரால் இடம்பெறும் போலித்தனங்களுக்கும் எதிராக பெருமளவு நூல்களை எழுதினார்.மாபெரும் சிந்தனையாளர்களினதும் அரசியல் தலைவர்களினதும் சரிதைகளையும் சுயசரிதைகளையும் திசாநாயக்க நன்கு சுவைத்துப் படிப்பார். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காந்தி, டிட்டோ, காஸட்ரோ மற்றும் கிளின்ரோ ஆகியோரின் சரிதைகள் திசாநாயக்கவின் வாழ்வை வளப்படுத்திய மகத்தான மனிதர்களின் நூல்களில் முக்கியமானவை. அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில் ” எனது வாழ்க்கையை பல நூல்கள் மாற்றியமைத்தன.சோவியத் ரஷ்யாவின் இலக்கியங்களினால் குறிப்பாக நாவல்கள் , சிறுகதைகளினால் நான் மிகவும் ஆழமாக ஆகர்சிக்கப்பட்டேன். அந்த காலகட்டத்தின் இலக்கியங்கள் எமது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின” என்று குறிப்பிட்டிருந்தார்.வாசிப்பின் மீதான திசாநாயக்கவின் காதலையும் நூல்கள் தனது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய அவரின் மதிப்பையும் வைத்துக்கொண்டு அவரை வெறுமனே ஒரு புத்தகப்பூச்சி என்று நினைத்துவிடக் கூடாது. அவருக்குள் இருக்கின்ற ஒரு ‘ மெய்வல்லுனரை ” மக்கள் நேரிலும் தொலைக் காட்சிகளிலும் பார்த்திருப்பார்கள். சுறுசுறுசுறுப்பாக நடந்துவந்து மேடைகளில் அவர் ஏறுகின்ற பாங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த உடல்தகுதியின் தோற்றுவாய் அநுராதபுரத்தின் தண்ணீரில் தங்கியிருக்கிறது.நல்ல நீச்சல்வீரர்திசாநாயக்க வேகமும் உரமும் கொண்ட நல்ல நீச்சல் வீரர். தனது மாணவ காலத்தில் அவர் அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த திஸ்ஸவேவ, அபயவேவ, நுவரவேவ ஆகிய மூன்று வாவிகளில் நீந்துவார். முதலாவது நூற்றாண்டில் வலகம்பா மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட நுவரவேவவின் முழுமையான மூன்று கிலோ மீட்டர்கள் நீளத்தையும் திசாநாயக்க அடிக்கடி நீந்தி முடிப்பார்.அரசியல் செயற்பாட்டாளராக மாறிய பிறகு திசாநாயக்க இலங்கை பூராவும் பயணம் செய்தார்.எங்கெல்லாம் குளங்கள், வாவிகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றனவோ அங்கு சாத்தியமான வேளைகளில் அவர் நீச்சலில் இறங்குவதற்கு தவறுவதில்லை.” நான் நீச்சலை மிகவும் விரும்புபவன். சராசரியாக சுமார் இரு கிலோமீட்டர்கள் நீந்துவேன். அதனால் எனக்கு ஒரு நீச்சல் தடாகம் போதாது. உண்மையைச் சொல்கிறேன், எனக்கு நீச்சல் தடாகங்களைப் பிடிப்பதில்லை” என்று அவர் ஒரு தடவை நேர்காணலில் கூறினார்.நீச்சலும் வாசிப்பும் படிப்பும் நிறைந்த அமைதியான கிராமப்புற வாழ்க்கையில் இருந்து திசாநாயக்க தனது பதினகவைகளினா இறுதி வருடத்தில் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு போரையும் சமாதானத்தையும் கொண்டதாக இருந்தது. அதுவே திசாநாயக்கவின் வாழ்வை முற்றுமுழுதாக மாற்றியமைத்த ஆண்டாகவும் அமைந்தது. அதற்கு பிறகு நடந்தவற்றை விளங்கிக்கொள்வதற்கு வரலாற்றை ஒரு தடவை திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கிறது.இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைஇலங்கையின் இனநெருக்கடி பல வருடங்கள் நீடித்த கொடூரமான ஒரு ஆயுதமோதலாக மாறியது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஜே.ஆர். ஜெயவர்தனவும் கொழும்பில் 1987 ஜூலை 29 ஆம் திகதி இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். போர்நிறுத்தம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. அமைதியைப் பேணுவதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் நிலைகொண்டது.இலங்கை ஆயுதப்படைகளுக்கும் ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் மெச்சத்தக்க குறிக்கோளுடனேயே ராஜீவ் — ஜெயவர்தன உடன்படிக்கை கைச்சாத்திடப்ப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, இந்திய — இலங்கை உடன்படிக்கை மேலும் வன்முறைக்கும் இரத்தக்களரிக்கும் வழிவகுத்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்து மீண்டும் போரைத் தொடங்கியது. விரைவாகவே வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக விடுதலை புலிகள் முழு அளவிலான கெரில்லப்போரை தொடுத்தனர்.றோஹண விஜேவீரஅதேவேளை றோஹண விஜேவீர தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனயும் (ஜே.வி.பி. ) இந்திய — இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தபோது 1971 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. ஆயுதக்கிளர்ச்சி ஒன்றை தொடங்கியது.பல நாடுகளின் உதவியுடன் அந்த கிளர்ச்சியை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாக நசுக்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்களன சிறையில் அடைக்கப்பட்டனர். இது முதலாவது ஜே.வி.பி. கிளர்ச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஜே.வி.பி. மீதான தடையை நீக்கி விஜேவீர உட்பட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்தது. ஜே.வி.பி. மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்தது.விஜேவீர 1982 அக்டோபர் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு மூன்றாவதாக வந்தார்.( ஐக்கிய தேசிய கட்சி முதலாவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாவதாகவும் வந்தன ) இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியாக ” புதிய இடது ” ஜே.வி.பி.” மேலெழுந்தது போன்று தோன்றியது.ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பல அமைச்சர்களின் அந்தரங்க ஆதரவுடன் 1983 ஜூலையில் நாடுபூராவும் தமிழர்களுக்கு எதிராக இனவன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அந்த வன்செயல்களுக்கு ஜே.வி.பி.பொறுப்பென்று தவறாகக் குற்றஞ்சாட்டி ஜனாதிபதி ஜெயவர்தன அந்த கட்சியை தடைசெய்தது. ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக செயற்படத் தொடங்கியது.விஜேவீர உட்பட தலைவர்களும் தலைமறைவாகினர்.ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிஆனால், இந்திய — இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படை நிலை கொண்டபோது ஜே.வி.பி. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது. கடந்த காலத்தில் இந்திய மன்னர்கள் இலங்கை மீது நடத்திய பல்வேறு படையெடுப்புகள் பற்றிய பழைய அச்சங்களை மீண்டும் கிளறிய ஜே.வி.பி. சிங்கள பெரும்பான்மை மாகாணங்களில் இந்திய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை தொடங்கியது. அது ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி என்று அழைக்கப்பட்டது.1987 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. இரண்டாவது கிளர்ச்சியை தொடங்கியபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகப் பெரும்ப்னமையா வாழும் பிரதேசங்களில் அந்த இயக்கத்துக்கு உறுப்பினர்கள் இருக்கவில்லை. அதனால் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மகாணங்களிலிலேயே அதன் ஆயுதப்போராட்ட நடவடிக்கைகள இடம்பெற்றன.ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு இராணுவப் பிரிவுக்கு தேசபக்த மக்கள் இயக்கம் ( தேசப்பிரேமி ஜனதா வியாபாரய ) என்று பெயரிடப்பட்டது. மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கே தேசபக்திக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதிக்கு கீர்த்தி விஜேபாகு என்று இயக்கப்பெயர் கொடுக்கப்பட்டு வரலாற்று சம்பவங்கள் நினைவு மீட்டப்பட்டன.பத்தாவது நூற்றாண்டில் மன்னர்களான இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் எதிராக இளவரசர் கீர்த்தியே போராடினார். ருஹுணு இளவரசரான அவர் இறுதியில் பொலன்னறுவையில் இருந்து சோழ படையெடுப்பாளர்களை விரட்டி தன்னை விஜேபாகு மன்னன் என்று முடாசூடிக் கொண்டார். தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதி கீர்த்தி விஜேபாகுவின் உண்மையான பெயர் சமான் பியசிறி பெர்னாண்டோ. மொரட்டுவையில் லுணாவ பகுதியைச் சேர்ந்த அவர் களனி பல்கலைக்கழக பட்டதாரி.ஜே.வி.பி.யில் இணைவுஇத்தகைய சூழ்நிலைகளின் கீழ் தான் 19 வயதான அநுரா குமார திசாநாயக்க 1987 ஆம் ஆண்டில் தனது ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் இரத்நாயக்கவுடன் சேர்ந்து ஜே.வி.பி.யில் இணைந்துகொண்டார். திசாநாயக்க ‘ சுனில் ஐயா ‘ என்று அழைத்த அந்த சகோதரன் அவரின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினார். தாய்நாட்டுக்காக தாங்கள் ஜே.வி.பி.யில் இணையவேண்டும் என்று திசாநாயக்கவை நம்பவைத்தவரே அந்த சுனில்தான்.அரவிந்த என்ற அநுராஅநுரா குமார திசாநாயக்க ஜே.வி.பி.யில் இதைந்தபோது அவர் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு பிறகு திசாநாயக்கவுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்தது. அவர் கண்டிக்கு சென்று தனது மூன்றாம் நிலைக் கல்வியை ஆரம்பித்தார். ஆனால் அவர் தனது கூடுதலான நேரத்தை தலைமறைவு அரசியல் நடவடிக்கைகளிலேயே செலவிட்டார்.” அரவிந்த ‘ என்ற இயக்கப் பெயருடன் ஜே.வி.பி./ தேசப்பிரேமி ஜனதா வியாபாரயவுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். ஜே.வி.பி.யின் பல்வேறு அமைப்புக்களிடையே தகவல்களைக் கொண்டுசெல்லும் பணிகளை தூதருக்குரிய பணிகளை அவர் செய்தார்.ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் நீடித்தது. அதில் ஜே.வி.பி.யினாலும் பொலிசார், பரா இராணுவம் மற்றும் படைகள் மேற்கொண்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளினாலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அரசின் முகவர்களினால் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படைகளினாலும் அரசின் ஏனைய முகவர்களினாலும் கொல்லப்மட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் நம்பகமான மதிப்பீடுகள் கிடைக்கவில்லை எனினும் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ விபரங்கள் இருக்கின்றன.அந்த மூன்று வருட காலப்பகுதியில் 487 அரசாங்க சேவையாளர்கள், 342 பொலிஸ்காரர்கள், 209 பாதுகாப்பு படையினர், 16 அரசியல் தலைவர்கள் 4,945 குடிமக்கள் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையில் 30 பௌத்த பிக்குகள்,இரு கத்தோலிக்க மதகுருமார், 52 பாடசாலை அதிபர்கள், நான்கு மருத்துவர்கள், 18 பெருந்தோட்ட அத்தியட்சகர்கள் மற்றும் 27 தொழிற் சங்கவாதிகளும் அடங்குவர். அதில் 93 பொலிஸ்காரர்கள் மற்றும் 69 படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கூட அடங்குவர்.அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைஜே.வி.பி.யினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்துக்கு இணையாக அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் அமைந்தன. அரச பயங்கரத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் திசாநாயக்கவின் ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் அடங்குவார். சுனில் ஐயா கைதாகி சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தார். அரவிந்த என்ற திசாநாயக்க பேராதனையை விட்டு தப்பியோடி தலைமறைவானார். அவர் தேடப்படும் ஒருவராக இருந்தார். அரசியலில் ஈடுபாடு இல்லாத அவரின் குடும்பம் தங்களது மண்வீட்டில் இருந்து ஒரு எளிமையான கல்வீட்டுக்கு குடிபெயர்ந்தது. அரவிந்தவுக்கு ஒரு எச்சரிக்கையாக அரசின் முகவர்கள் அந்த வீட்டுக்கு தீவைத்துக் கொளுத்தியதாக கூறப்பட்டது.திசாநாயக்க மேராதனையில் கல்வியை இடையில் நிறுத்தி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றார். பெரிதாக வெளியில் தலைகாட்டாமல் அவர் இடத்துக்கு இடம் சென்று வந்ததாக ஜே.வி.பி. வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியே அவரது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான கட்டமாக இருந்தது. றோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட பெரும்பாலான சிரேஷ்ட ஜே.வி.பி. தலைவர்கள் பிடிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டனர். சிரேஷ்ட தலைவர்களில் சோமவன்ச அமரசிங்க மாத்திரமே உயிர்தப்பி இந்திய உதவியுடன் ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்றார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி முற்றுமுழுதாக நசுக்கப்பட்டதுகளனி பல்கலைக்கழகம்நிலைவரம் தணியத் தொடங்கியது. எந்தவிதமான தொடர்புமின்றி ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலமாக தலைமறைவாக இருந்த பிறகு திசாநாயக்க வெளியில் வந்து சமூகத்தில் மீண்டும் இணைந்துகொண்டார். ‘ அரவிந்தவின் ‘ அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வந்தது. திசாநாயக்க தனது கல்வியை மீண்டும் ஆரம்பித்தார். இந்த தடவை களனி பல்கலைக்கழகத்துக்கு மாற்றம் பெற்று அங்கு கல்வியை தொடர்ந்தார்.தலைவிதிஜே.வி.பி.க்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான நடவடிக்கைகளில் இருந்து தப்பிய திசாநாயக்கவுக்கு எதிர்காலத்தில் பெரிய ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கு விதி எழுதப்பட்டிருந்தது போன்று தோன்றியது. இதிகாசத்தில் வரும் பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து ஜே.வி.பி. வெளிக்கிளம்பியது. திசாநாயக்க படிப்படியாக உயர்ந்து ஜே.வி.பி.யினதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் தலைவராக வந்தார். தற்போது அவர் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. இடதுசாரித்தாரகை இலங்கை மேலாக எழுந்திருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.comஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்நன்றி: வீரகேசரி

அனுசரணை அரசியல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் அனுசரணை அரசியலின் சமகால வெளிப்பாட்டின் வேர்கள் கொலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்திலேயே காணப்படுகின்றன.  கொலனித்துவ தலையீடு மற்றும் நிர்வாகத்தால் கொலனித்துவத்திற்கு முந்தைய ஆதரவு உறவுகள் மாற்றப்பட்டன.